Monday, January 20, 2025
Homeசிறுவர் செய்திகள்2020 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு#Nobel Prize 2020

2020 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு#Nobel Prize 2020

- Advertisement -

ஐரோப்பிய நாடான நார்வேயைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட ஆறு துறைகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நோபலின் பிறந்த நாளான டிசம்பர் 10-ம் தேதி இந்த விருது வழங்கப்படும்.

- Advertisement -

amaithikkana_Nobel Prize 2020
கடந்த ஒரு வாரமாக இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளைப் பெற உள்ளோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது 2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

amaithikkana_Nobel Prize 2020

- Advertisement -

`உலக உணவுத் திட்டம் (World Food Programme-WFP)’ என்ற அமைப்பு இவ்வருடத்துக்குரிய அமைதிக்கான நோபல் பரிசைப் பெறவுள்ளது.
1962-ல் இரான் நாட்டில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் அதைத் தொடர்ந்து அக்டோபரில் தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட புயல், அல்ஜீரியாவில் தவித்த 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் போன்ற பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு 1963-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் உலக உணவுத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு இத்தாலி நாட்டின் ரோம் நகரைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நிலநடுக்கம், சுனாமி போன்ற இக்கட்டான காலகட்டங்களில் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த அமைப்பின் வழியே உணவளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

amaithikkana_Nobel Prize 2020
ஆண்டுதோறும் பட்டினியால் வாடி வதங்கும் 83 நாடுகளில் உள்ள 91 மில்லியன் மக்களுக்கு உணவளித்து வருகிறது இந்த அமைப்பு. `உணவானது ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று’ என்பதை மையக்கருத்தாகக் கொண்டு சேவையாற்றி வரும் உலக உணவுத் திட்டத்துக்கு 2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.

 

 

******************************

kidhours_upcoming

raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.