தைப்பெண்ணே
வருக வருக
உன் வரவால் …எம்
மக்கள் மனம்..
மகிழட்டும்..
துவண்டு கிடக்கும்
எம் …சம்முதாயம்..
துணிந்து எழட்டும்
வாடீக் கிடக்கும்..
வயல் வெளியெங்கும்..
வளங்கள்…பெருகட்டும்….
பொங்கும் மங்களம்
எங்கும் பொழிய
பொங்கலே நீ…
பொங்கி….வழிக…..
நிலாமுற்றத்து உறவுகள் அனைவர்க்கும்
எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்
***************
மனங்கள் பொங்கி வழியும் நாளில் ……………
பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா?
சிறகில் தீ பிடித்தாலும் …
அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்!
வருக தை பொங்கலே…!!
******************
பழையன கழிதலும்
புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த
நல்லதோர் முதுமொழியாம்
தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில்
விடியும் வேளை நாமெழுந்து நீராடி
நற்காலைப் பொழுதினிலே
பொங்கல் விழா தனிப்பெருந்
திருவிழாக்கோலம் பூணுகிறது.
தைப்பொங்கல் திருவிழா என்பது
ஒரு சமய விழா அல்ல!
தமிழரின் பண்பாட்டு விழா!
தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாடும் நாள்!
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
*******************
உறவுகளின் புன்னகை வீட்டில் பொங்க இனம் புரியா இன்பம் மனதில் பொங்க..
நபர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க பொங்கட்டும் தை பொங்கல்.
*****************************
கடன் வாங்கி தவிக்கும் உழவன் உள்ளுக்குள் பொங்குகின்றான்..
காசு பணம் சேர்த்து வைத்தவன் இல்லத்தில் பொங்குகின்றான்..
****************
உழவனை போற்றிட பிறக்குது ஒரு திருநாள்
ஆதவனை போற்றிட உதிக்கிறது ஒரு திருநாள்
மாட்டினை போற்றிட துள்ளி வருகுது ஒரு திருநாள்
உலக மக்கள் கூடி ஒன்றிணைய வருகிறது பொங்கல் திருநாள்.
*****************
வருகிறது புது பொங்கல் வளம் தரும் தை பொங்கல்
காளைகள் சீறிப்பாய காத்துக்கிடக்கு வாடி
வாசல் அரிசி மாவில் கோலமிட்டு ஜொலிக்கிறது வீடு வாசல்
****************
பச்சரிசி அச்சு வெல்லம் கலவை செய்து பொங்கலிட்டு
பகலவனை வணங்கிவிட்டு பகைவரையும் வாழ்த்துவோமே
****************
சந்தோஷமும் செல்வமும் நம் வாழ்வில் பொங்கி வர
சாதி மத பேதமின்றி சங்கடங்கள் ஏதுமின்றி கை கூப்பி வரவேற்போம்
தை பொங்கல் திருநாளை
***************
மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது
பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
*****************
வியர்வையை மண்ணுக்கு உரமாக்கி..
வெயில் மழை பாராமல் பாடுபட்டு..
விளைத்தெடுத்த நெல்மணிகளை புதுப்பானையில் போட்டு பொங்கலிட்டு…
பொங்கலோ பொங்கலென்று அனைவரும் சேர்ந்து கூறிடுவோம்..
****************
உழவனுக்கு ஒரு திருநாளாம் உலகம் போற்றும் நன்னாளாம்
சூரியனை வணங்கிவிட்டு சுருக்கு பையில் காசு எடுத்து
தித்திக்கும் கரும்பு வாங்கி தெவிட்ட தின்னும் திருநாளாம்
****************
அதிகாலை வேளையில் கதிரவன் வருகை கண்டு
இல்லத்தின் முற்றத்தில் வண்ணக்கோலமிட்டு
சாணம் கொண்டு அறுகம்புல்லில் பிள்ளையாரும் பிடித்து
கிழக்கே பார்க்க குத்துவிளக்கும் ஏற்றி
வெத்திலையும் பாக்கும் சந்தனமும் ஊதிபக்தியும்,
சாம்பிராணியும் ஊரெங்கும் மணக்க
கரும்பும் வாழைப்பழங்களும்
இனிப்பு பலகாரமும் ஒரு பககம் இருக்க
மூன்று கல்வைத்து அதில் விறகு வைத்து கற்பூரம் கொண்டு
தீ மூட்டி இறை வழிபாட்டுடன் புதுப்பானை அதிலிட்டு
அரிசியை அள்ளி ஆதவனை வணங்கியே
அப்பாவைத்தொடர்ந்து
அனைவரும் பானையிலிட்டு
தேனும் சர்க்கரையும் பாலும் சேர்த்து
தித்திக்கும் பொங்கல் செய்து
ஞாயிறுக்குப் படைத்து
பட்டாசுகள் விண்ணைப்பிளக்கும்
ஓசையுடன் வெடிவெடித்து
அயலவர் உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் என்று கூடி
கொடுத்துப்பரிமாறி ஒன்றாயிருந்து
உழவருக்கு நன்றி சொல்லி
மகிழ்ச்சிவெள்ளத்தில் மகிழ்ந்த அத்திருநாள்.
நினைக்கையில் நெஞ்சம் கொஞ்சம் வேதனை தருகிறது
நிலையற்ற வாழ்வால் நித்தமும் பொங்கல் முற்றத்தில் நிலையாகின்றது..
தனிஈழத்தின் தரணியில் அலையென மக்கள் பொங்கும் நிலை.
********************