Tuesday, December 3, 2024
Homeகல்விகட்டுரைகட்டுரை சித்திரை புத்தாண்டு New Year Essay In Tamil # Tamil Essay

கட்டுரை சித்திரை புத்தாண்டு New Year Essay In Tamil # Tamil Essay

- Advertisement -

New Year Essay In Tamil  சிறுவர் கட்டுரை

- Advertisement -

உலகளவில் தமக்கே உரித்தான கலாச்சாரங்களையும் பண்பாட்டையும் தன்னகத்தே கொண்டவர்கள் தமிழர்கள். தமிழர்களுக்குரிய சிறப்பான பண்டிகைகளில் புத்தாண்டும் ஒன்றாகும்.வாழ்வின் அனைத்து காலங்களிலும் மன மகிழ்வையும் ஆழ்ந்த அறிவியலையும் உடையதாய் அமைவது தமிழர்களின் பண்டிகைகள் ஆகும்.அந்த வகையில் புத்தாண்டு பிறப்பதனால் வாழ்வில் புதுமைகளும் மகிழ்ச்சியும் பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாக உள்ளது.காலநிலை மாறுதல்கள் மற்றும் பருவகால மாறுதல்கள் என பல அர்த்தப்பாடுகளை உடையதாக புத்தாண்டு பிறப்பு அமைகின்றது.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு உள்ள ஆரவார வரவேற்பு சித்திரை மாதத்திற்கு இல்லை என்று ஒரு சிலர் கூறினாலும், அது உண்மை இல்லை பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழர்கள் தமிழ் புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதங்களுமே தனி சிறப்புடையது, அவற்றுள் சித்திரை மாதம் தனித்துவமானது. சித்திரையே வா நம் வாழ்வில் முத்திரை பதிக்க என்ற சொல்லுக்கு ஏற்ப இந்த மாதம் மக்களுக்கு பெரும் சந்தோஷத்தினை தரும் மாதமாக உள்ளது.

- Advertisement -
New Year Essay In Tamil
New Year Essay In Tamil

அந்த வகையில் தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையாக இருக்கும் தமிழ் புத்தாண்டு தமிழ் மக்கள் எல்லோரும் இயற்கையை கடவுளாக மதித்து நடந்தவர்கள். அதனால் தான் தமிழ் புத்தாண்டை பருவ நிலைக்கு ஏற்ப கொண்டாடி வருகின்றனர். ஜோதிடத்தில் இருக்கும் 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் தமிழ் புத்தாண்டு பிறந்தது. இதை இலக்கிய நூலான நெடுநல்வாடை

- Advertisement -

“திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக விண்ணுர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து” என்று குறிப்பிடுகிறது. ஆங்கில புத்தாண்டை உலகத்தில் உள்ள எல்லோரும் கொண்டாடினாலும், தமிழர்களின் தமிழ் புத்தாண்டு எப்பொழுதும் தனித்துவமானது.ஆங்கில புத்தாண்டை எல்லோரும் இரவில் தான் கொண்டாடுவார்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தான் கொண்டாடுவார்கள், ஆனால் தமிழ் புத்தாண்டை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடி மகிழ்வார்கள்.

இல்லத்தில் உள்ளவர்கள் நீராடி புத்தாடை அணிந்து, ஆலயங்களுக்கு சென்று கடவுளை பிரார்த்திப்பார்கள். நல்ல நேரத்தில் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். இந்த நன்னாளில் மக்கள் மகிழ்ச்சியை மட்டுமல்ல இனிப்புகளையும் பரிமாறி கொள்வார்கள்.

புதிய முயற்சிகள்: தமிழ் புத்தாண்டு அன்று தொழில் தொடங்கினால் தொழிலில் அபார வளர்ச்சி கிடைக்கும். இந்நன்னாளில் கல்வி கற்பவர்கள், விவசாயிகள், வேலை செய்து கொண்டிருப்பவர்கள் புதிய முயற்சிகளை தொடங்கினால் அதில் நல்ல வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.சித்திரையன்று மதிய உணவு சிறப்பாக இருக்கும். சாம்பார், கூட்டு, பொரியல் பாயாசம், வடை, அப்பளம் என்று உணவு சற்று தடபுடலாக இருக்கும்.

இந்த காலத்தில் தான் விவசாயிகள் பயிர் செய்ய ஆரம்பிப்பார்கள். நெல் விதைப்பில் சிறுபோகம் ஆரம்பமாகும். இது போன்ற பல சிறப்புகளை பெற்றது நம்முடைய சித்திரை மாதம். சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதனால் இந்த மாதம் சித்திரை மாதம் என்று அழைக்கப்படுகிறது
தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தான் நம்முடைய பண்டிகைகள் இருக்கிறது.

பண்டிகைகள் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமே மனிதர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் வர வேண்டும் என்பதற்காக தான். எனவே மக்கள் எல்லோரும் பழைய வருடத்தில் நிகழ்ந்த துன்பங்கள் எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாக வாழ்வோமாக. அனைவருக்கும் பொதுநலம்.காம்-ன் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

kidhours – New Year Essay In Tamil , New Year Essay In Tamil Article

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.