இந்தாண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கொரோனா காரணமாக வட கொரியா பங்கேற்காது என அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.வடகொரியாவின் ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் கடந்த 25ம் தேதி நடைபெற்றது. அதில் தங்கள் நாட்டு வீரர்களை பாதுகாக்கும் நோக்கில் டோக்யோ ஒலிம்பிக்கிற்கு அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை அந்நாட்டு அதிகாரபூர்வ இணையதளத்தில் வடகொரியா வெளியிட்டுள்ளது. இந்த முடிவுக்கு தென்கொரியா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இருநாடுகளும் இணைய கிடைத்த வாய்ப்பு நழுவி விட்டதாகவும் தென்கொரியா அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும்இது குறித்து தெரிவித்துள்ள வட கொரிய விளையாட்டு அமைச்சகம், ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ள 32வது ஒலிம்பிக் போட்டிகளில், கொரோனா பெருந்தொற்று காரணமாக விளையாட்டு வீரர்களின் உடல்நலன் கருதி பங்கேற்கப்போவதில்லை என தகவல் தெரிவித்துள்ளது.