உலகின் 70% நன்னீர் அண்டார்க்டிகா கண்டத்தில் உள்ளது. புவி வெப்பமயமாதலால் இங்குள்ள பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இம்மாதம் 7-ஆம் தேதி 65 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியது. அண்டார்க்டிகா வரலாற்றிலேயே இவ்வளவு அதிக வெப்பநிலை பதிவானது இதுவே முதல்முறை என்றும், எதிர்வரும் காலங்களில் வெப்பநிலையின்
அளவு தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சின்ஸ்ட்ராப் பெங்குயின்களின் எண்ணிக்கை கடைசியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய கணக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை 75%-க்கும் மேலாக குறைந்திருப்பதாக காலநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்டார்க்டிக் தீபகற்பத்தின் வடகிழக்குப் பகுதியும், முக்கியமான பெங்குயின் வாழ்விடமுமான எலெஃபண்ட் தீவில், அதிர்ச்சி தரும் அளவில் பெங்குயின்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அப்பகுதிக்கு பசுமைப் பயணம் மேற்கொண்ட சுயாதீன ஆய்வாளர்களின் குழு தெரிவித்துள்ளது.
***
kidhours_news
#bird#pigeon#love birds#ostric#crow#hummingbird#african love birds#woodpecker
cockatiel#vulture#cockatoo#kiwi bird#finch#albatross#swallow#crane bird
mockingbird#macaw#magpie#macaw parrot#penguin#penguin-rare