Tuesday, January 28, 2025
Homeகல்விசிறந்த அர்த்தமுள்ள பழமொழிகளும் விளக்கங்களும்

சிறந்த அர்த்தமுள்ள பழமொழிகளும் விளக்கங்களும்

- Advertisement -

பழமொழிகள்​​-​​​​​​palamolikal

- Advertisement -

ஆயிர கணக்கான  நல்ல அர்த்தங்களை கொண்ட பழமொழிகள் எமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டலும் அதற்கான சரியான அர்த்தங்களை அறிந்து கொள்வது கடினமாகவே உள்ளது சிலவற்றை நாம் பிழையான கோணத்தில் பார்ப்பதும் உண்டு அந்த வகையில் சில அர்த்தமுள்ள பழமொழிகளை காண்போம்

ஓட்டைகப் பலுக்கு ஒன்பது மாலுமி
வெளிப்படையான விளக்கம்:- அதிகம் பேசுபவர்கள் செயலில் தமது திறமையை காட்டுவதில்லை. என்று கூறுவார்களே அது போலத்தான் உலக வழக்கில் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அதன் பெருளை ஆராய்ந்தால் அட்புதமான விளக்கம் கிடைக்காது.
உண்மை விளக்கம்:-ஓட்டைக்கப்பல் என்பது மனித உடலையும்; ஒன்பது மாலுமிகள் என்பது நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது. எனவே தான் இந்த மனித வாழ்கையில் ஒருவனுக்கு மரணம் நேரும் போது அவனுடைய உயிர் முச்சு அந்த உடலின் எந்த ஓட்டை வழியிலேனும் வெளியேரலாம் என்பதற்காக பெரியோர்கள் நிலையற்ற அந்த மனித வாழ்வை குறிப்தற்காக இப் பழமொழியை பயன்படுத்தினர்.

- Advertisement -

பழமொழிகள்​​-​​​​​​palamolikal

- Advertisement -

பந்திக்கு முந்து படைக்கு பிந்து
வெளிப்படையான விளக்கம்:- விருந்து நடைபெரும் இடங்களில் சாப்பிடுவதற்கு முதல் வரிசையும் போர் நடைப்பெரும் இடங்களில் கடைசியாக இருந்தால் தற்பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
உண்மை விளக்கம்:-இந்த பழமொழையின் உண்மையான வடிவம் பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் ஏன்பதாகும். அதாவது நாம் உணவு உண்ணும் பொழுது நமது வலக்கையானது முன்னேபோகும் போர்கலத்தில் வில்லோ அம்போ வாலோ வேலோ ஏந்தி சண்டைப்போடும் போது அதே கை பின்னேபோகும். ஏந்த அளவுக்கு கை பிந்து கிறதோ அந்த அளவுக்கு படைமுந்திச் செல்லும்.

அரப்படிச்சவன் அங்காடி போனாவிற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான்
வெளிப்படையான விளக்கம்:-அரை குரையாககல்விக் கற்றவனால் சந்தையில் எந்தப் பொருலைவும் விற்கவே முடியாது திறமையாக எந்தப் பொருளையும் வாங்கிவரவும் முடியாது.
உண்மைவிளக்கம்:-இப்பழமொழியில் அறம் படித்தவன் என்பது மருவி அரப்படித்தவன் என ஆகிவிட்டது. எனவே இதன் உண்மைத் தன்மை“அறம் படித்தவன்” என்பதாகும். இலக்கிய நுல்கள் அல்லது வேதங்கள் சொல்லும் அறங்களை முழுமையாக கற்றவன் எல்லா வணிகமும் ஒழுங்காக செய்திட முடியாது. சில வியாபாரத்துக்கு சில நெளிவு சுழிவுகள் அறத்தைப் பொருத்த வரை தவராகப்படும். மேதாவி ஒருவன் படித்து முடித்ததும் வணிகம் செய்ய நினைத்தான். அவன் தேர்ந் தெடுத்த இடமோதுத்துக்குடி. மீன் வியாபாரம் செய்யலாம் என்றால் மீனைபிடிப்பதும் கொல்லுவதும் பாவம் என நினைத்து அதை கை விட்டான். பின் முத்து வியாபாரம் செய்ய நினைத்தான். சிப்பியைக் கொன்றல்லவா முத்தை எடுக்கவேண்டும் என அதையும் கை விட்டான். அதன் பின் உப்பு வியாபாரம் செய்ய நினைத்து உப்பளம் சென்று பார்வையிட்டான். அங்கு ஆண்களும் பெண்களும் வெயிலில் கஸ்டப்படுவதைப் பார்த்து விட்டு பிறரை வருத்தி வேலை வாங்குவது பாவம் என்று எங்கோ படித்த ஞாபகம் வந்தது. இப்படி நினைக்கும் மேதாவிக்காக இப்பழமொழி கூறப்பட்டது.

ஆறிலும் சாவு நூரிலும் சாவு
வெளிப்படையான விளக்கம்:-மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் அதற்கு வயதெல்லை கிடையாது.
ஊண்மை விளக்கம்:-இப்பழ மொழிக்கான சம்பவம் மகாபாரதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதாவது கர்ணனை குந்திதேவி பஞ்சப் பாண்டவர்கள் கர்ணன் பக்கம் சேரும் படி வற்புருத்தினார். அதற்கு கர்ண்னன் பஞ்சப்பாண்டவர் மற்றும் கிருஷ்ணர் ஆறு பேருடன் இருந்தாலும் சரிகௌரவர் நூறு பெருடன் இருந்தாலும் சரி மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அதாவது ஆறிலும் சாவு நூறிலும் சாவு நான் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க நான் கௌரவர்களுடனே இருந்து செத்துப் போகிறேன். என்கிறான் கர்ணன்.

கோத்திரம் அறிந்து பெண் கொடு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு.
வெளிப்படையான விளக்கம்:-நல்ல குடும்பத்துப் பெண்னை மாப்பிளை வீட்டகரர் நல்ல குடும்பமா என ஆராய்து பெண் கொடுப்பதற்கும் தானம் கெடுப்பதானால் கூட அளவறிந்து பிச்சையிட வேண்டும் என கூறப்படுகிறது.என்பது வெளிப்படையான விளக்கம்.
உண்மை விளக்கம்:-இது மன்னர் குடும்பத்துக்கு உரிய அறிவுரையாகக் கொள்ளப்படுகிறது. “கோ”என்பது அரசன் என பெருள்படும். திறம் என்பது திறமை எனப்படும். அதாவது ஒரு அரசன் தன் பெண்னை திறமையுள்ள ஒரு மன்னனாகப் பார்த்து ஆராய்ந்து திருமணம் செய்து கொடுக்க வேண்டும். என்தை இது குறிக்கிறது. கோத்திரம் என்பது கோத்திறம் என வரவேண்டும் பாத்திரம் என்பது பாத்திறம் என வரவேண்டும். புலவனுக்கு பரிசு அளிக்க நினைக்கும் மன்னன் அந்த புலவனுக்கு பாடல் திறமைக்கு ஏற்றவாறு பரிசுகளை மதிப்பிட்டு அளிக்க வேண்டும் இதுவே உண்மை விளக்கம்.

பழமொழிகள்​​-​​​​​​palamolikal

ஆமை பூந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது.
வெளிப்படையான விளக்கம்:-ஆமை வீட்டுக்குள் புகுந்தால் அந்த வீடுக்கு கெடுதல் வந்து விடும். அமீனா (டவாலி- நீதிமன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி) நீதிமன்ற அறிக்கைகளை நம்மிடம் சேர்ப்பிப்பவர். வீடு  நகை அல்லது ஏதேனும் செத்துக்கள் ஏல விபரங்களை வீட்டுக்கு வந்து அறிவிப்பார். எனவே அவர் வீட்டுக்கு வந்தால் ஏதேனும் கெட்ட செய்தி கொண்டு வருவார். என்று மேலே உள்ள பழமொழியில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்.
உண்மை விளக்கம்:-இந்த பழமெழியில் ஆமை என்னும் சொல் கல்லாமை இயலாமை முயலாமை என்பவற்றை குறிக்கிறது அதாவது கல்வி இல்லாத சோம்பேரித்தனம் கொண்ட முயற்சிகளற்ற தன்மைகள் எந்த வீட்டில் உள்ளதோ அந்த வீடு முன்னேறாது. என்பதை இப்பழமொழி கூறுகிறது. அடுத்தாக உள்ள அமீனா புகந்த வீடு என்பது எதுகை மோனைக்காக சேர்க்கப்பட்டது. இதுவே இதன் உண்மை விளக்கம்.

சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?
வெளிப்படையான விளக்கம்:-சோறு உண்னும் போது அதில் உள்ள சிறு கல்லை எடுத்து விட்டு உண்ண தெரியாதவன் எப்படி ஞானம் என்பது என்ன என்று அறிய முடியும்? என்பது வெளிப்படையான விளக்கம்.
உண்மை விளக்கம்:-இப்பழமெழி கூறுவது யாதெனில் சேற்றில் உள்ள கல் நாம் தினசரி திரும்ப திரும்ப அனுபவிக்கும் தவிர்க்க முடியகாத ஒரு சின்ன துன்பம். அதனை முழுவதும் தீர்க்க வேண்டுமானால் அரிசியில் உள்ள கல்லை முழுமையபக் எடுத்து விட்டும் நன்றாக களைந்து கழுவி சமைக்க வேண்டும். அதற்கு சோம்பல் பட்டு விட்டு கல்லை கூட நீக்காமல் அப்டியே சமைத்து உண்பவன் சோற்றில் இருக்கும் கல் போல அவனது வாழ்வில் வரவழைத்துக் கொள்ளும் சிறு சிறு ஒழுக்க கேடுகளின் மூலத்தையும் அறிந்து அதனை தடுக்கும் ஞானம் என்ன என்று தெரிந்துக் கொள்ள வழி பிறக்கும்? என்பதே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
-நித்ரா-

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.