ஆதிகாலம் தொட்டு இன்று வரை மனிதனுக்கு பாதுகாப்பாகவும் ,வழிகாட்டியாகவும் ,தோழனாகவும் பிராணிகள் விளங்குகின்றது.
செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் சிறியவர் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அதிகமாக விருப்பம் கொள்வர் குறிப்பாக சிறுவயத்தில் அனைவரும் ஆசைப்படும் விடயங்களில் ஒன்று வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்த்தல் பொதுவாக சிறுவர் அவைகளை வளர்ப்பது, உணவு வைப்பது,
பேசுவது,விளையாடுவது என்பவற்றில் அவர்கள் பழகும் நேரத்தால் அந்த விலங்குகளை விட மனவளம் விடயத்தில் அந்த சிறுவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் அதிகம் என்கின்றனர் பொதுவான குழந்தைகள் மனநல மருத்துவர்கள் .
வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் சிறுவர்களிடம் இயல்பாக உள்ள அன்பு, பாசம் ,கருணை போன்ற குணங்கள் வளர்ச்சிக்கு நல்ல முறைமையாக உள்ளது.
பொம்மைகளை விட இவற்றை பராமரிப்பதில் அதிக பொறுப்புணர்வை வெளிப்படுத்துகின்றது இவை பராமரிப்பு மற்றும் அலங்கார பொருட்களை வாங்குவதில் பெரிய பொறுப்புடையவர்களாக மாறிவிடுவது சிறந்த பொறுப்புக்களை எதிர்காலத்தல் வளர்த்தெடுக்கும்.
செல்லப்பிராணிகளினால் சிறுவர்களுக்கு தன்னம்பிக்கை, தேடல் சமூக நல்லிணக்கம் ,உதவி செய்யும் மனப்பாங்கு ,நேர்த்தியான செயல்முறை ,மன அமைதி ,மனநிறைவு என்பன இயல்பாகவே உருவாகும் அது மட்டுமல்லாது ஒவ்வொரு வீட்டிலும் மிக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றது.
சிறுவர்கள் எந்த பிராணிகளை வளர்த்தாலும் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
உதாரணமாக நாய், பூனை,சில பறவையினம் என்பனவற்றை குறிப்பிடலாம் அவற்றுக்கு தவறாமல் தடுப்பூசிகளை போட வேண்டும் அவற்றின் சுகாதாரத்தில் ஆரோக்கியத்திலும் தொடர்ந்தும் அவதானமாக இருக்க வேண்டும் இவற்றை பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாக சிறுவர்களுக்கும் செல்ல பிராணிகளுக்கும் நெருக்கமான பிணைய்ப்பு வந்தவுடன் சிறுவர்கள் தாயின் பாசத்தை அவற்றில் காண்பார்களாம் என்று கூறுகின்ற மரபு கருத்துக்களும் உண்டு.