மிகவும் எளிமையாக காகிதப் வட்டங்களை கொண்டுசெய்ய கூடிய அலங்கார பொருளைப் பார்ப்போம்
தேவையான பொருட்கள்
1.நிற காகிதங்கள் – 10
2.கத்தரிக்கோல் – 01
3.வட்டவாரி – 01
4.பென்சில் – 01
5.அடி மட்டம் – 01
6.பசை (டிiனெநச பரஅ) – 01
7.காட்போட் அட்டை- 01
8.துளையிடக் கூடிய ஊசி – 01
9.தொங்கவிட கூடியபலமான நூல் – 02
10.நூல் – தேவையானஅளவு
11.முத்துக்கள் – தேவையான அளவு
12.மின் குழிழ் – 01
முதலில் நிற காகிதம் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். அதனை 5 சம பகுதிகளாக மடித்துக்கொள்ளவும். அதில் சிறிய போத்தில் மூடி அளவிலான அழகிய வட்டம் சிலவற்றை வரைந்து வெட்டிக் கொள்ளவும்.அவ்வாறே மேலும் சில நிற காகிதங்களை மேல் கூறப்பட்டவாறு மடித்து பின்னர் நேர்த்தியாக வெட்டிக்கொள்ளவும். இவ்வாறு தேவையான அளவு சிறிய வட்டங்களை வெட்டிக்கொள்ளவும். பின்னர் ஓர் நீளமான தையல் ஊசி ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதில் நிற நூல் ஒன்றை உள்ளிட்டு கோர்க்கவும் பின்னர் இறுதியில் முடிந்து கொண்டு கோர்த்த நிற நூலின் அடியில் ஓர் முத்தை கோர்க்கவும்.
அந்த முத்தானது கழறாதவாறு இறுக்கமாக முடிந்துகொள்ளவும், முதலில் படத்தில் காட்டியவாறு நூலின் கீழ் புறத்தில் வெட்டிய வட்டங்களை நன்கு ஒட்ட கூடிய பசையின் மூலம் ஒட்டிக்கொள்ளவும். அதன் பின் ஒட்டிய வட்டத்திற்கு மேற் புறமாக நூலை மறைக்க கூடிய வகையில் அவற்றினையும் நேர்த்தியக ஒட்டிக்கொள்ளவும். இவ்வாறாக முதலில் 36 சென்ரி மீற்றர் நீளமுடைய நூலில் மேல் கூறப்பட்ட முறையில் வட்டங்களை வெட்டிக்கொண்ட பின் அவ்வாறே 30 சென்ரி மீற்றர் நீளமுடைய நூலில் மேல் கூறப்பட்ட முறையில் வட்டங்களை நேர்த்தியாக ஒட்டிக்கொள்ளவும். அத்துடன் மேலும் 24செ.மீ நீளமுடைய நூலில் மேல் கூறப்பட்ட முறையில் வட்டங்களை ஒட்டிக்கொள்ளவும். அத்துடன் மேலும் 18 சென்ரி மீற்றர்நீளமுடைய நூலில் மேல் கூறப்பட்ட முறையில் வட்டங்களை ஒட்டிக்கொள்ளவும். மேலும் 12 சென்ரி மீற்றர் நீளமுடைய நூலில் மேல் கூறப்பட்ட முறையில் வட்டங்களை ஒட்டிக்கொள்ளவும். மேலும் 6 சென்ரி மீற்றர் நீளமுடைய நூலில் மேல் கூறப்பட்ட முறையில் வட்டங்களை ஒட்டிக்கொள்ளவும்.
ஓர் காட்போட் அட்டையில் 44 சென்ரி மீற்றர் விட்டமுடைய வட்டம் ஒன்றை வரைந்து வெட்டிக்கொள்ளவும். வெட்டிய வட்டத்திற்கு மேலே ஓர் நிற காகிதத்தைக் கொண்டு முழுவதுமாக சுற்றி ஒட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அவ் வட்டத்தின் விளிம்புகளை சுற்றி ஒட்டிவிடவும். பின்னர் மேலும் ஓர் 38 சென்ரி மீற்றர் விட்டமுடைய வட்டம் ஒன்றை வரைந்து கொள்ளவும். அவ்வாறே மேலும் ஓர் 32 சென்ரி மீற்றர் விட்டமுடைய வட்டம் ஒன்றை வரைந்து கொள்ளவும்.மேலும் ஓர் 26 சென்ரி மீற்றர் விட்டமுடையவட்டம் ஒன்றை வரைந்து கொள்ளவும். மேலும் ஓர் 20 சென்ரி மீற்றர் விட்டமுடையவட்டம் ஒன்றை வரைந்து கொள்ளவும். மேலும் ஓர் 14 சென்ரி மீற்றர் விட்டமுடையவட்டம் ஒன்றை வரைந்து கொள்ளவும். மேலும் ஓர் 8 சென்ரி மீற்றர் விட்டமுடையவட்டம் ஒன்றை வரைந்து கொள்ளவும். பின்னர் அக் கோட்டின் வழியே 6 சென்ரி மீற்றர் அளவிலான புள்ளிகளை குறித்துக் கொள்ளவும். குறித்த புள்ளிகளை ஓர் ஊசிகொண்டு துளையாக ஏற்படுத்திக் கொள்ளவும்.
ஏற்படுத்திய துளைகளினுடாக முதலில் செய்து வைத்த வட்டம் ஒட்டிய நூல்களை அவற்றின் நீளத்திற்கு அமைய முதலில் 8 சென்ரி மீற்றர் விட்டமுடைய வட்டத்தில் அதிக நீளமுடைய நூலினையும் 14 சென்ரி மீற்றர் விட்டமுடைய வட்டத்தில் அதற்கு அடுத்த நீளம் கொண்ட நூலினை இருக்கமாக கட்டிக்கொள்ளவும். மேலும் 20 சென்ரி மீற்றர் விட்டமுடையவட்டத்தில் அதற்கு அடுத்த நீளம் கொண்ட நூலினை இருக்கமாக கட்டிக்கொள்ளவும். 26 சென்ரி மீற்றர் விட்டமுடையவட்டத்தில் அதற்கு அடுத்த நீளம் கொண்ட நூலினை இருக்கமாக கட்டிக்கொள்ளவும்.இ 32 சென்ரி மீற்றர் விட்டமுடைய வட்டத்தில் அதற்கு அடுத்த நீளம் கொண்ட நூலினை இருக்கமாக கட்டிக்கொள்ளவும்.இ 38 சென்ரி மீற்றர்,விட்டமுடைய வட்டங்களிலும் நூல்களின் நீளத்திற்கு ஏற்ப கட்டிய பின்னர் நூல் கட்டிய மேற் புறத்தை மறைப்பதற்காக ஓர் நிற காகிதத்தினால் நன்றாக சுற்றி ஒட்டிவிடவும். பின்னர் அவ் வட்டத்தின் 4 முனைகளில் துளையிட்டு 4 நூல்களின் உதவியுடன் ஒன்றாக படத்தில் காட்டியவாறு கட்டிக்பொள்ளவும். பின்னர் அதை மேலும் அழகு படுத்த விரும்பின் வட்டத்தின் மேற் புறமாக 8 சென்ரி மீற்றர் வட்டத்தின் நடுவில் துளையிட்டு ஓர் மின் குமில் பூட்டுவதற்கான வயர் ஒன்றை மேலிருந்து கீழாக வட்டத்தின் உள்ளே உட்செலுத்திக் கொள்ளவூம்.
மின் குமிழை உட் புறமாக வட்டங்களுக்கு இடையில் விழாதவாறு இருக்கமாக பூட்டிக்கொள்ளவும். மின் குமிழின் switch on செய்யும் போது நீங்கள் செய்த பூ உருவம் மிகவும் அழகாக காட்சியளிக்கும். இரவு வேளைகளில் மேலும் அழகாக தென்படும்.
இப்பொழுது கூரையில் தொங்க விடுவதற்கான அழகிய அலங்கார பொருள் தயாராகி விட்டது. இதனைஉங்கள் வீடுகளின் மேல் புறத்தில் தொங்கவிட்டுக் கொள்ளுங்கள்.