ஒலிம்பிக் (Olympic) விளையாட்டுக்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதாவது கோடைகாலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையட்டுகள் நடாத்தப்படும் அனைத்துலகபோட்டி ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்த போட்டிகளை நடாத்தும் வழக்கம் இருந்தது. ஆதிகால ஒவிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு776 இல் கிரேக்க நாட்டில் உள்ளஒலிம்பிலயவில் தொடங்கிது. ஓலிம்பிக்ஸ் போட்டிகள் தொடக்ககாலத்தில் கிரேக்கத்தின் ஜியூஸ் கடவுளைப் போற்றுவதற்காக நடாத்தப்பட்டதாக வரலாறு சான்று தெரிவிக்கின்றன. பனி ஒலிம்பிக்ஸ் (Winter Olympics) 1924 முதல் தனியாக நடக்கிறது.
ஒலிம்பிக் கொடியில் உள்ள வலயங்களின் எண்ணிக்கை ஐந்துஆகும். ஐந்து வலயங்களும் ஐந்து கண்டங்களை குறித்து நிற்கின்றது. ஆபிரிக்கா,அமெரிக்கா,ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களையே குறிக்கின்றது.கொடி வெள்ளை நிறத்தில் எவ்வித பாராபட்சமும் இல்லாமல் காணப்படுகிறது.ஓலிம்பிக் கொடியில் மெத்தமாக ஆறு நிறங்கள் காணப்படுகின்றது. அவை நீலம்,மஞ்சல்,கருப்பு,பச்சை,சிவப்பு,வெள்ளை ஆகியனவாகும். இவ் ஆறு நிறங்களில் ஏதாவது ஒன்று அனைத்து நாட்டு தேசியக்கொடியிலும் இடம்பெற்றிருக்கும். இவ் ஒலிம்பிக் கொடியை உருவாக்கியவர்,நவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படும் பியரிகோபர்டின் ஆவார். 1960ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முதல் முதலாக தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டன.
ஓலிம்பிக்கின் முக்கிய நோக்கம் இலட்சியம் என்பதாகும். போட்டியில் கட்டாயம் வெற்றிப் பெறவேண்டும் என்பதல்ல. பங்கேற்றி சிறப்பாக விளையாட வேண்டும் என்கிறார் டி கோபர்டின்.ஒலிம்பிக்கின் அடிப்படைக் கோட்பாடு சைட்டியஸ்,அல்டியல்,பார்டியல் இது இலத்தீன் மொழிவார்த்தைகளாகும். இதற்கான அர்த்தம் விரைவு,உயர்வு,துணிவு,உறுதிமொழி. கிரேக்கர்கள் ஒலிம்பிக் தோன்றிய ஒலிம்பியாட்டில், சூரியக்கதிர் மூலம் பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் ஜேதி ஏற்றுவார்.
ஓலிம்பிக் நடந்த நாடு மற்றும் இடங்கள்
1896:- ஏதென்ஸ்இகிரேக்கம்
1900:- பாரிஸ்இபிரான்சு
1904:- செயிண்ட்லூயிஸ்இஐக்கியஅமெரிக்கா
1908:- லண்டன்இ இங்கிலாந்து
1912:- ஸ்டாக்ஹோம்இசுவீடன்
1920:- ஆண்ட்வெர்ப்இபெல்ஜியம்
1924:- பாரிஸ்இபிரான்சு
1928:- ஆம்ஸ்டர்டாம்இ ஹாலந்து
1932:- லாஸ் ஏஞ்சலீஸ்,ஐக்கியஅமெரிக்கா
1936:- பெர்லின், ஜெர்மனி
1948:- லண்டன், இங்கிலாந்து
1952:- ஹெல்சின்கி,பின்லாந்து
1956:- மெல்போர்ன், ஆஸ்திரேலியா
1960:- ரோம், இத்தாலி
1964:- டோக்கியோ, ஜப்பான்
1968:- மெக்சிக்கோசிட்டி,மெக்சிகோ
1972:- ம்யூ+னிச், ஜெர்மனி
1976:- மாண்ட்ரீல்,கனடா
1980:- மாஸ்கோ,சோவியத் ஒன்றியம்
1984:- லாஸ் ஏங்சல்ஸ்,ஐக்கியஅமெரிக்கா
1988:- சியோஸ்,தென்கொரியா
1992:- பார்சிலோனா,எசுப்பானியா
1996:- அட்லாண்டா,ஐக்கியஅமெரிக்கா
2000:- சிட்னி, ஆஸ்திரேலியா
2004:- ஏதென்ஸ்,கிரேக்கம்
2008:- பெய்ஜிங்,மக்கல் சீனக் குடியரசு
2012:- லண்டன்,ஐக்கிய இராட்சியம்
2016:- ரியோ டி ஜனேரோ,பிரேசில்
உலகப்போர் நடந்த,சமயங்களில்(1916, 1940, 1944)ஒலிம்பிக் நடைபெறவில்லை. 2020ஆம் ஆண்டு,ஒலிம்பிக் ஜப்பான் நாட்டில் டோக்கியோ,நகரில் நடைபெறவுள்ளது.
பனி ஒலிம்பிக் நடந்த இடம்
1924:- சாமொனிக்ஸ்,பிரான்ஜ்
1928:- செயிண்ட் மோரிட்ஜ், ஸ்வஜட்சர்லாந்து
1932:- ப்ளாசிட் ஏரி,ஐக்கியஅமெரிக்கா
1952:- ஆஸ்லோ,நோர்வே
1956:- கார்டினா, இத்தாலி
1960:- ஸ்குவாவ் வேலி,ஐக்கியஅமெரிக்கா
1964:- இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா
1968:- க்ரெநோபில்,பிரானடஸ்
1972:- சாப்போரோ, ஜப்பான்
1976:- இன்ஸ்ப்ரகட, ஆஸ்திரியா
19780:- ப்ளாசிட் ஏரி,ஐக்கியஅமெரிக்கா
1984:- சாராஜெவோ,யூகோஸ்லாவியா
1988:- கால்கேரி,கனடா
1992:- ஆரல்பர்ட்வில்லே,பிரான்ஸ்
1994:- லில்லேஹாம்மர்,நோர்வே
1998:- நாகானோ, ஜப்பான்
2002:- சால்ட் லேக் சிட்டி,ஐக்கியஅமெரிக்கா
2006:- தோரீனோ, இத்தாலி
2010:- வான்கூவர்,கனடா
2014:- சோச்சி,ருசியா
உலகப்போர் சமயங்களில் (1940, 1944) பனி ஒலிம்பிக் நடைபெறவில்லை.
1992 வரைபனி ஒலிம்பிக்கும் கோடைகால ஒலிம்பிக்கும் ஒரே ஆண்டிலேயே நடைப்பெற்று வந்தது. இதை மாற்றவேண்டி 1994 மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக் நடாத்தினார்கள். இதன் படிகோடைக் கால ஒலிம்பிக்கும் பனிக்கால ஒலிம்பிக்கும் தனித்தனியே நடைப்பெறுகிறது.