வடகொரியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அணுசக்தி சோதனையானது இரோஷிமாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு 17 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது என இஸ்ரோ அறிக்கை அனுப்பியுள்ளது.
வடகொரியா தனது அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டி வந்தது. பாதுகாப்பில்லாத அணு ஆயுத சோதனையை நிறுத்துமாறு மேற்கண்ட நாடுகள் கேட்டு கொண்ட போதிலும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நிறுத்தவில்லை. இதனால் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவவில்லை.
இந்த நிலையில் அந்நாடு மீது சர்வதேச பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பை கைவிடுவதாக வடகொரியா அறிவித்தது. அதற்குற்போது அமெரிக்காவுடன் வடகொரியா நட்பு பாராட்டுவது, அணுசக்தி சோதனை நடத்துவதாக மிரட்டுவது என உள்ளது. இந்தநிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு மண்டப் மலையில் வடகொரியா அணுசக்தி சோதனை நடத்தியது.3 பேர் கொண்ட குழு இந்த சோதனை குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டனர். 3 பேர் கொண்ட குழுவில் ஸ்ரீஜித், ரித்தேஷ் அகர்வால் மற்றும் ஏ எஸ் ராஜாவாட் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அது குறித்த ஆய்வறிக்கையை அவர்கள் தாக்கல் செய்தனர்.
இரோஷிமா அதில் வடகொரியா நடத்திய அணுசக்தி சோதனை மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த சோதனையில் 245 முதல் 271 கிலோ டன் வெடிப்பொருள்களை கொண்டது. ஆனால் இரோஷிமாவில் கடந்த 1945 -ஆண்டு இரண்டாம் உலக போரின் போது அணுகுண்டு வீசப்பட்டது.
அந்த அணுகுண்டில் 15 கிலோ டன்களே வெடிப்பொருட்கள் இருந்தன. எனவே வடகொரிய நடத்திய அணுஆயுத சோதனையானது இரோஷிமாவை அணுகுண்டை காட்டிலும் 17 மடங்கு ஆற்றல் மிக்கதாகும். இதனால்தான் இந்த சோதனை நடத்தப்பட்ட மண்டப் மலை சற்று நகர்ந்துள்ளது.
எனினும் நிலநடுக்கம் ஏதும் வரவில்லை. மவுண்ட் மண்டபத்திற்கு கீழ் 542 மீட்டர் ஆழத்தில் இந்த அணுசக்தி சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையால் உலக நாடுகள் திக்குமுக்காடியுள்ளன.