RS இன் விரிவாக்கம் Remote Sensing என்பதாகும். அதாவது Remote– தொலைவு, Sensing– உணர்வு என்றவாறு அதனுடைய மொழிபெயர்ப்பு அமைகின்றது. இதற்கமைய இத்தொழினுட்பமானது தொலையுணர்வு தொழினுட்பம் என தமிழில் அழைக்கப்படுகின்றது.புவியின் பொருட்களை நேரடியாக தொடர்புகொள்ளாமல் தொலைவில் இருந்து உணரிகளையும் (Sensor), நிழற்படக் கருவி (Camegeography ra) போன்ற கருவிகளையும் பயன்படுத்தி புவியின் விவரங்களை சேகரித்து, அதனை விவரணம் செய்வது தொலையுணர்வு தொழினுட்பம் எனப்படுகின்றது.
புவி மேற்பரப்பு பொருட்கள் பற்றி பௌதீக ரீதியான தொடர்பின்றி தகவல்களை பெற்றுக்கொள்ளும் நுட்பம் தொலையுணர்வு தொழில்நுட்பம் ஆகும். இச் செயற்பாடு புவி மேற்பரப்பில் இருந்து குறிப்பிடத்தக்களவு உயரத்திலுள்ள தளங்களிலிருந்து செய்மதி மற்றும் விமானங்கள் உணர்கருவிகள் மூலம் புவி மேற்பரப்பினை அவதானிக்கும் செயன்முறையை உள்ளடக்கி காணப்படுகின்றது. மேலும் பொருத்தமான ஊடகங்களில் பதிவு செய்யப்படுகின்றன.
மின்காந்த கதிர்வீசல் புவி மேற்பரப்பில் விழும்போது அவற்றில் சில புவிமேற்பரப்பினால் உறிஞ்சப்படுகின்றது. சில புவிமேற்பரப்பினூடாக கடத்தப்படுகின்றன. மிகுதி பிரதிபலிக்கின்றன. புவி மேற்பரப்பு இயற்கையாக கதிர்வீசலை வெளியிடுகின்றது. வெளியிடப்படும் கதிர்வீசலும் பிரதிபலிக்கும் கதிர்வீசலும் உணர்கருவிகளால் பதிவு செய்யப்படுகின்றன. தொலையுணர்வு தொழில்நுட்ப படங்கள் நிலப்பயன்பாடு மற்றும் புவி மேற்பரப்பு படமுருவாக்கல், விவசாயம் , மண் படமுருவாக்கல், காட்டு இலாகா, நகர திட்டமிடல், அகழ்வாராட்சி, காலநிலையியல், இராணுவ நடவடிக்கைகள் மற்றும் புவி வெளியுருவவியல் கள ஆய்வு போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தொலையுணர்வு தொழில்நுட்பத்தின் வரலாறும் வளர்ச்சியும்
1800 களின் இறுதியில் புவி மேற்பரப்பின் நிலக்காட்சியினை வான்வழிப் புகைப்படங்களாக பெற்றுக்கொள்வதற்காக கமராக்கள் பலூன்களிலும், பட்டங்களிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலாம் உலக போரின் போது எதிரிகளின் படையணிகளின் நகர்வினை கண்டறிவதற்காக வான்வழி புகைப்படங்கள் முக்கியம் வாய்ந்ததாக காணப்பட்டது. இந்த புகைப்படங்கள் ஆகாய விமானங்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டன. போருக்கு பின்னர் இவ்வகையான புகைப்படங்கள் உசாத்துணை படங்களை உருவாக்கி கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டன. இரண்டாம் உலக போரினை தொடர்ந்து உருவான வண்ண புகைப்படங்கள் புவி மேற்பரப்பு பொருட்களுக்கு இயற்கையான தெளிவான விளக்கத்தை தந்தது.
செய்மதி தொலையுணர்வு தொழில்நுட்பம்
1960இல் விண்வெளி செய்மதிகளின் துணையுடன் தொலையுணர்வு தொழில்நுட்பத்தில் ஒரு பாரிய புரட்சி ஏற்பட்டது. செய்மதிப்படங்கள் புவி மேற்பரப்பின் பெரிதும் நீடிக்கப்பட்ட காட்சியினை கொண்டு காணப்பட்டன. 1960 ஏப்ரல் முதலாம் திகதி முதலாவது வானிலை செய்மதியான Tiros-1 ஐக்கிய அமெரிக்காவினால் ஏவப்பட்டது. இவ்வாறான ஆரம்பகால வானிலை செய்மதிகளில் புவிமேற்பரப்பின் பரந்த பிரதேசத்தினை படம் பிடிப்பதற்காக Vidicon cameras பயன்படுத்தப்பட்டன. செய்மதிகளால் பிடிக்கப்படும் இவ் வகையான படங்கள் புவிமேற்பரப்பில் காணப்படும் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
1970இல் Landsat செய்மதிகளோடு தொலையுணர்வு தொழில்நுட்பத்தின் இரண்டாவது புரட்சி ஆரம்பமாகியது. 1972ம் ஆண்டிலிருந்து Landsat செய்மதிகள் 30 வருடகாலமாக பல் நிறமாலை கருவிகள் மூலம் தெளிவான செய்மதி படங்களை பெற்றுக்கொண்டது. தற்பொழுது Landsat செய்மதிகளின் சுற்றுப்பாதை புவி மேற்பரப்பில் இருந்து 700 கிலோமீட்டர் உயரத்தில் காணப்படுகின்றது. புவியின் முற்று முழுதான புகைப்பட தொகுப்புக்கு 233 சுற்றுப்பாதைகள் தேவைப்படுகின்றது. இது ஒவ்வொரு 16 நாட்களுக்கு ஒருமுறை நிகழ்கின்றது.
புவி மேற்பரப்பு பொருட்களின் இடம்சார் தெளிவுத்தன்மை 79×56 மீட்டர்கள் ஆகும். பல் நிறமாலை ஸ்கானர் ஆனது 4 அலை நீள பட்டைகளில் 185 கிலோமீட்டர் அகலமுள்ள புவிமேற்பரப்பின் ஒரு வலயத்தை படம் பிடிக்கின்றது. Band 4 at 0.5 to 0.6 micrometers, Band 5 at 0.6 to 0.7 micrometers, Band 6 at 0.7 to 0.8 micrometers and Band 7 at 0.8 to 1.1 micrometers ஆகும். Band 4 மற்றும் 5 ஆகிய இரண்டும் மின்காந்த நிறமாலையின் புலப்படக்கூடிய ஒளி வீச்சிலிருந்து பச்சை மற்றும் சிவப்பு அலை நீளங்களை பெற்றுக்கொள்கின்றன. 1982ம் ஆண்டிற்கு பின்னர் ஏவப்பட்ட செய்மதியில் 6வது, மற்றும் 7வது Band இனை கொண்ட செய்மதி படங்களை பெற்றுக்கொள்ளும் தொழில் நுட்பங்கள் சேர்த்து கொள்ளப்பட்டன. இவற்றின் தெளிவுத்தன்மை 30×30 மீட்டர் வரை மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
******************************
kidhours_upcoming
#kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil