Thursday, November 21, 2024
Homeசிந்தனைகள்உங்கள் சிறுவர்களின் கற்றலைத் தூண்டும் , ஆர்வமூட்டும் Dialog Gaming

உங்கள் சிறுவர்களின் கற்றலைத் தூண்டும் , ஆர்வமூட்டும் Dialog Gaming

- Advertisement -

சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. சில விளையாட்டுகள் ஓடி ஆடுவது போல இருக்கும். இன்னும் சில விளையாட்டுகள் உட்கார்ந்த இடத்திலேயே விளையாடுவதாக இருக்கும். மேலும், சில விளையாட்டுகளில் இவை இரண்டும் கலந்தே இருக்கும். விளையாடும் குழந்தைகளின் ஆரவாரமான குரல்களால் அந்த இடமே களை கட்டி விடும். எங்காவது குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டுவிட்டாலே போதும். எல்லாக் குழந்தைகளும் அந்த இடத்தில் சங்கமமாகி விடுவார்கள். அந்தக் குரல்களுக்கு அப்படியொரு ஈர்ப்பு உண்டு.

- Advertisement -

சிறுவர் கற்றல்

குதூகலமான, ஆர்வமூட்டும் கற்கை வழிமுறைகள் சிறுவர்கள் கடினமான விடயங்களை இலகுவாக கற்றுக்கொள்ள எப்பொழுதும் உதவுகின்றன. பல்வேறு காரணங்களால் கேமிங் விமர்சிக்கப்பட்டாலும், சரியான அளவு நேரத்திற்கு கேமிங்கில் ஈடுபடுவது அவர்களுக்கு இளம் வயதிலேயே பிரச்சினைகளைத் தீர்ப்பது முதல் போட்டித் தன்மையை எதிர்கொள்ளல் வரை பரந்தளவிலான ஆற்றல்களை சுயமாக விருத்தி செய்ய உதவுகின்றது.

- Advertisement -

எமது வாழ்க்கைக்கு விளையாட்டு என்பது மிக முக்கியமானதொன்றாகும். விளையாட்டுகளை நாம் விளையாடுவதன் மூலம் அனுகூல நிலையை அடைகின்றோம். எமது உடலை ஆரோக்கியமாகவும், சக்திமிக்கதாகவும் இருக்க விளையாட்டுகள் எமக்கு உதவுகின்றன. பல்வேறு விளையாட்டுகள் மாணவர்களுக்காக காணப்படுகின்றன.சில விளையாட்டுகள் உள்ளகம், வெளியகம் என இரு பிரிவுகளாக நடைபெறுகின்றன. விளையாட்டுகள் சிறந்த மானிடப்பண்புகளை வளர்க்கின்றன. உதாரணமாக, தலைமைத்துவம், ஒற்றுமை, சமாதானம், வெற்றி, தோல்விகளை சமமாக ஏற்றுக்கொள்ளல் மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு என்பனவாகும். பாடசாலைகளில் மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் பொருட்டு இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பல்வேறு சந்தர்ப்பங்களில் விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. உதாரணமாக கிராம விழா, புதுவருட விழா, வெசாக் விழா மற்றும் தேசிய விழாக்கள் ஆகும். இவை குழுவாக விளையாடப்படுவன. விளையாடுவதன் மூலம் விளையாட்டு விதிமுறைகளை அறிந்திருக்கின்றோம்.

- Advertisement -

சில மாணவர்கள் மிகவும் சோம்பேறியாக இருக்கின்றனர். அவர்களுக்கு விளையாடுவதற்கு நேரமில்லை. காரணம் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்வதே ஆகும். சிலவேளைகளில் வகுப்பு முடிய இரவுமாகலாம். அப்போது மாணவர்கள் மிகக் களைப்பாக இருப்பார்கள். எனவே மாணவர்கள் கல்விக்கும், விளையாட்டுக்கும் நேரத்தை சரிசமமாக ஒதுக்க வேண்டும். விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும்.

 

Dialog Gaming வெவ்வேறு வயதுகளில் காணப்படும் சிறுவர்களுக்காக எமது நாட்டு பாடத்திட்டத்தின் தேவைகளுக்கேற்ப 18 சுவாரசியமான கேம்களை அறிமுகம் செய்திருப்பதோடு, இவை ஆங்கிலம், சிங்கள மொழிகளில் கிடைக்கின்றன.

சிறுவர் கற்றல்

  1. Lazer Chess

Dialog Gaming சிறுவர்களுக்கான போர்ட் கேமை மீளுருவாக்கம் செய்து ஒரு 3D புதிரை உருவாக்கியுள்ளது. Khetlazer Maze ஆராயும் திறனையும், கூர்மையான சிந்தனையையும் விருத்தி செய்கிறது. உயர் கட்டங்களை அடைவதற்காக சிறுவர்கள் அடிப்படை திரிகோண கணித சவால்களைத் தீர்த்தல் வேண்டும்.

  1. Drowning Bunny

எளிதான கேள்விகளுக்கு சரியான பதில்களை வழங்குவதன் மூலம் சிறுவர்கள் குழியொன்றில் பெய்யும் மழையை தடுத்து உள்ளே அகப்பட்டிருக்கும் முயலைக் காப்பாற்றுதல் வேண்டும். இளம் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கேம் பின்விளைவுகள், காரணம் மற்றும் விளைவு போன்றவற்றை கற்பிக்கிறது.

  1. Kids Quest

சிறுவர்கள் கல்விசார்ந்த, குதூகலமூட்டும் சாகசத் தொடரொன்றில் அழைத்துச் செல்லப்படுவதோடு, அதன்போது அவர்களுக்கு நாளாந்த செயற்பாடுகள் வழங்கப்படும். சிறுவர் வினாக்கள் நாளாந்த வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியமான பழக்கங்களை கற்றுத் தருவதோடு, கேமில் கற்றவற்றை பின்பு அவர்கள் வாழ்வில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.

சிறுவர் கற்றல்

  1. Colorabb

சிறுவர்கள் அடிப்படை வடிவங்கள், நிறங்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு முயல் ஒன்றுக்கு வழிகாட்டுதல் வேண்டும். கேள்விகளுக்கான ஒவ்வொரு சரியான பதிலுக்கும் பரிசாக நாணயங்கள் வழங்கப்படும். Colorabbமூன்று வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கானது. அத்துடன் அடிப்படை விடயங்களை சிறுவர்கள் சலிப்பில்லாமல் ஆர்வமாகக் கற்பதற்கு உதவுகின்றது.

  1. Science Quiz – தரம் 6

இது 6 ஆம் தர சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டிருப்பதோடு, கேள்விகள் எமது பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்த கேம் நுண்ணறிவை அதிகரிக்க உதவுவதோடு, விளையாடுபவர்களால் தமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையும் கேமிற்குள் இணைக்க முடியும். பலரை இணைக்க முடிவதனால் போட்டித் தன்மையுடன் ஆர்வமாக விளையாடலாம்.

  1. Science Quiz – தரம் 10

பரீட்சைத் தயார்படுத்தல்களை Dialog Gaming குதூகலமானதாக மாற்றியமைக்கிறது. இது விளையாடுபவர்கள் தங்கள் பாடங்களிலுள்ள விடயங்களை ஆர்வமூட்டும் விதமாக நினைவுபடுத்த உதவுகிறது. இவ்வாறான செயற்பாட்டு நினைவுபடுத்தல் கற்றல் முறைமை விளையாடுபவர்கள் பாடத்தை நினைவில் வைத்துக்கொள்வதை எளிதாக்குகிறது. The Science Quiz பாடங்களை மீட்டல் செய்வதற்கான ஆர்வமூட்டும் புதியதொரு வழிமுறையாகும்.

  1. Mind Match Game – தரம் 8

8 ஆம் தர மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, Mind Match உள்நாட்டு பாடத்திட்டத்திலுள்ள விடயங்களில் கவனம் செலுத்துகிறது. இந்த கேம் பல சுற்றுக்களைக் கொண்டதாக அமைந்திருப்பதோடு, ஒவ்வொரு சுற்றும் 10 வினாக்களை உள்ளடக்கியது. 80 புள்ளிகளை எட்டியதும் அடுத்த கட்டம் அன்லொக் செய்யப்பட்டு, தொடர்ந்து மேலும் சவாலான, ஆர்வமூட்டும் கேள்விகளை விளையாடுபவர் சந்தித்தல் வேண்டும்.

  1. True or False

அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முன் பத்து கேள்விகளில் எட்டுக்கு 15 – 30 செக்கன்களில் சரியாக விடையளிக்க வேண்டும். நேர எல்லை காரணமாக விரைவாக சிந்திக்கும் ஆற்றலை அதிகரிப்பதோடு, வெவ்வேறு கட்டங்களுக்கு முன்னேற வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தி கற்றலை ஊக்கப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  1. Batta

8 – 10 வயது சிறுவர்களுக்கான Battaகேம், 5 ஆம் தரத்துக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேவையான அறிவை வழங்குகிறது. மாணவர்களுக்கு பாடத்திட்டத்தின் தேவைகள் பற்றி ஆர்வமூட்டும் விதத்தில் அறியத் தருவதோடு, அவர்கள் கேமை தொடரும்போது நீண்ட, கடினமான கேள்விகளை சந்திப்பர்.

  1. Grammar Fun

Grammer Fun ஆனது 4CODES கேமிங்கால் உருவாக்கப்பட்ட சுவாரசியமான ஒரு ஆங்கிலக் கற்கை மொபைல் கேம் ஆகும். இது நீங்கள் சந்தோஷமாக ஆங்கிலம் கற்பதற்கும், உங்கள் அறிவை விருத்தி செய்வதற்கும் உதவும்.

  1. Smarty

கணிதப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆற்றல், நிறங்கள் மற்றும் ஒலிகளின் பயன்பாடு, பகுத்தறியும் ஆற்றல் என்பவற்றில் அவதானத்தைச் செலுத்துவதோடு, Smarty அப் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் சிறுவர்கள் கேமின் உயர் கட்டங்களுக்கு செல்ல அனுமதிக்கிறது. அவர்களின் அவதானத்தை அதிகரித்து அறிவைத் விருத்தியாக்க வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேம் அவர்கள் போட்டித்தன்மையுடன் கற்பதற்கு உதவுகிறது.

Dialog Gaming உடன் இன்றே இணைந்து உங்கள் பிள்ளைகளுக்கு வயதிற்கு பொருத்தமான, விளையாட இலகுவான, ஆர்வமளிக்கும் கேம்களை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் என மூன்று மொழிகளிலும் பெற்றுத் தாருங்கள். ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது கற்றல் ஆற்றல்களை அதிகரிப்பதை காண்பதோடு, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் மகிழ்ச்சிகரமான ஒரு கற்றல் நேரத்தை அனுபவியுங்கள்.

Google Playக்கு பிரவேசியுங்கள் Dialog Gaming Download செய்யுங்கள்

அல்லது

Dialog Gaming App ஐ டவுன்லோட் செய்யுங்கள்

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.