Tuesday, December 3, 2024
Homeசிறுவர் செய்திகள்ரொனால்டோவின் ஒற்றைச் செயல்.. 4 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த கோகோ கோலா

ரொனால்டோவின் ஒற்றைச் செயல்.. 4 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த கோகோ கோலா

- Advertisement -

பத்திரிகையாளர் சந்திப்பில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை வைத்த வீடியோ வைரலான நிலையில் ஐரோப்பா பங்குச்சந்தையில் கோகோ-கோலா நிறுவனம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

- Advertisement -

யூரோ 2020 கால்பந்து தொடரின் போர்சுக்கல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை வைத்தார்.

அந்த வைரல் வீடியோவில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு ரொனால்டோ வந்தவுடன் மேஜையின் மீது கோலா பாட்டில்கள் இருந்ததை பார்த்து அதிருப்தியடைந்தார்.

- Advertisement -
ரொனால்டோவின் ஒற்றைச் செயல்.. 4 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த கோகோ கோலா
ரொனால்டோவின் ஒற்றைச் செயல்.. 4 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த கோகோ கோலா

உடனே முன்னால் இருந்த 2 கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு, தண்ணீர் பாட்டிலை தூக்கி, “அகுவா” என தெரிவித்ததோடு (தண்ணீருக்கான போர்ச்சுக்கீசிய வார்த்தை) மக்கள் குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சமிக்ஞை செய்தார்.

- Advertisement -

பத்திரிகையாளர் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் கலந்து கொண்டார். இருப்பினும், மேஜையில் வைக்கப்பட்டிருந்த கோலா பாட்டில்களை அவர் அகற்றவில்லை.

யூரோ 2020 போட்டிக்கான ஸ்பான்சர்களில் கோகோ கோலாவும் ஒன்றாகும். ரொனால்டோ துரித உணவுகளுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்வது இது முதல்முறை கிடையாது. இதற்குமுன்பும் பலமுறை ஜங் உணவுகளுக்கு எதிராக பேசியிருக்கிறார்.

ஆனால் நேற்று கோகோ கோலா பாட்டில்களை நகர்த்திய கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நடவடிக்கை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

கால்பந்து உலகின் முடிசூடா மன்னாக உலகம் முழுவதும் குறிப்பாக ஐரோப்பிய கண்டம் முழுவதுமாக பலமான ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள ரொனால்டோ நேற்று செய்த செயலால் ஐரோப்பிய பங்கு வர்த்தகத்தில் கோகோ – கோலா நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது.

ரொனால்டோவின் ஒற்றைச் செயல்.. 4 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த கோகோ கோலா
ரொனால்டோவின் ஒற்றைச் செயல்.. 4 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த கோகோ கோலா

பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கியபோது போது கோகோ – கோலா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 242 பில்லியன் என்று இருந்தது. ஆனால் கோகோ – கோலா பாட்டில்களை நகர்த்தி தண்ணீர் பாட்டிலை காண்பித்த ரொனால்டோவின் சின்ன செயல் வீடியோவாக வைரலாக, இந்த சம்பவத்துக்கு பின் கோகோ – கோலா நிறுவனத்தின் பங்குகள் சரிய ஆரம்பித்தன.

ஒரு சில நிமிடங்களில் 4 பில்லியன் டாலர் அளவுக்கு (அதாவது மொத்தமதிப்பில் 1.6 சதவிகிதம்) பங்குகள் சரிந்தன.

இதன் இந்திய மதிப்பு என்ன தெரியுமா.. இந்திய மதிப்பில் 29,337 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பை `The Daily Star’ என்ற பத்திரிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.