எனது பெயர் ரவி நான் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஆறில் கல்வி பயில்கிறேன் சென்ற ஆண்டு இறுதியில் ஜந்தாம் வகுப்புதேர்வில் எனது பாடசாலையில் முதல் மாணவனாக சித்தியடைந்தேன். ஆதனால் என் மாமா மகுந்த மகிழ்சிஅடைந்தார். என்னை தன்னுடன் மார்கழி விடுமுறையில் கண்டிக்கு கூட்டி செல்வதாக கூறினார். அதை கேட்டு நான் துள்ளி குதித்தேன். ஏனெனில் மாமா வேலை பார்க்கும் நிறுவனம் கண்டியில் உள்ளது. நிறுவனத்திற்கு செல்வதற்கு மாமா எப்பொழுதும் புகைவண்டியிலேயே செல்வாய். நான் இதுவரை புகைவண்டிப் பிரயாணம் மேற்கொண்டதில்லை. பாடசாலை பகுதி நேர வகுப்புக்களுக்கும் உறவினர் வீடுகளுக்கும் பேருந்திலேயே அல்லது சைக்கில் மற்றும் மகிழுந்துகளில் சென்று வந்ததாலேயோ என்னமோ இக் கண்டி பயணம் புதுவித உற்சாகத்தை என்னுள் உண்டாக்கியது. மார்கழி பத்தாம் நாள் உடரட்டமெனிக் கோயில் செல்வதாக அவர் கூறினார் அந் நாளை எதிர் பார்த்து நானும் காத்திருந்தேன்.
அந் நாளும் வந்தது. ஓரு நாள் பயணம் என்பதால் எனது புத்தக பையில் இரண்டு காற்சட்டைகளையும் ஒரு சேட்டையும் எடுத்து வைத்துக்கொண்டேன். செல்லும் வழியில் சாப்பிடுவதற்க்கு அம்மா இரண்டு விஸ்கற் பைகளையும் ஓர் பான போத்தலையும் எனது புத்தக பையில் வைத்தார்.நேரம் சரியாக மூன்று மணி இருக்கும் சடாரென எனக்கு முழிப்பு வந்த விட்டது. ஆயினும் நாங்கள் ஆறு மணி புகையிரதத்திற்கு தான் செல்ல வேண்டும். சந்தோச மிகுதியால் இரவு நான் சரியாக தூங்கவில்லை அதனால் நான் நேரத்திற்கே விழித்துவிட்டேன். விழித்ததும் நல்லதுக்குதான் எனது வேலைகளை நான் ஆறுதலாக செய்வதற்கு எனக்கு அதிகநேரம் இருந்தது. நான் மெது மெதுவாக எழும்பி குளித்து முடித்து விட்டு மாமாவையும் எழுப்பி விட்டேன்.அவரும் குளித்தவுடன் இருவரும் உடை மாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தோம். அம்மாகையில் தேனீருடன் எங்களுக்காக காத்திருந்தார் அதனை வாங்கி குடித்து விட்டு நானும் மாமாவும் எங்களது பயணபைகளுடன் வீட்டுவாசலுக்கு வந்தோம். அப்பா ஏற்பாடு செய்திருந்த முச்சக்கர வண்டி எங்களை கோட்டை புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்ல ஆயத்தமானது. அம்மாவும் அப்பாவும் வழியனுப்ப எங்கள் முச்சக்கரவண்டி கோட்டையை நோக்கி புறப்பட்டது.
கோட்டை புகையிரத நிலையம் நான் இதுவரை செல்லாத இடம். பார்க்க மிகவும் அழகாக இருந்தது. சன நெரிசல் கூடிய இடம். வருவோர்கள் போவோர்கள் எல்லாம் எங்களை இடித்து விட்டு செல்வது போல் மிகவும் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அவர்களின் வேகமும் சுறு சுறுப்பும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏன் இவர்கள் இவ்வளவு வேகமாக எங்கு செல்கிறார்கள் என மாமாவிடம் கேட்க வேண்டும் போல் தோன்றியது. ஆயினும் மாமாவும் அவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்து சென்றமையால் அவரின் வேகத்தை குறைக்காமல் அவரின் பின்னே சென்று கொண்டிருந்தேன். மாமா திடீரென நாங்கள சென்ற பாதையில் இருந்த இரும்பு கம்பிகள் கொண்டு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிக்குள் என்னையும் அழைத்துக் கொண்டு சென்றார். இது போன்ற அமைப்பை நான் வங்கியில் கண்டிருக்கிறேன். அங்குமக்கள் வரிசையாக காசாளரிடம் செல்வதற்காக கம்பி வேலி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களை பார்த்ததும் எனது ஆசிரியை மாலா புகையிரத பயண சீட்டைபெற மக்கள் வரிசையில் நிற்பார்கள் என கூறியது நினைவு விளங்கியது. பின்னர் மக்கள் ஒவ்வொருவராக குறையமாமா கம்பிக்கு அருகில் சென்றாH.அங்கே அறை ஒன்று இருந்தது அவ் அறையின் யன்னல் வழியாக மாமா பணத்தை கொடுக்க அங்கு வெள்ளை உடை அணிந்திருந்த ஒருவர் அதனை வாங்கி கொண்டு பயண சீட்டை கொடுத்தார். பயண சிட்டையில் புகையிரத நேரம் 6.30 என குறிப்பிட்டிருந்தது. மாமா தனது கையிலிருந்த கைக்கடிகாரத்தை திருப்பி நேரத்தை பார்த்தார் கடிகாரம் 6.00 என காட்டியது. புகையிரதம் வருவதற்கு இன்னும் 30 நிமிடம் இருக்கின்றது என கூறிக்கொண்டே புகையிரத மேடையிலிருந்த இருக்கையில் மாமா அமர்ந்துகொண்டார். நானும் அவர் அருகில் சென்று அமர்ந்தேன். அமர்ந்ததும் “மாமா ஏன் மாமா இவர்கள் இவ்வளவு வேகமாக எங்கு செல்கிறார்கள்”என புகையிரத நிலையத்திற்கள் நுழைந்தவுடனே எனக்கு தோன்றிய சந்தேகத்தை கேட்டு விட்டேன். உடனே மாமா ரவி பாடசாலை மாணவர்களுக்குதான் பாடசாலை விடுமுறை விட்டுள்ளது ஆனால் வேலை செய்பவர்கள் தினமும் வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது இவர்கள் மாமாவை போல் கொழும்பிலிருந்து கண்டிக்கு செல்பவர்களாகவும் இடைவெளி இடங்களிலிருந்து கொழும்பிற்கு வருபவர்களாகவும் இருக்கும். இவர்கள் தினமும் வேலை செய்வதற்காக ஓடித்திரிய வேண்டியுள்ளது. எனமாமா கூறினார். நான் சிறிது நேரத்தில் கோட்டை புகையிரத நிலையத்தின் அழகை இரசிக்க தொடங்கிவிட்டேன். கூட்டம் தண்டவாளத்தை கூட பார்க்க முடியாதளவு அதிகமாயிருந்தத. தலையை நிமிர்ந்து மேலே பார்த்தேன் அங்கு படி கட்டுடன் கூடியபாலம் ஒன்று அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது.“என்ன மாமா அது எப்படி விழாம இருக்கெண்டு”கேட்டேன் “ரவி அது தொங்குபாலம் சனநெரிசலை குறைக்ககட்டப்பட்டது”என்றார். பேசி கொண்டிருக்கும் போதே புகைவண்டியின் ஊது குழல் சத்தம் பெரிதாக கேட்டது. புகை வண்டி மேடையில் நின்றதும் மக்கள் ஆரவாரத்துடன் ஒருவரை ஒருவர் தள்ளியும்,நெருக்கியும் உள்ளே ஏறினர். அவர்களில் சிலHவசதியான இடங்களில் அமHந்துபுன்முறுவல் பூத்தனH. சிலHவசதியான இடம் கிடைக்காமல் முகம் சோர்ந்தனர். ஏன் மாமா எப்படியோ வசதியான இடம் பிடித்து என்னை யன்னல் அருகில் அமரும் படிசெய்தார்
வண்டி நீண்ட குரல் எழுப்பி கொண்டு பறப்பட்டது. நான் சாளரத்தின் வழியாக வெளிக்காட்சிகளை பார்த்தேன். சிறு சிறு வீடுகளும் வயல் வெளிகளும் பார்ப்பதற்கே அழகாயிருந்தது. பச்சை கம்பளம் விரித்தாற் போல இருந்த மலைகளும் தேயிலை தோட்டங்களும் ரம்மியமான காட்சியாயிருந்தது. ஓடும் புகையிரத யன்னலிலிருந்த வெளிகாட்சி பார்ப்பது உண்மையிலேயே அற்புதமாயிருந்தது.புகையிரதத்தின் உள்ளே சிலர் துங்கிகொண்டிருந்தனர். சிலர் சிரித்து பேசி மகிழ்ந்தனர் சிலர் பத்திரிகை படித்தனர். புகையிரதம் அதன் பாதையில் வளைந்து வளைந்கு ஓடிக்கொண்டிருந்தது. புகை வண்டி கடுகண்ணாவை நிலையத்தில் சிறிதுநேரம் தங்கிபுறப்பட்டது. இனி கண்டிவந்த விடும் என்றார் மாமா. ஆரை மணிநேரம் கழிந்ததும் பெரிய பாலம் ஒன்று என் கண்ணில் பட்டது. பேராதனையை நெருங்கிவிட்டோம் என்று எண்ணினேன். சில நிமிடங்களில் புகையிரதம் கண்டி புகையிரத நிலையத்தை அடைந்தது. நானும் மாமாவும் எங்கள் பிரயானப் பைகளை எடுத்தக் கொண்டு இறங்கினோம்.கண்டி மாநகரம் அழகொளிர காட்சி தந்தது.மாமாவுக்க கண்டி நன்றாக தெரிந்த இடம் என்பதால் கண்டியை சுற்றி பார்ப்பது மிகவும் இலகு வாயிருந்தது. மெனிக் கோயிலை சுற்றிபார்த்த பின் தலதாமாளிகை,கண்டிவாவியையும் பார்த்துவிட்டு இரவு மீண்டும் புகையிரதத்தில் ஏறினோம். இரவு என்பதாலும் நான் களைத்து போயிருந்ததாலும் என்னால் இரவு புகையிரத பயணத்தை இரசிக்க முடியவில்லை. அன்று இரவு வீடு சென்று சேரசரியாக 11.00
இது தான் எனது முதற் புகைவண்டி பிரயாணமாகும். என்னால் மறக்க முடியாத அனுபவம் இது.