Sunday, November 3, 2024
Homeபெற்றோர்மாணவர் தேர்ச்சி அறிக்கையில் (Report/ Rank Card) கையெழுத்து போடும் போது பெற்றோர் கவனிக்க வேண்டியவை

மாணவர் தேர்ச்சி அறிக்கையில் (Report/ Rank Card) கையெழுத்து போடும் போது பெற்றோர் கவனிக்க வேண்டியவை

- Advertisement -
happy-report-card-time-kidhours
happy-report-card-time-kidhours

உங்கள் வீட்டுப் பிள்ளைகள் தேர்ச்சி அறிக்கையில் கையெழுத்து கேட்கும்போது பெற்றோர் தவறாமல் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வகுப்பு ஆசிரியர் தேர்ச்சி அறிக்கையைக் கொடுத்துப் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வர வேண்டும் எனச் சொன்னதும் வகுப்பின் பெரும்பான்மையான மாணவர்களுக்குப் பயம் தொற்றிக்கொள்ளும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்துவிட்ட மதிப்பெண்களுக்கு அப்பா/அம்மாவிடம் என்ன பதில் சொல்வது எனப் பதற்றமாகிவிடுவர்.

அந்தப் பதற்றமே சிலரை அப்பாவின் / அம்மாவின் கையெழுத்தைத் தானே போட வைத்துவிடுகிறது. உங்கள் வீட்டுப் பிள்ளைகள் தேர்ச்சி அறிக்கையில் கையெழுத்து கேட்கும்போது நீங்கள் தவறாமல் கவனிக்க வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

- Advertisement -

1. முதலில், தேர்ச்சி அறிக்கையை உங்களிடம் காட்டுவதற்குப் பிள்ளைகளிடமிருக்கும் அச்சத்தை உதறச் செய்ய வேண்டும். துணிவோடு வந்து, ரேங்க் கார்டில் உள்ள மதிப்பெண்கள் குறித்துப் பேசுமளவுக்கான உறவை நீங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.

- Advertisement -

2. ஒப்பீடு என்பது உங்கள் பிள்ளை இதற்கு முந்தைய தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பெண்களுக்கும் இப்போதைய தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பெண்களுக்கும்தான் தவிர, மற்ற பிள்ளைகளின் மதிப்பெண்களோடு அல்ல. இதைப் பெற்றோர் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

3. ஐந்து பாடங்களில் எந்தப் பாடத்தில் மதிப்பெண்கள் குறைந்திருந்திருப்பது எது எனப் பாருங்கள். அதற்கான காரணங்களைப் பிள்ளையுடன் உரையாடுங்கள். பிரச்னை என்னவென்று தெரிந்துகொள்வதுடன் அதைச் சரிசெய்வது குறித்துத் திட்டமிடுங்கள்.

4. மதிப்பெண்கள் பெறுவதில் வகுப்பில் முதல் இடம் என்பது ஒருவருக்குத்தான் கிடைக்கும். அதனால், உங்கள் பிள்ளை ஒருமுறை முதல் இடம் பெற்றால், தொடர்ந்து அதேபோல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பில் இருக்காதீர்கள். எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாரோ அதைப் பாராட்டி, அடுத்து இன்னும் அதிக மதிப்பெண்கள் எடுக்க ஊக்குவியுங்கள்.

pressure-study-kidhours
pressure-study-kidhours

5. ‘மதிப்பெண்கள் குறைவாக இருக்கின்றன’ என்பதைக் கூறி கையெழுத்து போடுவதற்கு மறுக்காதீர்கள். இப்படிச் சொல்வதே பிள்ளையிடம் அச்சத்தை விதைப்பதாகும். அடிப்பது, திட்டுவது போன்றவற்றைச் செய்யும்போது அடுத்த முறை தேர்ச்சி அறிக்கை தந்தால் பிள்ளைகளே பெற்றோரின் கையெழுத்தைப் போட்டுவிடுவர். அதற்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள்.

6. உங்களிடம் தரப்படும் தேர்ச்சி அறிக்கை கிழிந்தோ, மடிந்தோ, கறைபட்டோ இருந்தால் அதைப் பிள்ளைகள்தான் செய்திருப்பார்கள் எனும் முடிவுக்கு வந்துவிடாதீர்கள். பள்ளியில் தரும்போதோ, வாகனத்தில் வரும்போதோ அவ்வாறு ஆகியிருக்கலாம். ஒருவேளை பிள்ளைகளே அப்படிச் செய்திருந்தால் பேசி, அடுத்த முறை கவனமாக இருக்கச் சொல்லுங்கள்.

7. தேர்ச்சி அறிக்கையில் Feedback பகுதியில் ஆசிரியர் குறிப்பிட்டுபவற்றை மறக்காமல் படித்து, அந்தக் குறைகளைச் சரி செய்ய முயலுங்கள்.

8. தேர்ச்சி அறிக்கையில் மதிப்பெண்களத் தவிர, பிள்ளைகளின் வருகை நாள்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாத நாள்களின் எண்ணிக்கை எத்தனை என உங்களுக்குத் தெரியும். அதுவும் ரேங்க் கார்ட்டில் உள்ள விடுப்பு நாள்களின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கிறதா என்று சரி பாருங்கள். வித்தியாசம் இருந்தால், பிள்ளைகள் மற்றும் ஆசிரியரிடம் பேசி, அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

9. தேர்ச்சி அறிக்கையைத் திருப்பித் தரும்போது ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் சொல்லும் விதத்தில் உங்கள் பிள்ளையைத் தயார் செய்யுங்கள். தயங்கியோ, பயந்தோ வகுப்பில் நிற்கும் சூழலிலிருந்து காப்பாற்றுங்கள். முடிந்தவரை ரேங்க் கார்டை நீங்களே பள்ளிக்குக் கொண்டுசென்று கொடுத்து, ஆசிரியரிடம் பேசுங்கள்.

10. மதிப்பெண்கள் குறைவதற்கு, உங்கள் பிள்ளை சரியாகப் படிக்காதது மட்டுமே காரணம் என்று நினைக்காதீர்கள். கண் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருந்து அவரை வகுப்பின் இறுதியில் அமரச் செய்திருந்தாலோ, காது கேட்பதில் குறைபாடு இருந்தாலோ பாடங்களை உள்வாங்குவதில் பிள்ளைகள் சிரமப்படுவர். அதனால், அதுபோல ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து சரி செய்யுங்கள்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.