ஒரு குடும்பத்தில் நடுவில் பிறந்த குழந்தை என்றால் தங்கள் வாழ்நாளில் நிறைய போராட்டங்களை சந்தித்து தான் வளருகின்றனர். உங்கள் வாழ்க்கை உங்கள் குடும்பத்தில் ஒரு கடைக்குட்டி நபர் வந்ததும் முற்றிலும் மாறுபட்டு போகிறது. இதுவரை கடைக்குட்டியாக எல்லாராலும் செல்லம் கொஞ்சப்பட்ட நீங்கள் இப்பொழுது கண்டு கொள்ள முடியாத நபராக மாறி விடுகிறீர்கள். உங்கள் உணர்வுகளை இப்பொழுது யாரும் புரிந்து கொள்வதில்லை. உங்களுக்கு நிறைய பொறுப்புகளை கொடுக்கும் இந்த குடும்பம் அதே நேரத்தில் உங்கள் இளைய சகதோர / சகதோரிக்கு கட்டுப்பாடுகளையும் தளர்த்தி விடுகின்றனர். ஆனால் தற்போது எல்லாம் தம்பதியினர் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தையோடு நிறுத்தி கொள்கின்றனர். இப்பொழுது எல்லாம் நடு குழந்தை என்பது அரிதாகவே உள்ளது. இந்த மாற்றத்தை பற்றி தான் நாம் இப்பொழுது பேசப் போகிறோம்.
உண்மையில் நடப்பது என்ன?
ஒரு அமெரிக்க நாளிதழ் திரட்டிய கருத்து தற்போது வைரலாக பரவி வருகிறது. இதன் கருத்துப்படி நடு குழந்தைகள் என்ற வாழ்க்கை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றனர் என்கின்றனர். இதன் ஆசிரியர் ஆடம் ஸ்ர்ன்டர்பெக் கூற்றுப்படி அமெரிக்காவில் உள்ள தம்பதியினர்கள் பெரும்பாலும் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். இதனால் நடு குழந்தைகள் என்ற சொல்லே அழிந்து வருகிறது என்கிறார்கள்.
புள்ளி விவரங்கள்
1976 ஆம் ஆண்டில் தனது கூற்றை மறுபரிசீலனை செய்வதற்காக பியூ ஆராய்ச்சி ஒன்றை ஸ்டென்பெர்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.அந்த காலத்தில் 40-44 வயதிற்கு உட்பட்ட 40 சதவீத பெண்களுக்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர். இதில் 25 சதவீத பெண்களுக்கு மூன்று குழந்தைகளும், 24 சதவீத பெண்களுக்கு இரண்டு குழந்தைகளும், 11 சதவீத பெண்களுக்கு மட்டுமே ஒரு குழந்தை என்று இருந்தனர். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் 2/3 பங்கு பெண்களுக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என்றே குடும்பங்கள் ஆகி வருகிறது என்கிறார் அவர்.
இந்தியா தகவல்
இந்த போக்கு வெளிநாடுகளில் மட்டுமே வளர்ந்து வருவதில்லை. குடும்பங்களை பேணிக் காக்கும் இந்தியாவிலும் இந்த தன்மை காணப்படுகிறது என்பதே ஆச்சரியமூட்டும் விஷயமாக உள்ளது. 2011 ஆம் ஆண்டு கணக்குப்படி நமது நாட்டில் பாதிக்கு மேல் இரண்டு குழந்தைகள் மட்டுமே கொண்டுள்ளனர் என்கின்றது புள்ளி விவரங்கள். அதாவது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி 54% பெண்களுக்கு வெறும் இரண்டு அல்லது ஒரு குழந்தைகள் மட்டுமே உள்ளனர் என்கின்றனர். 2001 ஆம் ஆண்டு கணக்குடன் ஒப்பிடும் போது 46.6 % ஆக இருந்தது இப்பொழுது உயர்ந்துள்ளது.
அதே மாதிரி குழந்தைகளின் சராசரி விகிதமும் 2.69 %ஆக குறைந்துள்ளது. மக்கள் தொகை கட்டுப்பாடு சிறப்பாக செயல்பட்டு வருவதை நாம் உணரலாம். ஆனால் நடு குழந்தைகள் என்றே வார்த்தையே மறைந்து வருகிறது.
காரணங்கள்
இந்த மாற்றம் ஏற்பட சில காரணிகள் காரணமாகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள காத்திருக்காமல் இருப்பது, பொருளாதார நிலை, உயரும் செலவுகள், கல்வி, குழந்தையின் எதிர்காலம் இவற்றை கருத்தில் கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வதை நிறுத்திக் கொள்கின்றனர்.
நடு குழந்தையின் குணங்கள்
நடுவில் வளரும் குழந்தைகள் பெரும்பாலும் குடும்பம் சார்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்ற குழந்தைகளை காட்டிலும் வெற்றிகரமாக, ஆக்கப்பூர்வமாக, நியாயமான எண்ணங்களோடு தங்கள் சகதோரர்களை விட தனித்து செயல்படும் திறமை பெற்றவர்களாக இருப்பார்கள். “சீக்ரெட் பவர் ஆஃப் மிடில் சில்ரன்” என்ற நூலின் ஆசிரியரான காத்ரின் சூமான் உளவியல் சார்ந்து என்ன சொல்லுகிறார் என்றால் அவர்கள் குடும்பத்தில் ஒதுக்கப்படுவதால் நீண்ட காலத்திற்கு கூட தனித்து செயல்பட துணிகின்றனர். தனித்துவத்தோடு, சுதந்திரமாகவும், குறைந்த மன அழுத்தத்தை உணர்கிறார்கள். மேலும் உணர்ச்சி அற்றவர்களாகவும் உணர்கிறார்கள்.
அறியப்படாத கேள்விகள்
உலகெங்கிலும் உள்ள இந்த நடு குழந்தைகள் என்ற சொல் மறைந்து வருவதால் அவர்களுக்கான தொடர்பு உலகமும் அழிந்து வருகிறது. இதனால் புத்திசாலியான நடுத்தர குழந்தைகள் இப்பொழுது உருவாகுவதில்லை. அமெரிக்க ஜனாதிபதிகளில் 52% நபர்கள் தங்கள் குடும்பத்தில் நடு குழந்தையாக இருந்து வளர்ந்து வந்தவர்கள் தான் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம். பில்கேட்ஸ், நெல்சன் மண்டேலா, அன்னே ஹாத்வே, வாரன் பபெட் மற்றும் ஆபிரகாம் லிங்கன் போன்ற உலகப் புகழ் பெற்ற தலைவர்கள் அனைவரும் புத்திசாலித்தனம் உடைய நடு குழந்தைகள் தான் என்பதை நாம் மறக்கவும் மறுக்கவும் முடியாது என்பதே உண்மை .