உலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்டாடபட்டு வருகிறது. Gender & Ocean ” எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த வருடம் சமுத்திரதினம் கொண்டாடப்பட வேண்டும்.2009 ம் ஆண்டு ஜுன் மாதம் 8ம் தேதியிலிருந்து உலக சமுத்திர தினத்தை ஒவ்வொரு வருடமும் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் தீர்மானத்தின்படி முடிவெடுக்கப்பட்டது. உலகின் சமுத்திரங்களால் நாம் பெறும் பயனை அளவிடவும், அவை நமக்கு வழங்கும் (கடல்) உணவுகள், மீன்கள், செல்லப் பிராணிகள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களையும், அவற்றின் பயன்கள், பெறுமதிகள் பற்றி உயர் மதிப்புடன் நோக்கவும் இத்தினத்தை வருடாவருடம் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகில் 70.8% ஆனவை சமுத்திரங்களாக காணப்படுகின்றன. இந்த சமுத்திரங்கள் வெப்பநிலை 3.6 பாகை ஆகவும் உவர்தன்மை 34.4% ஆகவும் காணப்படுகின்றது. இவற்றில் பசுபிக் சமுத்திரம், அத்திலாந்திக் சமுத்திரம், இந்து சமுத்திரம், ஆட்டிக் சமுத்திரம், தென்சமுத்திரம் போன்றன முக்கியம் பெற்றவையாக காணப்படுகின்றன. இவ் சமுத்திரங்களின் பரப்பளவு 3611132000 சதுரகிலோமீட்டர் ஆகும்.
தென்சமுத்திரத்தினை எடுத்துக்கொண்டால் இது 21960000 சதுரகிலோமீட்டர் பரப்பளவினையும் 4000-5000 மீட்டர் ஆழத்தினையும் கொண்டு காணப்படுகின்றது. இச்சமுத்திரங்களில் அமுட்சன் கடல், டேவிஸ் நீரினை, பெலிஞ்சன் கடல், கொஸ்மாண்ட் கடல், லாஸார்வ் கடல், மல்சன் கடல், சோமங் கடல், ரோங் கடல் ஆகியன காணப்படுகின்றன. அத்துடன் ஐஸ் படலங்கள் அதிகம் கொண்டதாகவும் உலகில் 2வது மிகச்சிறிய சமுத்திரமாகவும் காணப்படுகின்றது.
அத்திலாந்திக்சமுத்திரத்தினை அவதானிக்குமிடத்து இது 85133000 சதுரகிலோமீட்டர் பரப்பினையும் 3926 மீட்டர் ஆழத்தினையும் கொண்டு காணப்படுகின்றது. இந்த சமுத்திரத்தில் ஆர்ஜென்டினா கடல், பால்ட்டிக் கடல், கருங்கடல், கஸ்பியன் கடல், கரீபியன் கடல், மெக்சிக்கோ வளைகுடா, கிரீன்லாந்து, கட்சன் வளைகுடா, லப்பிடரோர் நீரோட்டம் ஆகியன காணப்படுகின்றன. இச்சமுத்திரம் 2வது பெரிய சமுத்திரம் ஆகும். இது தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுக்கு இடையில் காணப்படுகின்றது.
இந்து சமுத்திரத்தினை அவதானிக்குமிடத்து இது 70560000 சதுரகிலோமீட்டர் பரப்பளவினையும் 3963 மீட்டர் ஆழத்தினையும் கொண்டு காணப்படுகின்றது. இந்த சமுத்திரத்தில் அரேபியன் கடல், அந்தமான் கடல், பெர்சியன் கடல், வங்கக்கடல், ஓமான் கடல், ஏடன் கடல், குச் கடல், மன்னார் வளைகுடா, லங்காட்ஸ் கடல் ஆகியன காணப்படுகின்றன. இச்சமுத்திரம் இந்தியா, ஆபிரிக்கா, அவுஸ்ரேலியா ஆகியவற்றுக்கு இடையில் காணப்படுகின்றது.
பசுபிக் சமுத்திரத்தினை எடுத்துக்கொண்டால் இது 168723000 சதுரகிலோமீட்டர் பரப்பினையும் 4028 மீட்டர் ஆழத்தினையும் கொண்டு காணப்படுகின்றது. இதில் பேரிங் கடல், பிஸ்மார்க் கடல், செலிபஸ் கடல், கோரல் கடல், தென்சீனக்கடல், கிழக்கு சீனக்கடல், ஜப்பான் கடல், ஓர்க்கோட்ஸ் கடல், யாவா கடல், பிலிப்பைன்ஸ் கடல், சுலு கடல், தஸ்மான் கடல், மஞ்சள் கடல் ஆகியன காணப்படுகின்றன. இது ஆசியா , அவுஸ்ரேலியா, வட அமெரிக்கா , ஓசானியா ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. இது உலகின் பெரிய சமுத்திரமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆட்டிக் சமுத்திரத்தினை அவதானிக்குமிடத்து இது 15558000 சதுரகிலோமீட்டர் பரப்பினையும் 1205 மீட்டர் ஆழத்தினையும் கொண்டு காணப்படுகின்றது. இதில் காரக்கடல், பவின் கடல், பிரண்ட்ஸ் கடல், சுக்சி கடல் , வின்கொலின் கடல், பச்சோரா கடல், வெண்கடல், ஆகியன வியாபித்துள்ளன. உலகின் சிறிய சமுத்திரமாகவும் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து ஆகியவற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது.
சமுத்திரங்களின் முக்கியத்துவம்
சக்தியினை உருவாக்க பயன்படுகின்றது.
பெற்றோலிய உற்பத்திக்கு பயன்படுகின்றது.
மருத்துவ தேவைக்கு பயன்படுகின்றது.
மீன்பிடி உற்பத்திக்கு பயன்படுகின்றது.
சுற்றுலா விருத்திக்கு பயன்படுகின்றது.
உணவு தேவைக்கு பயன்படுகின்றது.(கடல்வாழ் உயிரினங்கள்)
காலநிலையினையும் வெப்பநிலையினையும் சீர் செய்வதற்கு பயன்படுகின்றது.
மனித தேவைகளுக்காக நீரினை பெற்று கொள்ள பயன்படுகின்றது.
போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பயன்படுகின்றது.
உயிர்பல்வகைமையினை பாதுகாக்க பயன்படுகின்றது.
கைத்தொழில் நடவடிக்ககைகளுக்கு பயன்படுகின்றது.
போன்றவற்றினை கூறிக்கொள்ள முடியும். சமுத்திரங்கள் மூலம் இன்றைய வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் அதிகளவிலான வருமானத்தினை தேடிக்கொள்கின்றன. இந்த சமுத்திரங்கள் நமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அளப்பரிய பணியினை ஆற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.