உங்களின் குழந்தைகளை வாசிப்பதற்கு கற்றுக்கொடுத்தல் என்பது அவ்வளவு இளகுவான காரியமாக அமையாதிருக்கலாம். சிலநேரங்களில் இந்நிலைமையை நாம் மேலும் மோசமடையச் செய்கின்றோம். இதன்போது நாம் செய்யக் கூடாத பின்வரும் மூன்று நடவடிக்கைகள் பற்றியும் சிந்தியுங்கள்.
1. சிறுவர்களின் மட்டத்தையும் விட உயர்வான புத்தகங்களை வழங்குதல்:
உங்களின் குழந்தையை கல்விச் செயற்பாட்டின் அடுத்த கட்டத்திற்கு முடிந்தளவு விரைவாக இட்டுச் செல்லும் அவா உங்களுக்கு எப்போதுமே காணப்படும். என்றாலும், வாசிப்பதற்கு தயாராகும் சிறுவர் ஒருவருக்கு இது அவ்வளவு பொருத்தமானதல்ல. இதனால் அவர்களின் வாசிப்பு வேகம் குறைவடைந்து வாசிப்பதற்கு மேலும் கடினமான நிலை தோன்றலாம். வாசிக்க முடியுமென்ற அவரின் நம்பிக்கையில் பாதிப்புக்கள் ஏற்படுத்தப்படலாம்.
2. கவலையாக அல்லது கோபமாக இருக்கின்ற நிலையில் வாசிப்பதற்கு ஏவுதல்:
சிறுவர் ஒருவர் கவலலையாக அல்லது கோபமாக இருக்கின்ற நிலையில் அவரால் மனதை ஒருமுகப்படுத்த முடியாதிருக்கலாம். சிந்திக்கவும் முடியாதிருக்கும். இந்த நிலையில் சிறுவர்களை வாசிப்பதற்கு தூண்டுவதானது சிறுவர்களை மட்டுமன்றி உங்களையும் கவலைக்குற்படுத்தும். “இப்போது நீங்கள் கோபமாக உள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு விருப்பமான எதையாவது குடித்துவிட்டு இருப்போம். உங்களுக்கு வாசிக்க வேண்டும் என தோன்றும்போது என்னிடம் சொல்லுங்கள்என்பதே இதன்போது நீங்கள் செய்ய முடியுமான வேலையாகும்.
3. உங்களின் குழந்தை அறிந்துகொண்டே வாசிப்பதை தவிர்த்தல்:
ஒவ்வொரு நாளும் குழந்தையுடன் வாசிப்பதற்கு சிறிது நேரத்தை ஒதுக்குவது முக்கியமானதாகும். அதிக வேலைப்பழுவுடன் வீடு வந்து சேரும் பெற்றோர்களுக்கு இதனை செய்ய முடியாது போகலாம். என்றாலும், குறைந்தது 10 நிமிடங்களையாவது அவருடன் சேர்ந்து வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குவதன் மூலம் அவரின் வாசிப்பு ஆற்றலில் பாரிய மாற்றத்தை தோற்றுவிக்கலாம். கடினமாக வாசிக்கின்ற சிறுவர்களில் கூட இம்முறையின் மூலம் முன்னேற்றங்களை அவதானிக்கலாம்.