சிறு கட்டுரை Rainfall Harvesting Essay in Tamil
மழைநீர் சேமிப்பு மட்டுமே நன்னீரை சேமிப்பதில் சிறந்ததாகும்.மழைநீரை சேமிப்பதின் மூலமாக பல நன்மைகள் விளைகின்றன.ஒவ்வொரு ஆண்டும் கடலில் கலக்கும் மழைநீரின் அளவு கொண்டு நமது தேசத்தின் குடிநீர் தேவையை பத்து ஆண்டுகள் பூர்த்திசெய்ய முடியும்.இந்திய தேசத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கோடிக்கணக்கான தொகை செலவிடப்படுகிறது.மழைநீர் சேமிப்பின் அவசியத்தை மக்களுக்கு அறிவுறுத்துவதின் மூலமாக பொது நிதி அதிகப்படியாக சேமிக்கப்படுகிறது.மழைநீர் சேமிப்பு ஒரு சாதனரான குடிமகன் அதிக பொருட்செலவு இல்லாமலேயே சாதிக்க முடிந்த ஒன்றாகும்.
மழைநீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்த அரசு பல சட்டங்களையும், விளம்பரங்களை வெளியிடுகிறது. மழைநீரில் அவசியத்தை குழந்தைகளுக்கு உணர்த்தும் விதமாக ஆரம்ப கல்வி பாடங்களிலேயே மழைநீர் சேமிப்பு பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. மழைநீர் சேமிப்பு தொட்டி ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் ஒவ்வொரு அரசு கட்டிடங்களிலும் அமைக்க படுகிறது.மழைநீர் சேமிப்பு அமைப்பு புதிதாக அமைக்கப்படும் கட்டிடத்தில் அமையவேண்டும் என்ற சட்டங்களும் இயற்ற பட்டுள்ளன.
மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம்
1.குறைந்த செலவில் நன்னீரை சேமிக்கலாம்
2.நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்க முடிகிறது
3.குடிநீர் கட்டணம் வெகுவாக குறைகிறது
4.சுலபமாக மழைநீர் சேமிப்பு அமைப்பு உருவாக்க முடியும்
5.அதிகப்படியான வெள்ளம் ஏற்படும்போது மழைநீர் சேமிப்பு அமைப்புகள் 6.வெள்ளத்தின் அளவை குறைக்கிறது
7.வேதிப்பொருட்கள் நிறைந்த அசுத்தமான நீருக்கு பதிலாக நன்னீர் கிடைக்கிறது
8.வேளாண் நிலங்கள் புத்துணர்வு பெறுகின்றனர்
மழைநீர் சேமிப்பு வகைகள்
1.வேளாண் நிலங்களில் குளங்கள் அமைத்து சேமித்தல்
2.மொட்டை மாடி சேமிப்பு அமைப்புகள்
3.கிணறுகளில் மழைநீர் சேமிப்பு அமைப்பு அமைத்தல்
4.நீர்வரண்ட ஆழ்துளை கிணற்றை சேமிப்பு தொட்டியாக மாற்றுதல்
மழைநீர் சேமிப்பிற்கன திட்டங்கள்
1.மழைநீர் சேமிப்பு தொட்டி அமைத்தல்
2.குழந்தைகளுக்கு பாடத்திட்டத்தில் மழைநீர் சேமிப்பு பற்றி படங்கள் சேர்த்துள்ளது
3.அவசரகால திட்டங்கள் வகுத்துள்ளது
4.புதிய கட்டிடங்களுக்கு மழைநீர் சேமிப்பு அமைப்பு கட்டாயமாக்க பட்டுள்ளது
5.தொழிற்கூடங்களுக்கு மழைநீர் அமைப்பிருந்தால் சலுகைகள் கொடுக்கிறது
kidhours – Rainfall Harvesting Essay in Tamil
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.