Friday, October 18, 2024
Homeசுகாதாரம்5 யோசனைகள் சமயலறையில் ஈக்களை விரட்ட

5 யோசனைகள் சமயலறையில் ஈக்களை விரட்ட

- Advertisement -

siruvar sinthanaikalsiruvar sinthanaikal

- Advertisement -

1.உப்பும் மஞ்சளும்

உங்கள் சமையல் அறையின் மூலை முடுக்குகளில் மஞ்சள் மற்றும் உப்பை கலந்து தூவி விடுங்கள். இதன் கிருமி நாசினி தன்மை இந்த பூச்சிகளை முற்றிலுமாக அழித்து விடும். மேலும், உணவுகளை பாதுகாப்பாக வைக்கும் இடங்களிலும் இந்த கலவையை தூவி விடுங்கள். இது நல்ல தீர்வை தரும்.

- Advertisement -

2.மிளகும் உப்பும்

- Advertisement -

siruvar sinthanaikalsiruvar sinthanaikal

சமையல் அறையில் அதிக அளவில் கொசு, ஈ, மற்றும் பல வித பூச்சிகளின் தொல்லை தாங்க முடியவில்லையா? இதை மிக சுலபமாக உப்பு மற்றும் மிளகை வைத்து சரி செய்து விடலாம். 2 கப் கொதிக்க வைத்த நீரில் உப்பு மற்றும் மிளகு பொடியை சேர்த்து கொள்ளவும். பிறகு இதனை ஸ்பிரே செய்வது போல பூச்சிகள் இருக்கும் இடத்தில் செய்து வந்தால் உடனடியாக அவற்றை அழித்து விடலாம்.

3.இஞ்சி
siruvar sinthanaigal
உடல் நலத்தோடு சேர்த்து வீட்டின் நலத்தையும் இஞ்சி பாதுகாக்கிறது. 1 ஸ்பூன் சுக்கு பொடியை வெந்நீரில் கலந்து அதை பூச்சிகள் இருக்கும் இடத்தில் ஸ்பிரே செய்தால் மிக எளிதாக அவற்றை அழித்து விடலாம்.

4.வினிகர் சமையல்

அறையில் ஒளிந்துள்ள பூச்சிகளை கொல்ல இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். இதற்கு 2 கப் வினிகரை 1 ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய்யுடன் சேர்த்து கொள்ளவும். அடுத்து இதனை 1 கப் குளிர்ந்த நீரில் கலந்து சமையல் அறையின் எல்லா மூலைகளிலும் ஸ்ப்ரே செய்து வந்தால் பூச்சிகளை விரட்டி விடலாம்.

5.துளசி

siruvar sinthanaigal

வீட்டின் முற்றத்தில் இருந்து எப்படி நமது முழு வீடையும் துளசி பாதுகாக்கிறதோ அதே போன்று நமது சமையல் அறையில் வைத்தால் நமது ஆரோக்கியத்தையும் சேர்த்தே பாதுகாக்கும். சமையல் அறையில் ஒரு துளசி செடியை சிறிய தொட்டியில் வளர்த்தால் பூச்சிகளினால் ஏற்பட கூடிய பாதிப்புகள் குறையும்.

பாதிப்பு
பொதுவாக சமைக்கும் இடம் மிகவும் சுத்தமாக இருத்தல் வேண்டும். கொசு, ஈ போன்ற பூச்சிகள் உணவு தயாரிக்கும் இடத்தில் இருந்தால் அவற்றால் நமக்கு பாதிப்புகள் தான் அதிகம். இதனால் வயிற்று போக்கு, வாந்தி, பேதி, மயக்கம், தலை வலி, சில சமயங்களில் மரணம் கூட நேரலாம்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.