Friday, February 21, 2025
Homeசிறுவர் செய்திகள்இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே அமைதி பேரணி#Peace rally#tamil_latest_news#tamilfirstnews

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே அமைதி பேரணி#Peace rally#tamil_latest_news#tamilfirstnews

- Advertisement -

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனை முதல் உலகப் போர் காலத்தில் இருந்தே உள்ளது. இரண்டு நாடுகளுமே ஜெருசலேம் தான் எங்களின் தலைநகர் என்று உரிமை கொண்டாடி வருகிறது. ஏனெனில், ஜெருசலம் பகுதியை இரு நாடுகளுமே தங்களின் புனித பூமியாக பார்க்கிறது. ஜெருசலேம் மட்டுமின்றி காசா, மேற்கு கரை போன்ற பகுதிகளும் தங்களுக்கு தான் சொந்தம் என இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.

- Advertisement -

 கறுப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை ஆபத்தானதா ?

கிழக்கு ஜெருசலேமில், அல்-அக்ஸா மசூதியில், இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய காவல் துறை மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் ஜெருசலேம் நோக்கி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசியது. ஆனால், இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பான Iron Dome மூலம் இவை தடுத்து நிறுத்தப்பட்டதால், பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.

- Advertisement -

latest tamil news

- Advertisement -

சிறுவர் சுகாதாரம் – கறுப்பு பூஞ்சை நோயால் யார் யாருக்கு ஆபத்து..?

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா (Gaza) பகுதியில், இருந்த அல்ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் பிற செய்தி ஊடகங்களின் அலுவலகங்கள் இருந்த மிகப்பெரிய கட்டிடம் தகர்க்கப்பட்டது.இஸ்ரேல்-ஹமாஸ் (Israel – Hamas) இடையிலான மோதல்கள் தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற்று வந்த நிலையில், அது மூன்றாம் உலக்போராக உருவெடுக்குமே என்ற அச்சம் உலகில் நிலவியது. இந்நிலையில், உலகிற்கு ஒரு நிம்மதி அளிக்கு செய்தியாக, வெள்ளிக்கிழமை (மே 21, 2021), இஸ்ரேல்- ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில், இஸ்ரேலிய நகரமான டெல் அவிவில் (Tel Aviv) ஆயிரக்கணக்கானோர் அணிதிரண்டு, யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் அமைதி ஏற்பட என கோரி பேரணி நடத்துகின்றனர்.

வெடித்து சிதறிய எரிமலை உதவிக்கரம் நீட்டிய ஆசிய நாட்டு ராணுவம்

ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரம் முழுவதும் அணிவகுத்துச் சென்ற பின்னர் மத்திய ஹபீமா சதுக்கத்தில் கூடி அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.பாராளுமன்றத்தின் பிரதான அரபு கட்சியின் தலைவரான அய்மான் ஓதே, இஸ்ரேலுடன் சேர்ந்து ஒரு பாலஸ்தீனிய அரசை நிறுவ வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஓதே கூறினார்: “இங்கே இரண்டு தரப்பு மக்களும் உள்ளனர், இரு தரப்பு மக்களுக்கும் அமைதி வேண்டும்.” என்றார்.இஸ்ரேலிய எழுத்தாளர் டேவிட் கிராஸ்மேன், இன்று போர் என்பது அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் இல்லை, ஆனால் இரு தரப்பிலும் நிம்மதியாகவும் நியாயமான நட்புறவு வேண்டும் என கோருபவர்கள் நடத்தும் போர். இரு தரப்பிலும் உள்ளவர்கள், வெறுப்பு மற்றும் வன்முறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.

 

kidhours

tamil,tamil to english,how tall is peppa pig,how tall is kevin hart,how tall is ariana grande
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,tamil calendar,tamilwin,tamil movie download,tamil typing
,tamil new movies,tamil new year 2020,tamil actress,tamil movies 2020,tamil alphabet
,tamil rockers isaimini,tamil new year,tamil comedy movies,tamil google translate
,tamil letters

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.