
கண்டுபிடிப்பில் மிக அரிதான வெறுவடிவம் பெறாத பொருள் எது???
#Safety_pin: ஊக்கு. ஒரு விஞ்ஞானி இருந்தார். அவர் விஞ்ஞானியா என்று கூட தெரியவில்லை. எப்படியோ… அவர் இருந்தார். அவருக்கு ஏதையேனும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தேடல் எல்லாம் ஒன்றும் இல்லை.
ஒரு நாள் சும்மா கையில் கிடைத்த ஒரு கம்பியை வைத்து பொழுது போகாமல் மடக்கியும் நீட்டியும் என்னவோ செய்து கொண்டிருந்தார். திடீரென அவர் அந்த கம்பி ஒரு விதமான வித்தியாசமான வடிவில் இருப்பதை கவனித்தார்.

அந்த வடிவமானது நன்கு பலமாக இருப்பதை கவனித்தார். அதைத் தன் சட்டையில் குத்திக் பார்த்தார். உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த வடிவத்தைக் கொண்டே ஒரு ஊக்கைச் செய்தார். இவ்வாறாக நமக்கு கிடைத்தது தான் safety pin
அவர் பெயர் #WalterHunt.
இன்று இதை உபயோகிக்காதவர்கள் உலகில் இருக்கவே முடியாது என்கிற அளவிற்கு இது பரவியுள்ளது. ஏதோ ஒன்றை தேடி என்ன?! தேடாமலேயே நமக்கு கிடைத்த கண்டுபிடிப்பு இது.

கண்டுபிடிக்க பட்ட நாள் முதல் இது வரை எந்த மாற்றமும் செய்யாமல் அல்லது செய்ய முடியாமலும் இருக்கும் உலகத்தில் ஒரே பொருள் இதுதான்.