Friday, November 22, 2024
Homeகல்விகட்டுரைபொலித்தீன் பயன்பாடு -கட்டுரை #Polythene article#Polythene Tamil essay#katturai

பொலித்தீன் பயன்பாடு -கட்டுரை #Polythene article#Polythene Tamil essay#katturai

- Advertisement -

இலகுவான பயன்பாடு மற்றும் குறைந்த செலவு காரணமாக பொலிதீன் பாவனையின்பால் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். சனத்தொகைப் பரம்பல் மற்றும் பொருளாதார செயற்பாடுகளை கருத்திற்கொண்டு நோக்குகையில் இறக்குமதி செய்யப்படு பயன்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அதிகரித்து வரும் பொலிதீன் பாவனையின் காரணமாக மனிதர்களுக்கு மட்டுமன்றி ஏனைய உயிரினங்களின் வாழ்விற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் பொலிதீன் இற்று அழிந்து போவதற்கு 50 – 400 ஆண்டுகள் காலம் எடுக்கும். எனவே பாவனைக்கு உட்படுத்தப்பட்ட பொலிதீன் மண்ணிற் சேர்வதால் மண் வளமற்றுப் போவதுடன் மண்ணில் அது ஒரு படலமாக தங்கிவிடுவதால் மண்ணில் மழை நீர் உறிஞ்சப்படுவதை தடை செய்கிறதுமேலும் நகர்ப்புற வீதிகளிலும் குடியிருப்புப் பிரதேசங்களிலும் நீர் வழிந்தோடும் குழாய் வழிகளில் பொலிதீன் தங்கிவிடுவதால் அவைகளில் அடைப்பு ஏற்படும். இதனால் சிறியளவிலான மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் நகர்ப்புற மற்றும் ஏனைய பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படுகின்றது.

- Advertisement -

அதேபோன்று பொலிதீனை எரிக்கும் போது வெளியேறும் தீங்கு விளைவிக்கும் வாயுவினை சுவாசிப்பதால் இளைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களும் கண்பார்வைக் குறைவும் ஏற்பட வாயப்புண்டு. மனிதர்களால், பாவனையின் பின்னர் பல்வேறு இடங்களிலும் இடப்படும் பொலிதீன் உறைகள் வீதிகளில் உலவும் விலங்குகளால் உட்கொள்ளப் படுவதால் அவை இறக்கவும் நேரிடுகின்றதுடன், அத்தகைய பொலிதீன் உறைகளின் மேல் நீர் சேர்வதால் நுளம்புகள் பெருக்குவதற்கும் ஏதுவாக அமைகின்றது.இதனால் டெங்கு, மலேரியா மற்றும் யானைக்கால் நோய் போன்ற நுளம்புகளால் பரவக் கூடிய நோய்களின் படிப்படியான அதிகரிப்பினை காணலாம்.

politheen_katturai_polythene
polythene -tamil essay

உலகளாவிய ரீதியில் பிளாஸ்ரிக்கின் தீமைகள் பற்றி உரத்துப் பேசப்படுகின்ற இன்றைய கால கட்டத்தில் பிளாஸ்ரிக் பாவனையை கட்டுப்படுத்துவது பற்றி எமது நாடும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கின்றது. இது ஓர் ஆரோக்கியமான ஆரம்பம். எனினும் இதில் பயணிக்க வேண்டிய நெடுந்தூரம் அச்சுறுத்தலாகவும், அசாத்தியமாகவும் தெரிகின்றது.பிளாஸ்ரிக் கடந்த அரை நூற்றாண்டுகளாக எமது மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ள நிலையில் அதிலிருந்து விடுபடுவது சிரமம்தான்.. பிளாஸ்ரிக், பொலித்தீன் ஆகியவற்றால் கிட்டிய இலகுத் தன்மையும், சௌகரியங்களும் மனிதரோடு இவற்றை பிரிக்க முடியாததாக ஆக்கிவிட்டுள்ளது. பிளாஸ்ரிக்கின் வருகை மனிதருக்கு எவ்வளவோ நன்மைகளை கொண்டு வந்த போதிலும் அவற்றின், கழிவகற்றல்தான் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

பிளாஸ்ரிக் கழிவுகள் சிறு சிறு துகள்களாக மாற்றம் கண்ட போதிலும் அது உக்கி அழிவதில்லை. இதனால் சூழலுக்கும், காலநிலைக்கும், ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாகியுள்ளது. பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகள் நிலத்திற்கும், நிலத்தடி நீருக்கும், கடல் நீருக்கும் மாத்திரமன்றி வளிமண்டலத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் மனிதர் மாத்திரமன்றி, விலங்குகள், கடல் உயிரினங்கள் என அனைத்து உயிரினங்களுக்கும் ஆரோக்கிய கேட்டினை ஏற்படுத்துகின்றது. தாவரங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நுண்ணியிர்க் கிருமிகள் கூட விதிவிலக்கல்ல.

- Advertisement -
politheen_katturai_polythene
polythene -tamil essay

மாசுபடும் நீர்

மனிதனின் வாழ்வுக்கு இன்றியமையாதன காற்று, நீர், உணவு, உறையுள் என்பனவையாகும். மனித வாழ்வை இலகுபடுத்த வந்த பிளாஸ்ரிக், பொலித்தீன் என்பன இவையாவற்றையுமே மாசுபடுத்தி மனித வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்ரிக், பொலித்தீன் சிறுசிறு துகள்களாகி கண்ணுக்குப் புலப்படாத மைக்குரோன் அளவில், அதைவிடவும் இன்னமும் சிறியதான நனோ அளவீடுகளில் சூழல் எங்கும் பரவி கலந்து பல வழிகளில் மனித உடலை அடைந்து கேடு விளைவிக்கின்றன.

குடி நீரை இது மாசுபடுத்துவது பற்றி இந்த கட்டுரையில் நோக்குவோம். நாம் பாவித்துவிட்டுக் கழிக்கும் பிளாஸ்ரிக், பொலித்தீன் கழிவுகள் மீள் சுழற்சிக்கு கொண்டு வரப்படுவது மிகவும் சொற்பமே ஆகும். மண்ணில் புதைக்கப்படுகின்ற இக்கழிவுகள் உக்கி அழிவதில்லை.அதேவேளை அவற்றில் ஒரு பகுதி சிறு துகள்களாகி மண்ணில் இருந்து மழை நீருடன் நிலத்தடி நீரோடு இணைகின்றன. பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகள் எரிக்கப்படும் போதும் அவை அதிக மாற்றமின்றி வளிமண்டலத்தில் சேர்கின்றன. இத்துகள்களும் மழை நீரோடு கலந்து நிலத்தை வந்தடைந்து கீழிறங்கி நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றது. இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து எமது குடிநீரும் மாசடைகின்றது.

மழை வீழ்ச்சியுடன் கலந்து வரும் இதன் துகள்கள் ஆற்று நீரையும், நீர்த் தேக்கங்களையும் மாசுபடுத்துகின்றன. இதனால் ஆற்றிலிருந்து பெறப்படும் குடிநீரும் மாசமடைந்தே காணப்படுகின்றது. வடிகட்டலையும், சுத்திகரிப்பையும் தூண்டும் அளவுக்கும் பிளாஸ்ரிக் துகள்கள் மிகச் சிறியனவாக உள்ளமையால் குடிநீர் மாசினைத் தவிர்க்க முடியவில்லை.எனது பாட்டனார், இன்றைய தலைமுறையினர் தண்ணீரைப் பற்றி அதிகம் பயப்படுவதாகவும், தான் தனது பள்ளி நாட்களில் நீர்க்குழாபில் ஏந்தி தண்ணீர் பருகியதையும் பற்றியும் கூறுவார்.

politheen_katturai_polythene
polythene -tamil essay

இன்றும் இந்த வயோதிபத்திலும் தான் ஆரோக்கியமாக இருப்பதாக்க் கூறுவார். ஆனால் உண்மை நிலைமை அவரது இளமைக் காலத்தில் சூழலோ, நீரோ இன்று போல பாசுபட்டிருக்கவில்லை. அன்று பாதுகாக்கப்பட்ட கிணற்று நீரை பயமின்றி குடிக்க முடிந்தது. கொதித்து ஆறவைத்துக் குடித்தால் நோய்க் கிருமிகள் பற்றியும் அஞ்சத் தேவையில்லை. இன்று அப்படியல்ல. சூழல் மிகமோசமாக மாசுபட்டுள்ளது. கொதிக்க வைப்பதனாலோ, பில்ரர் மூலம் வடிகட்டுவதனாலோ பிளாஸ்ரிக் துகள்களை முழுமையாக அகற்ற முடியாது.
உலகளாவிய ரீதியில் இன்று குடிநீரில் 80 வீதத்திற்கு மேற்பட்ட இடங்களில் பிளாஸ்ரிக் மாசுகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் பிளாஸ்ரிக் மாசுபட்ட குடிநீர் நிறைந்ததாக இனம் காணப்பட்டுள்ளது.

பிளாஸ்ரிக் பொலித்தீன் மாசு ஏற்படுத்தும் ஆரோக்கிய கேடுகள் பற்றி இன்று அறியப்பட்டுள்ளன. பிளாஸ்ரிக், பொலித்தீன் என்பவற்றின் தீமைகள் பற்றி நீண்ட காலம் பேசப்பட்டு வந்தாலும் அவை பற்றிய அச்சம் மனிதரிடையே ஏற்பட்டதில்லை. பிளாஸ்ரிக் மனித உடலுக்கு பெருங் கேட்டினை ஏற்படுத்துகின்ற போதிலும், நோய்க் கிருமிகள் போல இவை உடனடி நோய்களை ஏற்படுத்தாமையே இதற்குக் காரணம், எனினும் இவை ஏற்படுத்துகின்ற பாதிப்பினால் உண்டாகின்ற உடல் ஆரோக்கியக் கேடும் நீண்டகாலப் பாதிப்பினால் ஏற்படுகின்ற மரணங்களும் அதிகம். எனினும் இது உணரப்படுவதில்லை. தற்போது ஏற்படுத்தப்படுகின்ற விழிப்புணர்வு மூலமே இது பற்றிய அறிவு மக்களிடையே ஏற்பட்டு வருகின்றது.

பிளாஸ்ரிக் பொலித்தீன் ஏற்படுத்தும் நோய்கள்

பிளாஸ்ரிக் துகள்கள் மனித உடலை தண்ணீர், உணவு சுவாசம் என்பவற்றின் ஊடாக வந்தடைகின்றன. அதிலும் நீருடன் உடலில் கலக்கும் துகள்களே அதிகம் என்று அறியப்பட்டுள்ளது. பிளாஸ்ரிக்கின் துகள்கள் மிகச் சிறிய அளவில் இருப்பதால் இவை சமிபாட்டுத் தொகுதியில் அகத்துறிஞ்சப்பட்டு இரத்தச் சுற்றுடன் கலந்து சகல உறுப்புகளையும் சென்றடைகின்றது.

politheen_katturai_polythene
polythene -tamil essay

கலச் சுவர்களையும் இவை ஊடறுத்துச் செல்லக் கூடியதாக இருப்பதால் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இவற்றை உடலை விட்டு வெளியெற்றவும் முடியாமல் ஈரல், சிறுநீரகம் என்பன சிரமத்தை எதிர்நோக்குகின்றன. இதனால் இத்துகள்களின் படிவால் இவ் உறுப்புகள் மெது மெதுவாக பாதிப்புக்குள்ளாகின்றன. காலவோட்டத்தில் இவற்றின் செயற்திறன் பாதிப்புக்குள்ளாவதுடன் இறுதியில் இவ்வுறுப்புகள் செயலிழக்கும் நிலைமை உருவாகின்றது. நமது உடலில் முக்கிய உறுப்புகளில் இவை அடங்கும் என்பதை அறிவீர்கள்.பிளாஸ்ரிக், பொலித்தீன் என்பவற்றால் ஏற்படுகின்ற மிக முக்கியமான நோய் புற்றுநோயாகும். இன்று நாம் டெங்கு பரவுதலைப் பற்றி அச்சமடைவதைப் போல இதற்கு அஞ்சுவதில்லை.எனினும் புற்றுநோய் ஏற்படுத்தும் மரணம் டெங்கு மரணங்களை விட பல மடங்காகும். சூழலில் சேரும் பிளாஸ்ரிக் கழிவுகள் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கும் ஏற்ற சூழலை ஏற்படுத்துகிறது. பிளாஸ்ரிக் துகள்கள் கருவிலுள்ள குழந்தைகள் குறைபாட்டுடன் பிறப்பதற்கும் காரணமாகின்றது.புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றங்கள், வெள்ளப் பெருக்கு, மண்சரிவு, வடிகால் பிரச்சினைகள், சூழலில் கிருமிகளினதும், காவிகளினதும் பெருக்கம் என்பவற்றாலும் பிளாஸ்ரிக், பொலித்தீன் என்பன மனித ஆரோக்கியத்திற்கு சவாலாக உள்ளது. நீர் மாசடைவதை உடனே தடுக்க வேண்டும்.

 

 

*********************************

kidhours-upcoming

polythene, black polythene, 1000 gauge polythene, plastic polythene, 500 gauge polythene, polythene bags price, greenhouse polythene, clear polythene, british polythene industries, polythene packaging, polythene products, black polythene bag, biodegradable polythene, imperial polythene, polythene company, 1200 gauge clear polythene, uv polythene, uv treated polythene, anti fog polythene bags, hdpe polythene, mihir polythene clear bags, plastik polythene, water polythene, clear plastic polythene, disposal polythene, metro polythene, polythene mattress bags, polythene 10 mil, 720 gauge polythene, polythene near me, plastic bag gauge,Insurance ,Gas/Electricity,Loans,Mortgage,Attorney,Lawyer,Donate,Conference Call
Degree,Credit

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.