ஜப்பானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது. ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அந்த நாடு 4 டெக்டானிக் பிளேட்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்து உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் உலகில் ஏற்படும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் 20% நிலநடுக்கங்கள் மட்டும் ஜப்பானில் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியான இஷினோமகிக்கு தென்கிழக்கில் 45 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கம் 63 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்க ஆராய்சி மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை ஏதும் தகவல் இல்லை.