Thursday, November 21, 2024
Homeகல்விஐந்து சிறுவர் சிறுகதைகள்

ஐந்து சிறுவர் சிறுகதைகள்

- Advertisement -

sirukathai_சிறுகதை

- Advertisement -

1.எல்லாம் நன்மைகே

ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே! ஏன்று செல்லுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருநாள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது மாம்பழம் ஒன்றை கத்தியால் அறுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை அறுத்துவிட்டது. வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான். வழக்கம் போல் அமைச்சர் எல்லாம் நன்மைக்கே! ஏன்றான். இதைக் கேட்டு கோபமடைந்த அரசன் நான் விரல் வெட்டுப்பட்டு துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று செல்கிறய்.
காவலர்களே அமைச்சரை சிறையில் கொண்டுப்போய் அடையுங்கள். அப்போதும் அமைச்சர் எல்லாம் நன்மைக்கே! ஏன்றார் நாட்கள் பல கடந்தன. வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாக காட்டிற்குச் சென்றன். அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனை தேடிக் கெண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான். அங்கு வந்த கோவில் பூசாரி அரசனை முழுமையாக சோதித்தான் பின்பு காளிக்க எந்குறையும் இல்லாதவனை மட்டுமே பலிகொடுக்க முடியும்.
இவனோ சுண்டு விரல் பாதியாக உள்ளவன். இவனை விட்டு விடுவோம் என்றான். அரசன் அரன் மனைக்கு வந்ததும் உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தர விட்டான். நுடந்ததையெல்லாம் அமைச்சரிடம் சென்ன அரசன்  சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே என்று சொல்லியதன் உண்மையை அறிந்தேன் என்றான்.
அரசே என்னை நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. எப்போதும் உங்களை பிரியாதிருக்கும் நான் சிறையில் அடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலை வாசிகள் எந்தக் குறையும் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டிருப்பார்கள். நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன் என்றார் அமைச்சர்.

- Advertisement -

நீதி :- எது நடந்தாலும் நல்லதையே நினைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

 2.அவரை அரசவை விகடகவியாகுதல் 

sirukathai_சிறுகதை
ஒரு நாள் கிருஷ்ண தேவராயரரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞ்சர் பெரு மக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் கூடியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தார்.
மன்னர் கிருஷ்ண தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேறு வந்த தத்துவ ஞானியைப் பார்த்து விழாவைத் தொடக்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சென்றார். தத்துவ ஞானி இறுதிலில் மாய தத்துவம் பற்றிபேசினார். அதாவது நம் கண்ணால் காண்பது மாயை உண்பதும் மரயை என்று சொன்னார். தென்னாலிராமன் எழுந்து நின்று  ஐயாநாம் உண்பதற்கும் உண்கதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா? என்றார்.
வித்தியாசம் இல்லை என்றர். அதை சோதிக்க தென்னாலிராமன் அரசரிடம் விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சென்னார். விருந்து ஏற்படு ஆயிற்று. அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர். துத்துவ ஞானிக்கு உணவு பரிமாரியும் சாப்பிடக்கூடாது என கட்டளையிட்டனர்.

தத்துவ ஞானிதன் தவறை உணர்ந்தனர். இதைப் பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையை பாராட்டி பரிசலித்து அன்றிலிருந்து அவரை அரசவை விகடகவி ஆக்கினார்.

3.ஒட்டகத்திற்கு நேர்ந்த கவலை
குறள்:மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையினாள்.
விளக்கம்: ஒருவனுடை சோம்பலில் மூதேவி வாழ்கிறள் சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கிறாள்.

கதை
ஒருஒட்டகம் காட்டில் தவம் மேற்கொண்டிருந்தது. அந்த தவத்தின் பெருமையை உணர்ந்த பிரம்ம தேவர் ஒட்டகத்திற்கு காட்சியளித்தார் என்ன வரம் வேண்டும்? என்றுகேட்டார் இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே உணவைப் பெரும் வகையில் என் கழுத்து நீண்டதாக இருக்க வேண்டும். அந்த நீளமான கழுத்தோடு நான் காட்டில் உலாவரவேண்டும் என்றுகேட்டது. ஆவ்வாறே பிரம்ம தேவர் வரமளித்தார். அந்தவரத்தை பெற்றபின் ஒட்டகம் உணவிற்காக அதிகம் முயற்சிக்கவில்லை. நீண்ட கழுத்துடன் எங்கும் திரிந்தது. உணவு எளிதாகக் கிடைத்தது. இதனால் சேம்பல் உற்றது ஒட்டகம்.
ஒருநாள் ஒட்டகம் அப்படி உளாவிக்கொண்டிருந்த போது பெருங்காற்று வீசியது.
மழைபெய்தது. அறிவற்ற அந்த ஒட்டகம் தன் தலையை ஒரு குகையில் நீட்டிக் கொண்டிருந்தது. அந்தநேரத்தில் மழைக்குப் பயந்துதன் மனைவியுடன் ஒரு நரி குகைக்குள் நுழைந்தது.
குளிராலும் பசியாலும் வாடிய நரித்தம் பதிக்கு மிகப்பெரிய வாய்ப்பாக ஒட்டகத்தின் கழுத்து உணவாக அமைந்தது. ஒட்டகத்தின் இரு புறமும் இருந்துக் கொண்டு நரிகள் வேண்டிய அளவு மாமிசத்தை ருசித்தன. தனக்கு நேர்ந்த ஆபத்தை உணர்ந்த ஒட்டகம் தனது கழுத்தை சுருக்க அரும்பாடுபட்டது. ஆதற்குள் நரிகள் ஒட்டகத்தின் கழுத்துப் பகுதி முழுவதும் சாப்பிட்டு விட்டன. ஓட்டகம் மாண்டு போலிற்று.
நீதி : சோம்பல் சிலசமயம் உயிருக்கு ஆபத்தாக மாறி விடவாய்ப்புக்கள் அதிகம்
உள்ளது.

4.அக்பர் பீர்பால் கதைகள்
புகையிலை போடும் பழக்கம் பீர் பாலுக்கு இருந்தது. முன்னர் எவ்வளவு சொல்லியும் பீர்பாலினால் புகையிலை பழக்கத்தை விட முடியவில்லை. மூத்த அமைச்சர் ஒருவருக்கு பீர்ப்பால் புகையிலை போடுவது சுத்தமாக பிடிக்கவில்லை. இதற்காக சந்தர்ப்பம் பார்த்து பீர்பாலை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.
அந்த நாளும் வந்தது மன்னரும் மூத்த அமைச்சரும் காற்றௌட்டமாக அரண்மனைத் தோட்டத்தில் உலவியவாறு உரையாடிக் கொண்டிருக்கும் வேலையில் மூத்தஅமைச்சர் அந்த அரண்மனைத் தோட்டத்தின் வேலியோரத்தில் ஒருபுகையிலைச் செடிதானாக முளைத்து இருப்பதைப் பார்த்தார்.
அப்பொழுது அந்த வழியாகவந்த கழுதை ஒன்று புகையிலை சாப்பிட எண்ணி இலையில் வாயை வைத்தது. அதன் காரமும் மணமும் பிடிக்காமல் சென்றுவிட்டது.
உடனே மூத்த அமைச்சர் சிரித்துக்கொண்டே பாருங்கள் மன்னா! பீர்பாலுக்கு பிடித்த இந்த புகையிலையை கேவலம் ஒரு கழுத்தைக்குக் கூட பிடிக்கவில்லை. என்றார்.
உடனேபீர்ப்பால் சிரித்துக் கொண்டே புகையிவை எனக்கு மிகவும் பிடித்தப்பொருள். ஆனால் கழுதைக்குத்தான் புகையிலையை பிடிக்கவில்லை! என்றார். பீர்ப்பால் தனதுவாக்கு வன்மையால் அந்த மூத்த அமைச்சரின் மூக்கை உடைத்தார்.

நீதி :- ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்க வேண்டும் என்றுகட்டயம் ஒன்றும் இல்லை.

5.எடைப்போடும் தராசு

sirukathai_சிறுகதை
ஒரு நான் ஜென் துற விஒருவர் ரேடியோவில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார் அப்போது அந்த துறவியை ஒருவர் பார்க்க வந்தார். யாருடைய பாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? என்றார். குரலைக் கேட்டால் தெரிய வில்லையா? என்று சிரித்தார் ஜென் துறவி. பின்னர் அந்தபாடகரின் பெயரை சென்னார் அவரா?அந்த ஆள் சரியான தண்ணிப் பாட்டியாச்சே. விஸ்கி வாசம் இல்லாம மேடை ஏறமாட்டாராமே? அவருடைய குரல் அற்புதமாக இருக்கு. இது நமக்குப் போதாதா? ஏன்றர் ஜென் துறவி.
சிறிது நேரம் கழித்த இன்னொருவர் இதே ஜென் துரவியை பார்க்க வந்தார். ரேடியோவில் கேட்டுக்கொண்டிருக்கிற குரலை கேட்டவுடன் சட்டென்று அந்தப் பாடகரின் பெயரைச் சொல்லி அவர்தானா? என்று விசாரித்தார். அவரேதான் உங்களுக்கு அவரை பிடிக்குமா? ரொம்ப படிக்கும்! என்றர் அவர். இனிமையான குரல். ஓவ்வெரு பாட்டையும் அனுபவித்துப்பாடுவார். அவர் மிகப்பெரிய திரமைசாலி! ஆதெல்லாம் போகட்டும் ஆனா அந்தாள் சரியான தண்ணிப் பாட்டியாமே! என்று அவரைப் பார்த்துக்கேட்டார் ஜென் துறவி. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சீடனுக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டது.
ஜென் துறவி தனியாக இருக்கும் போது ரகசியமாக கேட்டான் அந்த சீடன் குருவே முதல் ஆள் அந்தப்பாடகரை குடிகாரர் என்று சொன்னப் போது நீங்கள் அவருடைய திறமையை பராட்டிப்பேசினீர்கள். ஆனால் இரண்டாவது ஆள் அவருடைய திறமையைப் புகழ்ந்தப் போது இவர் குடிகாரர் என்று அவமானப்படுத்தி பேசி நீர்கள் இது என்னநியாயம்? ஏன்று கேட்டான். ,அதற்கு குரு மௌனமாக சிரித்தார். காய்கரிகளை எடைப்போடுவது கடைக்காரனின் வேலை. ஆந்ததராசில் மனிதர்களை ஏற்றி நிறுத்தினால் உடைந்துவிடும் என்றார். இதனால் தான் யார் யாரை எடைப்போட்டாலும் நான் குறுக்கிட்டு ஏதாவது பேசிஅந்த விமர்சனத்தை நேர் செய்து விடுகிறேன். சீடன் குரு கூறிய பதிலை கேட்டு மெய் சிலிர்த்துப் போனான். சீடன் குருவைப் பார்த்து குருவே நீங்கன் பெரிய மேதை என்றான். சரி போய் உன் வேலையைப் பார் என்றார் ஜென் துறவி.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.