Thursday, November 21, 2024
Homeகல்விசுற்றாடல்மேகம், தண்ணீர், கொண்ட புதிய கோள் கண்டுபிடிப்பு planet tamil first news

மேகம், தண்ணீர், கொண்ட புதிய கோள் கண்டுபிடிப்பு planet tamil first news

- Advertisement -

planet tamil news

- Advertisement -

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, பூமியில் இருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் ‘டிஓஐ 1231 பி’ (TOI-1231 b) என்கிற புதிய கோளை கண்டுபிடித்தது. இந்த கோள் பூமியை விட மூன்றரை மடங்கு பெரியது என்று தெரிவித்துள்ளது. அது நெப்டியூன் கோளின் மறு உருவம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோளில் பூமியைப் போலவே தண்ணீர் மற்றும் மேகங்கள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோள் ‘ரெட் டுவார்ஃப்’ எனப்படும் சிவப்பு குள்ளன் என்கிற நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது என்றும், சூரியனை விட அளவில் சிறியதான இந்த சிவப்பு குள்ளன் நட்சத்திரத்திற்கு சூரியனைவிட வயது அதிகம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

- Advertisement -

இந்த சிவப்பு குள்ளன் நட்சத்திரம் இருக்கும் பகுதி குளுமையானது என்பதால், இந்த புதிய கோளும் குளுமை நிறைந்ததாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த கோளின் தட்பவெட்பம் அறிய பார்கோட் பயன்படுத்தப்படுகிறது. இந்த கோளில் ஹைட்ரஜன் வாயு அணுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -
planet tamil news kidhours
planet tamil news kidhours

சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலமாகவே இந்த கோளைக் காண முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ‘டிஓஐ 1231 பி’ கோளில் சராசரியாக 140 டிகிரி பாரன்ஹீட் (60 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், இது போன்ற அளவிலும், வெப்பநிலையிலும் நமக்குத் தெரிந்த ஒரே ஒரு கோள் இதுதான் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நாசா விஞ்ஞானியான டாக்டர் ஜெனிபர் பார்ட் தலைமையில், தென் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள விஞ்ஞானிகள் இந்த கோளை ஆய்வு செய்து வருகின்றனர். நியூ மெக்சிகோ பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும் ‘டிஓஐ 1231 பி’ கோள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விளக்கம் அறித்துள்ளனர்.

kidhours- planet tamil

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.