ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவாகிய பூகம்பம் ஒன்று பிலிப்பைன்சைகுலுக்கிய நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை, உள்ளூர் நேரப்படி 9 மணியளவில், பிலிப்பைன்சின் Cotabato மாகாணத்திலுள்ள Tulunan நகரை பூகம்பம் தாக்கியது.
அலுவலகங்களிலிருந்து ஊழியர்களும் பள்ளிகளிலிருந்து மாணவ மாணவியரும் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.பூகம்பத்தால் பல கட்டிடங்களில் பெருமளவில் விரிசல் விட்டுள்ளது.இடிந்து விழுந்த கட்டிடங்களின் பாகங்கள், 66 வயது நபர் மற்றும் 15 வயது மாணவர் ஆகியோரின் உயிரை பறித்தன.
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகிய ஒரு பூகம்பம் பிலிப்பைன்சை தாக்கிய நிலையில், அந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னமும் மீளாத மக்கள் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
அந்த பூகம்பத்தின்போது ஐந்து பேர் வரை பலியானதோடு பல கட்டிடங்களும் சேதமடைந்தன. இந்நிலையில், தற்போதைய பூகம்பத்தால் அதிர்ச்சிக்குள்ளான மற்றும் காயமடைந்த பலருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.