Saturday, January 18, 2025
Homeபொழுது போக்குமதிநுட்பங்கள்நனோ தொழில்நுட்பம்#nanotechnology

நனோ தொழில்நுட்பம்#nanotechnology

- Advertisement -

நனோ என்னும் சொல்லை கேட்டவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன? அநேகமானோரின் பதில் Smart Phone களில் நனோ Sim பயன்படுத்துகின்றோம் என்பதாகும். நனோ Sim என்றால் என்ன? அளவில் சிறிய sim card இல்லாவிட்டால் அளவில் சிறியது அல்லது 10-9 என்பார்கள். இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள கூடியவையே. நனோ தொழில்நுட்பம் என்பது மிக மிக சிறிய துணிக்கைகள் அணுக்களுடன் கூடிய வேலைப்பாடுகள் ஆகும். 5ம் கைத்தொழில் புரட்சி இத் தொழில்நுட்பத்தை வைத்தே செயற்படுகின்றது

- Advertisement -

நனோ தொழில்நுட்பம் இன்று பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வருகின்ற ஒரு துறையாக காணப்படுவதுடன் எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தொழில்நுட்ப துறையாகவும் உருவாகி வருகின்றது. இலத்திரனியல் துறை, உணவு உற்பத்தி , மருத்துவம் என பல்வேறு துறைகளிலும் நனோ தொழில்நுட்பம் பயனுள்ளதாக மாறி வருகின்றது. நனோ தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சந்தைக்கு வந்துள்ள போதிலும் மக்கள் மத்தியில் அவை பற்றி இன்னும் போதிய விழிப்பின்மை காணப்படுகின்றது.

நனோ தொழில்நுட்பம் என்பது 100 நனோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளை கொண்டு , சிறப்பாக வெளிப்படும் பண்புகளை கொண்டு ஆக்கப்படும் கருவிகளும் அப்பொருட் பண்புகளை பயன்படுத்தும் நுட்பியலும் நனோ தொழிநுட்பம் என அழைக்கப்படுகின்றது.

- Advertisement -
nanotechnology
www.kidhours.com

நனோ மீட்டரும் ஏனைய அலகுகளும்
நீளத்தை அளவிடும் அலகுகளில் கிலோமீட்டர், மீட்டர், சென்ரி மீட்டர், மில்லிமீட்டர் என்பன காணப்படுகின்றன. இவற்றை விட மிக நுண்ணிய அளவீடுகளை எடுப்பதற்கு மைக்ரோ மீட்டர் மற்றும் நனோ மீட்டர் பயன்படுத்தப்படுகின்றன.ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் பில்லியனில் ஒரு பங்கு(1/1000,000,000 அல்லது 1 nm – 0.000000001 மீட்டர்) அல்லது பகுதியாக காணப்படும். இதனை மில்லிமீட்டரின் பகுதியாக கூறுவதாயின் மில்லிமீட்டரின் ஒரு மில்லியனில் ஒரு பகுதியாகும். நனோ மீட்டர் ஆனது nm எனும் அலகிலேயே அளக்கப்படுகின்றது. பொதுவாக ஒரு மனிதரின் தலைமுடியானது 60000 நனோ மீட்டர் தடிப்புடையது. அதேவேளை மனிதனுடைய மரபணு மூலக்கூறானது 2-12 நனோ மீட்டர் ஆகும்.

- Advertisement -

நனோ தொழினுட்பத்தின் வரலாறு
நனோ தொழில்நுட்பத்துக்கான முன்னோடிகளாக உரோமர்களே காணப்படுகின்றனர். இது பற்றிய எண்ணக்கூற்றை விஞ்ஞான ரீதியாக முன்வைத்தவர் பௌதீகவியலாளரான ரிச்சர்ட் பேமன் என்பவராவார். நனோ தொழில்நுட்பம் என்ற சொல்லை முதன்முதலில் டோக்கியோ பல்கலைக்கழக அறிவியல்துறை பேராசிரியர் நொரியா தனிகுச்சி என்பவர் 1974ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். 1980 களின் பின்னர் நனோ தொழில்நுட்பம் வளர்ச்சியடைய தொடங்கியது.

நனோ தொழில்நுட்பமும் பிரயோகமும்
நனோ என்ற பெயரினை தமது வர்த்தக பெயராக கொண்டிருக்கும் பெரும்பாலான உற்பத்தி பொருட்கள் இவ்வாறு நனோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை ஆகும். இலத்திரனியல் துறையை பொறுத்தவரை நனோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் திரான்சிஸ்டர்களின் வருகையால் தகவல் தொழில் நுட்ப துறையில் எதிர்காலங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படலாம். இதனால் நாம் பயன்படுத்தும் கைத்தொலைபேசி, கணனிகள் கூட மிகவும் நுண்ணிய அளவில் தயாரிக்கப்படகூடும்.

nanotechnology
www.kidhours.com

இதுதவிர நனோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட குளிர்சாதன பெட்டிகள், எந்தவொரு பொருட்களையும் நீண்டகாலத்துக்கு பேணி பாதுகாப்பதற்கு உதவியாக அமைகின்றது. இவை தவிர விண்வெளி ஓடங்களில் நனோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இலத்திரனியல் பாகங்கள் மிகவும் நுண்ணியதாக அமைக்கப்படுகின்றன. இவை விண்வெளி ஓடத்தின் பாரத்தினை குறைப்பதுடன் குறைந்த அளவிலான இடத்தையும் உள்ளடக்குகின்றது.

மருத்துவ துறையை பொறுத்தவரை நனோ தொழில்நுட்பமானது பல்வேறு நன்மைகளை அளிக்கின்றது. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற மாத்திரைகளை உட்கொண்ட மறுகணமே வியாதி தீரக்கூடிய தன்மை காணப்படுகின்றது.

உறுதி மிக்க கட்டட பொருட்கள் மற்றும் டயர்கள் என்பனவும் நனோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு விதத்தில் வளர்ந்து வருகின்ற நனோ தொழில்நுட்ப துறையிலே பல்வேறு விதமான ஆய்வுகளில் பல நிறுவனங்கள் தமது முதலீடுகளை இட்டுள்ளன.

 

*****************************

kidhours_upcoming

#kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.