Sunday, January 19, 2025
Homeசிந்தனைகள்சிறுவர் கழிவு பொருள் கடிகார அலங்காரங்கள்

சிறுவர் கழிவு பொருள் கடிகார அலங்காரங்கள்

- Advertisement -

தேவையானபொருட்கள்
1.பசை – 01
2.தேக்கரண்டி – 48
3.வர்ணம் தெளிப்பான் – (கறுப்பு) தேவையான அளவு
4.கத்தரிகோல் – 01
5.நிறமுத்து – தேவையான அளவு
6.சைனீஸ் முள்ளு கரண்டி – தேவையான அளவு
7.கடிகாரம் – 01
8.கொழுக்கி – 01

- Advertisement -
சிறுவர் கழிவு பொருள் கடிகார அலங்காரங்கள் 1 சிறுவர் ஆக்கம் சிறுவர் ஆக்கம் சிறுவர் ஆக்கம்
சிறுவர் ஆக்கம் சிறுவர் ஆக்கம் சிறுவர் ஆக்கம் சிறுவர் ஆக்கம்
சிறுவர் ஆக்கம் சிறுவர் கழிவு பொருள் கடிகார அலங்காரங்கள் 2 சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம்

முதலில் ஓர் தேக் கரண்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் கை பிடியை முழுவதுமாக வெட்டி அகற்றி விடுங்கள். பின்னர் அக் கை பிடி அற்ற தேக் கரண்டியின் இரு முனைகளையும் வெட்டி அதனை கூர் வடிவ உருவாக எடுத்து கொள்ளுங்கள். இவ்வாறாக மொத்தம் 48 தேக்கரண்டிகளை சரி செய்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அலங்கரிக்க விரும்பும் வட்ட வடிவ கடிகாரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதனை பின் புறமாக திருப்பி தேக்கரண்டிகளை தாங்கி நிற்க கூடிய நீளமான குழாய்கள் நமக்கு தேவை எனவே நாம் சைனா முள்ளு கரண்டிகளையோ இல்லை காகிதத்தில் சுருட்டிய காம்புகளையோ பயன்னடுத்தி கொள்ளலாம். பின்னர் வட்ட கடிகாரத்தை சுற்றி தேக் கரண்டிகளை நீங்கள் விரும்பியவாறு அதாவது நான் இங்கு முதலில் இரண்டு தேக்கரண்டிகளும் இரண்டு முத்துக்களும் இரண்டாவதாக ஒரு தேக்கரண்டியும் ஒரு முத்துமாக மூன்றாவதாக இரண்டு தேக்கரண்டிகளும் இரண்டு முத்துக்களுமாக அடுக்கியுள்ளவாறு நீங்களும் இக் கடிகாரம் எவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அவ்வாறே அடுக்கிவிடுங்கள். அடுக்கிய பின் முள்ளு கரண்டிகளை எடுத்து கடிகாரத்திற்கும் முதலாவதாக அடுக்கிய இரண்டு தேக்கரண்டிகளில் இறுதி தேக் கரண்டிவரை அளந்து முள்ளு கரண்டியின் நீளம் அதிகமாயிருந்தால் அதனை இறுதி தேக் கரண்டியின் அளவுக்கு ஏற்ப வெட்டி கொள்ளுங்கள்.

சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம்
சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம்

பின்னர் கடிகாரத்திற்கும் இரண்டாவதாக அடுக்கிய தேக்கரண்டியின் இறுதி வரையும் அளந்து முள்ளு கரண்டியின் நீளம் அதிகமாயிருந்தால் அதனை இறுதி தேக் கரண்டியின்  அளவுக்கு ஏற்ப வெட்டி கொள்ளுங்கள். பின்னர் முதலாவதாக வெட்டியதில் 16 பெரிய முள்ளு கரண்டிகளையும் இரண்டாவதாக வெட்டியதில் 16 சிறிய முள்ளு கரண்டிகளையும் அளந்து வெட்டி கொள்ளுங்கள்.கடிகாரத்தின் நான்கு முனைகளிலும் முள்ளு கரண்டிகளை ஒட்டுவதன் மூலமாகவே நாம் நேர்த்தியான வட்ட வடிவ அலங்காரத்தை பெற முடியும்.எனவே முதலில் கடிகாரத்தின் கீழ் புறமாக ஒரு பெரிய முள்ளுகரண்டியும் கடிகாரத்தின் மற்றைய பக்கத்தில் ஒரு பெரிய முள்ளு கரண்டியையும் படத்தில் காட்டியுள்ளவாறு நன்றாக பசை பூசி ஒட்டிவிடவும். பின்னர் அவற்றின் நடுவே மூன்று பெரிய முள்ளு கரண்டிகளை ஒட்டி விடவும். பின்னர் அவை ஒவ்வொன்றுக்கும் நடுவே படத்தில் காட்டியுள்ளவாறுப் சிறியப் முள்ளு கரண்டிகளை இடை இடையே ஒட்டி விடுங்கள். பின்னர் எஞ்சிய முள்ளு கரண்டிகளையும் அவ்வாறே பெரிய முள்ளு கரண்டி சிறிய முள்ளு கரண்டி என மாற்றி மாற்றி ஒட்டி விடுங்கள். ஒட்டிய பின் தேக் கரண்டிகளை ஆரம்பத்தில் அடுக்கிய வரிசைப் படி ஒட்டி விடுங்கள். ஒட்டிய பின் கறுப்பு நிற வர்ணம் தெளிப்பான் கொண்டு முழுவதுமாக படத்தில் உள்ளவாறு வர்ணம் பூசி கொள்ளவும். வர்ணம் பூசிய பின் வெள்ளை நிற முத்துக்களை கொண்டு ஒவ்வொரு தேக்கரண்டிக்கும் முன்னாக ஒட்டி விடுங்கள்.பின் புறமாக கொழுக்கி ஒன்றினை ஒட்டவும். இப்பொழுது அழகான அலங்கார கடிகாரம் தயாராகி விட்டது.

- Advertisement -

தேவையான பொருட்கள்
1.கார்போட் அட்டை – 01
2.பசை – 01
3.காது குடைப்பான் – தேவையான அளவு
4.வர்ணம் தெளிப்பான் – (கறுப்பு) தேவையான அளவு
5.கத்தரிகோல் – 01
6.நிறமுத்து – தேவையானஅளவு
7.சைனீஸ் முள்ளு கரண்டி – தேவையானஅளவு
8.கடிகாரம் – 01
9.கொழுக்கி – 01

- Advertisement -
சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம்
சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம்
சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம்

மேலும் மேற்கூறப்பட்ட தேக் கரண்டி அலங்காரத்தை விரும்பாதவர்கள் காது குடைப்பானை கொண்டும் அழகிய அலங்கார பொருளை செய்யமுடியும். அதற்கு முதலில் ஓர் காட்போட் அட்டையில் நீங்கள் அலங்கரிக்க விரும்பும் வட்ட வடிவ கடிகாரத்தை எடுத்து அதன் அளவிற்கு ஏற்ப வரைந்து வெட்டி எடுத்து கொள்ளவும். வெட்டிய காட்போட் அட்டையில் கடிகாரத்திற்கு பேட்டரி (battary) பேட ஓர் சதுர துண்டை வெட்டி எடுக்கவும். பின்னர் கடிகாரத்துடன் சேர்த்து ஒட்டவும். பின்னர் காது குடைப்பான்களை இரண்டாக வெட்டவும். சிலவற்றை மிகவும் சிறிதாக படத்தில் காட்டியுள்ளவாறு வெட்டவும். ஓர் கடினமான மட்டையில் ஓர் சிறிய வட்டத்தை வெட்டி எடுங்கள். பின்னர் அவ்வட்டத்தில் பசை பூசி சிறிதாக வெட்டியகாது குடைப்பான்களை முதலில் அதன் நான்கு முனைகளிலும் ஒவ்வொன்றாக ஒன்ரொடு ஒன்று ஒட்ட கூடிய வகையில் ஒட்டவும்.பின்னர் அவை ஒவ்வொன்றிற்கும் இடையில் மேலும் ஒவ்வோர் சிறிய காது குடைப்பான்களை ஒட்டவும்.ஒட்டிய பின் அவை ஒவ்வொன்றுக்கும் இடை இடையே பெரிய காது குடைப்பான்களை ஒவ்வொன்றாக ஒட்டவும். பின்னர் இன்னுமோர் சிறிய வட்டத்தை வெட்டி எடுங்கள்.

சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம்
சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம்

பின்னர் அவ்வட்டத்தில் பசை பூசி சிறிதாக வெட்டிய காது குடைப்பான்களை முதலில் அதன் நான்கு முனைகளிலும் ஒவ்வொன்றாக ஒன்ரோடு ஒன்று ஒட்ட கூடிய வகையில் ஒட்டவூம்.பின்னர் அவை ஒவ்வொன்றிற்கும் இடையில் மேலும் ஒவ்வோர் சிறிய காது குடைப்பான்களை ஒட்டவும்.பின் அவை ஒவ்வொன்றுக்கும் இடை இடையே சிறிய காது குடைப்பான்களை மீண்டும் ஒவ்வொன்றாக ஒட்டவும்.ஒட்டிய பின் காது குடைப்பான்களை கறுப்பு நிறவர்ணம் தெளிப்பான் கொண்டு முழுவதுமாக படத்தில் உள்ளவாறு வர்ணம் பூசி கொள்ளவும்.

சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம்
சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம் சிறுவர் அக்கம்

வர்ணம் பூசிய பின் ஒட்டிய வட்டத்தை மறைக்க கூடிய வகையில் ஓர் பெரிய முத்தினை நடுவில் ஒட்டி விடவும். பின்னர் காது குடைப்பானில் செய்த வட்ட அலங்காரத்தை தாங்கி நிற்க கூடிய நீளமான குழாய்கள் நமக்கு தேவை எனவே நாம் சைனா முள்ளு கரண்டிகளையோ இல்லை காகிதத்தில் சுருட்டிய காம்புகளையோ பயன்படுத்தி கொள்ளவும். ஒரே அளவிலான அவ் முள்ளு கரண்டிக்கு கறுப்பு நிறவர்ணம் தெளிப்பான் கொண்டு முழுவதுமாக படத்தில் உள்ளவாறு வர்ணம் பூசி கொள்ளவும்.பின்னர் செய்து வைத்த காது குடைப்பான் அலங்காரத்தை பசை பூசி கழறாதவாறு முள்ளு கரண்டியில் ஒட்டி விடவும். பின்னர் காட்போட் ஒட்டியிருந்த கடிகாரத்தில் பின் புறமாக சிறிய காது குடைப்பான்களை பயன்படுத்தி செய்த அலங்கார பொருள் ஒட்டியிருந்த முள்ளு கரண்டிகளை படத்தில் காட்டிடயுள்ளவாறு நன்றாக பசை பூசி கடிகாரத்தை சுற்றி வட்டம் போல ஒட்டிவிடவும். பின்னர் படத்தில் காட்டியுள்ளவாறு பெரிய மற்றும் சிறிய காது குடைப்பான்களை பயன்படுத்தி செய்த அலங்கார பொருள் ஒட்டியிருந்த முள்ளுகரண்டிகளை ஆரம்பத்தில் சுற்றிஒட்டியிருந்த முள்ளு கரண்டிகளுக்கிடையில் சற்று உயர்த்தி ஒட்டிவிடவும். பின் பச்சை நிற முத்துக்களை கொண்டு ஒவ்வொரு முள்ளு கரண்டிகளிலும் ஒட்டவும்.கடிகாரத்தின் பின் புறமாக கொழுக்கி ஒன்றினை ஒட்டவும்.இப்பொழுது அழகான அலங்கார கடிகாரம் தயாராகி விட்டது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.