Sunday, September 15, 2024
Homeசிந்தனைகள்சிறுவர் ஆக்கம்காகிதக் குழாய்களை கொண்டு செய்யக் கூடிய அலங்காரப் பொருள்

காகிதக் குழாய்களை கொண்டு செய்யக் கூடிய அலங்காரப் பொருள்

- Advertisement -

கைவினை ஆக்கம்

- Advertisement -

சிறுவர்களின் கற்றல் செயற்பாடுகலில் தற்போது  கைவினை ஆக்கங்களே முக்கியத்துவம் பெறுகின்றன.அந்த வகையில்  அன்றாடம் பயன்படுத்துகின்ற பொருட்களின் கழிவுகளை பயனுள்ளதாக்கும்  வகையில் ஒய்வு நேரங்களில் பாயனுள்ள நுட்பங்களை வெளிப்படுத்த முடியும்

பிரதானமாக இவற்றை செய்கின்ற போது எந்தவிதமான செலவூகளும் ஏற்பட போவதில்லை அத்துடன் அவற்றை அழகிய உருவாங்களாக நிற வர்ணங்களால் வடிவமைத்து அதனை மெருகூட்டி பொதிகள் செய்வதன் மூலம் விற்பனை செய்யலாம் இங்கு மூலப்பொருளோ அல்லது செலவோ இல்லை அனால் உற்பதத்தியில் வருமானம் உண்டு

- Advertisement -

ஆகவே சிறுவர்களுக்கு தேவையான ஆக்கங்களை செய்வதற்கு ஊக்கப்படுத்துவதோடு ஒய்வு நேரங்களில் வருமானத்தை ஈட்டும் வழிமுறைகளையும் கற்றுக்கொடுங்கள் அவையே அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே சேமிக்கு எண்ணத்தையூம் கைதொழில் நுட்ப சிந்தனைகளையூம் வளர்த்தேடுக்கும் என்பதே உண்மை.

- Advertisement -

மிகவும் எளிமையாக காகிதப் குழாய்களை கொண்டுசெய்ய கூடிய அலங்கார பொருளைப் பற்றி பார்ப்போம்.

தேவையானபொருட்கள்
1.நிறகாகிதங்கள் – 10

2.கத்தரிக்கோல் – 01

3.வட்டவாரி – 01

4.பென்சில் – 01

5.அடி மட்டம் – 01

6.பசை (binder gum) – 01

7.காட்போட் அட்டை- 01

8.துளையிடக் கூடிய ஊசி – 01

9.தொங்கவிட கூடிய பலமான நூல் – 04

10.நுhல் – தேவையானஅளவு

11.முத்துக்கள் – தேவையானஅளவு

கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம்
கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம்

முதலில் நிற காகிதம் (ரோஸ்) ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அக் காகிதத்தில் 12 செ.மீ விட்ட முடைய வட்டத்தை வரைந்து வெட்டிக் கொள்ளவும். வெட்டிய வட்டத்தை இரண்டாக மடித்து அவ் மடி கோட்டின் வழியே அதனை பாதி பாதியாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய பாதி வட்டத்தினை குழாய் போன்ற வடிவில் மடித்து ஒன்ரோடு ஒன்றை பசை பூசி ஒட்டிக் கொள்ளவும்.இவ்வாறாக ஒர் நிற காகிதத்தில் (ரோஸ்)3 குழாய்களையும் இன்னுமோர் நிற காகிதத்தில் (இளம் ரோஸ்) 6 குழாய்களையும் வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதன் பின் ஓர் நீளமானதையல் ஊசி ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதில் நிற நூல் ஒன்றை கோர்க்கவும். இறுதியில் முடிந்து கொள்ளவும். கோர்த்த நிற நூலின் அடியில் ஓர் முத்தை கோர்க்கவும். அது கழறாதவாறு இறுக்கமாக முடிந்து கொள்ளவும். அதன் பின் மேலே கூறியவாறு செய்து வைத்திருந்த குழாய் வடிவ உருக்களில் ஒன்றை அதனுள் கோர்த்து விடவேண்டும்.குழாய் வடிவ உரு கழறாதவாறு அதன் உட்புறத்தில் நன்றாக பசை பூசி ஒட்டி விடவும்.

கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம்
கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம்

அவ்வாறே சிறிது தூர இடைவெளிகளில் ஒவ்வொரு முத்துக்களாக கட்டி ஒவ்வொரு குழாய்களாக கோர்த்து விடவும். இவ்வாறே முதலில் ஓர் நிறகாகிதத்தில் (ரோஸ்)வெட்டிய3 குழாய்களை ஆரம்பத்திலும் ஓர் நிற காகிதத்தில் (இளம் ரோஸ்) வெட்டிய மூன்று குழாய்களை இறுதியிலுமாக மொத்தம் 9 குழாய்களை கோர்க்கவும்.கட்டிய பின் தையல் ஊசியை கழட்டிவிடவும். தொங்க விடுவதற்கு ஏற்றவாறு சிறிதளவு நூலை விட்டு விடவும்.இவ்வாறாக மொத்தம் 4 குழாய்களை கட்டிய நூல்களை தயாரித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பின்னர் மேலே குறிப்பிட்டவாறு சிறிது தூர இடைவெளிகளில் ஒவ்வொரு முத்துக்களாக கட்டி ஒவ்வொரு குழாய்களாக கோர்த்து முதலில் ஓர் நிற காகிதத்தில் வெட்டிய மூன்று குழாய்களை ஆரம்பத்திலும் ஓர் நிற காகிதத்தில் வெட்டிய மூன்று குழாய்களை இறுதியிலுமாக மொத்தம் 6 குழாய்களை கோர்க்கவும். கட்டிய பின் தையல் ஊசியை கழட்டிவிடவும். தொங்க விடுவதற்கு ஏற்றவாறு சிறிதளவு நூலை விட்டு விடவூம் இவ்வாறாகமொத்தம் 6 குழாய்களை கட்டிய நூல்களை தயாரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் இரு நிற காகிதங்களில் (ரோஸ்,வெள்ளை)சிறிது தூர இடைவெளிகளில் ஒவ்வொரு முத்துக்களாக கட்டி ஒவ்வொரு குழாய்களாக கோர்த்த ஓர் நிற காகிதத்தில் வெட்டிய மூன்று குழாய்களை கோர்க்கவும்.கட்டிய பின் தையல் ஊசியை கழட்டிவிடவும். தொங்க விடுவதற்கு ஏற்றவாறு சிறிதளவு நூலை விட்டு விடவும். இவ்வாறாக மொத்தம் 12 குழாய்களை கட்டிய நூல்களை தயாரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம்
கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம்

ஓர் மொத்தமான காட்போட் அட்டை ஒன்றைஎ டுத்துக் கொள்ளவும்.அதில் வட்டவாரி உதவியுடன் 44செ மீ விட்டமுடைய வட்டம் ஒன்றை வரைந்து வெட்டிக்கொள்ளவும்.வெட்டிய அவ்வட்டத்தினை மேலும் அழகுபடுத்துவதற்கு அதன் மேலே நீங்கள் விரும்பியவாறு ஓர் நிற காகிதத்தைக் கொண்டு முழுவதுமாக சுற்றிபசை பூசி கழறாதவாறு ஒட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அவ் வட்டத்தின் விளிம்புகளை சுற்றி நிற காகிதத்தினாலோ லேஸ்சினாலேயோ கழறாதவாறு ஒட்டிவிடவும். பின்னர் மேலும் ஓர் 38செ மீ விட்டமுடைய வட்டம் ஒன்றைஅ தன் மேல் வரைந்து கொள்ளவும். அவ்வாறே மேலும் ஓர் 25 செ.மீ.விட்டமுடைய வட்டம் ஒன்றை அதன் மேல் வரைந்து கொள்ளவும்.மேலும் ஓர் 12செ.மீ.விட்டமுடைய வட்டம் ஒன்றை அதன் மேல் வரைந்து கொள்ளவும். பின்னர் அக் கோட்டின் வழியே 6செ.மீ நீள அளவிலானபுள்ளிகளை குறித்துக்கொள்ளவும்.

கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம்
கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம்

குறித்த புள்ளிகளை ஓர் ஊசி கொண்டு துளையாக ஏற்படுத்திக்கொள்ளவும். ஏற்படுத்திய துளைகளின் ஊடாக முதலில் 12 செ.மீ விட்டமுடைய வட்டத்தில் ஏற்படுத்திய துளைகளில் முதலில் செய்த 9 குழாய்களைக் கொண்ட நூலினை இருக்கமாக கட்டிக்கொள்ளவும். பின்னர் 25செ.மீ விட்டமுடைய வட்டத்தில் ஏற்படுத்திய துளைகளில் இரண்டாவதாக செய்த குழாய்களைக் கொண்ட நூலினை இருக்கமாக கட்டிக்கொள்ளவும். பின்னர் 38செ.மீ.விட்டமுடைய வட்டத்தில் ஏற்படுத்திய துளைகளில் இறுதியாக செய்த குழாய்களைக் கொண்ட நூலினை இருக்கமாக கட்டிக்கொள்ளவும். கட்டிய பின்னர் நூல் கட்டிய மேற்புறத்தை மறைப்பதற்காக ஓர் நிற காகிதத்தினால் நன்றாக சுற்றி ஒட்டி விடவும். பின்னர் அவ் வட்டத்தின் 4 முனைகளில் துளையிட்டு 4 நூல்களின் உதவியுடன் ஒன்றாக படத்தில் காட்டியவாறு கட்டிக்கொள்ளவும். பின்னர் மீண்டும் நிற காகிதம் ஒன்றை எடுத்து அக் காகிதத்தில் 12 செ.மீ விட்டமுடைய வட்டத்தை வரைந்து வெட்டிக் கொள்ளவும். வெட்டிய வட்டத்தை இரண்டாக மடித்து அவ் மடி கோட்டின் வழியே அதனை வெட்டிக்கொள்ளவும். வெட்டிய பாதி வட்டத்தினை குழாய் வடிவில் மடித்து ஒன்ரோடு ஒன்றை பசை பூசி ஒட்டிக்கொள்ளவும்.இதனைபடத்தில் உள்ளவாறு கட்டிக்கொள்ளவும்.

கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம்
கைவினை ஆக்கம் கைவினை ஆக்கம்

இப்பொழுது தொங்க விடுவதற்கான அழகிய குழாய் உருவம் உங்கள் கைகளில் இருக்கும்.இப்பொழுது பிரமிட் உருவில் மிகவும் அழகான கூரையில் தொங்க விடுவதற்கான அலங்கார பொருள் தயாராகி விட்டது.உங்கள் வீடுகளில் இவ்வாறான ஆக்க வேலைகளை தொங்கவிடுவதனால் உங்கள் வீடு மிகவும் அழகாக காட்சியளிக்கும் அத்துடன் உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர் அவற்றை பார்த்து உங்களின்  ஆழ்ந்த அறிவு திறமையினை  கண்டும் வியப்படைவர் உங்களின் சிறுவர்களுக்கும் புதிய சிந்தனை ஆற்றல் வளரும் அவர்கள் இன்னும் புதிய நுட்பங்களை தேடிப்பெற்றுக்கொள்வார்கள் எனவே இவ் குழாய் உருவத்தை தொங்கவிடவும்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.