Monday, January 20, 2025
Homeகல்விபொது அறிவுத் துணுக்குகள்

பொது அறிவுத் துணுக்குகள்

- Advertisement -

பொது அறிவு​​- pothu arivu

- Advertisement -

எப்பொழுதும் சிறுவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கையின் போது அவர்களின் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த விடயங்களை உள்வாங்குவது சிறந்த ஒரு முன்னெற்ற செயற்பாடாகவே கருதப்படுகின்றது. அந்த வகையில் சிறுவர்கள் மட்டும் அன்றி பாடசாலைக் கல்வியை முடித்த மணவர்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாக இந்த பொது அறிவு கற்றலாந்து முக்கியத்துவம் அடைகின்றது.ஆகயால் பின்வரும் அறிவுத் துனுக்குகள் பாடசாலை சிறுவர்கள் முதல் பெரியவர் வரை பயனுள்ளதாக அமையும்.

பொது அறிவு​​- pothu arivu

- Advertisement -

விஞ்ஞானிகளும் கண்டு பிடிப்புகளும்
1. மின்காந்தக் கொள்கை – மாக்ஸ்வெல்
2. எலக்ட்ரான் – J.J.தாம்சன்
3. மின்பல்பு – தாமஸ் ஆல்வா எடிசன்
4. ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு – J.B.பிரீஸ்ட்லி
5. ஈர்ப்பு விதி – நியூட்டன்
6. பெனிசிலின் – சர் அலெக்சாண்டர் பிளெமிங்
7. கோள்களின் இயக்க விதி – கெப்ளர்
8. சூரியக் குடும்பம் – கோபர் நிகஸ்
9. தனிம வரிசை அட்டவணை – மெண்டலீஃப்
10. நீராவி எஞ்சின் – ஜேம்ஸ் வாட்
11. புவிஈர்ப்புவிசை – சர் ஐசக் நியூட்டன்
12. சுருக்கெழுத்து – சர் ஐசக் பிட்மேன்
13. கதிரியக்கம் – ஹென்றி பெக்குரல்
14. ரேடார் – சர் ராபர்ட் வாட்சன் வாட்
15. செல் – ராபர்ட் ஹூக்
16. தொலைபேசி – கிரகாம்பெல்
17. மக்கள் தொகை கோட்பாடு – மால்தஸ்
18. ஜெட் விமானம் – ஃபிராங்க்விட்டில்
19. குருடர்களுக்கான எழுத்து முறை – லூயி பிரெய்லி
20. தொலைகாட்சி – J. L. பெயர்டு
21. அம்மை தடுப்பூசி – எட்வர்டு ஜென்னர்
22. போலியோ தடுப்பு மருந்து – டாக்டர்.ஜோன்ஸ் சால்க்
23. டைனமைட் – ஆல்பர்ட் நோபல்
24. இன்சுலின் – பேண்டிங்
25. இதயமாற்று அறுவை சிகிச்சை – டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் (இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)
26. இரத்த ஒட்டம் – வில்லியம் – ஹார்லி
27. குளோரோஃபார்ம் – ஹாரிஸன் சிம்ப்ஸன்
28. வெறி நாய்க்கடி மருந்து – லூயி பாய்ஸ்டியர்
29. எலக்ட்ரோ கார்டியோ கிராம் – எயின் தோவன்
30. பாக்டீரியா – லீவன் ஹூக்
31. குவாண்டம் கொள்கை – மாக்ஸ் பிளாங்க்
32. எக்ஸ்-ரே – ராண்ட்ஜன்
33. புரோட்டான் – ரூதர்போர்டு
34. நியூட்ரான் – ஜேம்ஸ் சாட்விக்
35. தெர்மா மீட்டர் – ஃபாரன்ஹூட்
36. ரேடியோ – மார்கோனி
37. கார் – கார்ல் பென்ஸ்
38. குளிர்சாதனப் பெட்டி – ஜேம்ஸ் ஹாரிசன்
39. அணுகுண்டு – ஆட்டோஹான்
40. ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு – மேடம் மேரி கியூரி
41. ஹெலிகாஃப்டர் – பிராக்கெட்
42. லாக்ரதம் – ஜான் நேப்பியர்

- Advertisement -

விஞ்ஞான கண்டு பிடிப்புக்களை பற்றி அறிந்த நாம் தற்போது பொதுவான உலக பிரச்சனைகள் மற்றும் கண்டு பிடிப்புக்களை பற்றி நோக்குவோம்.

2050க்குள் சூரியனின் வெப்பம் குறைந்து விடுமாம் ..
அடுத்த 30 ஆண்டுகளில் சூரியன் மங்கும் என்றும் மினி ஐஸ்ஏஜ்(Ice Age) உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சூரியனில் இருந்து வரும் வெப்பக் கதிர் வீச்சால் பூமியின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இதனால் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரிக்கிறது. அதேபோல் புவி வெப்ப மயமாதல், காலநிலை மாற்றம் போன்றவற்றால் பூமி அழிவை நோக்கி செல்வதாகவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். கடந்த 2015, 2016, 2017 ஆகிய 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிகம் வெப்பம் பதிவான ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் விழுங்கிய கற்கால குடியிருப்பு

பிரிட்டனை ஒட்டிய ஐரோப்பாவுக்கு அருகில் உள்ள வட கடலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கடல் விழுங்கிய கற்கால குடியிருப்பு ஒன்றை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகின் பெரும் பகுதி பனிக் கட்டியாய் உறைந்திருந்தது. அது கடைசி பனிக் கட்டிக் காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்த வேட்டைச் சமூகத்தின் குடியிருப்பு ஒன்றை கடல் விழுங்கியது. சமீபத்தில் வடக்கு கடலில் ஆர்வி பெல்ஜிகா என்ற ஆராய்ச்சி கப்பலில் பயணித்த விஞ்ஞானிகள் சரித்திர காலத்துக்கு முந்தைய வனப் பகுதியையும் வேட்டைச் சமூக குடியிருப்பு ஒன்றையும் கண்டறிந்தனர்.
பல ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள டாக்கர்லேண்ட் என்று அழைக்கப்படும் இந்த நிலப் பகுதியை கண்டறிந்திருப்பது புதிய வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், இது ஆச்சரியம் மட்டு அல்ல, அந்த கால கட்டத்தைச் சேர்ந்த பல பொருட்களையும், படிமம் ஆகிவிட்ட வனப் பகுதியையும் கண்டு பிடித்துள்ளோம் என்றார்கள்.
12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பனிக் கட்டியாய் உறைந்திருந்த வடக்குக் கடல் பகுதியில் பனி உருகத் தொடங்கிய போது வெளிப்பட்டது இந்த வனப்பகுதி. ஆனால், அதன் பிறகு கடல் நீர் அளவு உயரத் தொடங்கியது. 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடல் அளவு உயர்ந்ததில் இந்த வனப்பகுதியும், கற்கால குடியிருப்பும் கடலுக்குள் மூழ்கியது என்கிறார்கள்.

பொது அறிவு​​- pothu arivu

25 தனித்தனி நோய்களே நீரிழிவு – புதிய ஆய்வு
இரண்டு வகைகளை விட அதிக பிரிவுகள் நீரிழிவு நோய் இருக்க முடியுமா? நீரிழிவு என்பது 5 தனித்தனி நோய்களால் உருவாகுவது என்றும் ஒவ்வொரு வடிவத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை அளவு இருப்பதை தான் நீரிழிவு என்று கூறுகின்றனர்.
இது பொதுவாக வகை 1, வகை 2 என இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது. ஆனால், நீரிழிவுக்காக மருந்து எடுத்துக் கொள்வோரின் நிலை மிகவும் சிக்கலாக இருப்பதாக ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆய்வாளர்கள் நம்புகின்றனர். எதிர்காலத்தில் நீரிழிவுக்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றி தற்போதைய ஆய்வு அறிவித்திருக்கிறது என்று கூறுகின்ற நிபுணர்கள், தற்போது வழங்கப்படும் சிகிச்சைகளில் ஏற்படும் மாற்றங்கள் உடனடியாக நிகழப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.
உலக அளவில் வயது வந்த 11 பேரில் ஒருவரை பாதிக்கின்ற நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, உறுப்பு நீக்கம் ஆகியவற்றுக்கான ஆபத்துக்களை அதிகரிக்கிறது. வகை 1நீரிழிவு, நோய் எதிர்ப்பு அமைப்பு தொடர்புடைய நோயாகும். பிரிட்டனில் உள்ள சூழ்நிலையில் சுமார் 10 சதவீத மக்களை இது பாதிக்கிறது.
இது உடலில் இன்சுலின் சுரக்கின்ற பீட்டா செல்களை தாக்குகின்றது. எனவே, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கான ஹார்மோன் சுரக்காமல் போய்விடுகிறது. வகை 2 நீரிழிவு மோசமான உணவு பழக்கத்தால் ஏற்படும் நோயாகும். உடலிலுள்ள கொழுப்பு இன்சுலின் செயல்படுவதை பாதிக்க செய்கிறது. ஸ்வீடனிலுள்ள லுன்ட் பல்கலைக்கழக நீரிழிவு மையமும், ஃபின்லாந்தின் மூலக்கூறு மருத்துவ கழகமும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், 14 ஆயிரத்து 775 நோயாளிகள், அவர்களின் ரத்த பரிசோதனை விபரங்களோடு பரிசீலனை செய்யப்பட்டுள்ளனர்

இவ்வாறன பொது அறிவு துணுக்குகளை அறிந்திருக்க வேண்டிய கட்டயத்தில் இருக்கின்ற சிறுவர்களுக்கான சிறந்த தமிழ் இணையத்தளமாக காணப்படும் என்பதில் ஐயம் இல்லை

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.