நம்மில் பலருக்கு ஏதாவது ஒரு சிறிய மேஜிக் தெரிந்தாலே அதை வைத்து நாம் பல வேலைகளை செய்வோம். ஆனால் இவர்களுக்கு அந்த இறைவன் இயற்கையாகவே மேஜிக் சக்தியை வரமாக அளித்து இருக்கின்றார். அது என்ன சக்தி என்று நீங்களும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? கேட்பவர்களை வியப்படைய வைக்கும் அளவிற்கு அதிசய சக்தி வாய்ந்த அந்த நான்கு நபர்களை பற்றி சொன்னால் நிச்சயம் உங்களால் நம்ப முடியாது.
![நம்பமுடியாத அதிசய சக்தி கொண்ட மனிதர்களை உங்களுக்கு தெரியுமா? 1 Natasha-Demkina-kidhours](https://www.kidhours.com/wp-content/uploads/2020/08/Natasha-Demkina-kidhours.jpg)
ரஷ்யாவில் வசிக்கும் நட்டாஷா டெம்கினா(Natasha Demkina). இவர் பிறந்ததிலிருந்து நன்றாகத்தான் இருந்தார். ஆனால் திடீரென்று தனது பத்து வயதில் தான் இவருக்கு இந்த அதிசயம் நிகழ்ந்தது. மனிதர்களின் உள் உறுப்பை, இந்த பெண் தனது கண்களாலேயே பார்க்கும் சக்தியை அடைந்து இருக்கின்றார். அதாவது ஸ்கேனிங், எக்ஸ்ரே செய்யும் வேலையை சாதாரண இவரது இரண்டு கண்கள் செய்கிறது. நம் உடல் உறுப்பில் இருக்கும் இதயம், கிட்னி, குடல், மற்ற இதர உறுப்புகள் இவைகளை மனிதனின் வெறும் கண்களினால் காணமுடியுமா? அப்பப்பா. இது இவருக்கு கொடுத்த பட்ட வரமா? சாபமா? என்று தான் தெரியவில்லை.
ஆனால் ரஷ்யாவில் இவரை மருத்துவ துறைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கண்களில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பு பாதிப்பினால் இவருக்கு இப்படிப்பட்ட ஒரு பிரச்சனை உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
![நம்பமுடியாத அதிசய சக்தி கொண்ட மனிதர்களை உங்களுக்கு தெரியுமா? 2 Tim-Cridland-kidhours](https://www.kidhours.com/wp-content/uploads/2020/08/Tim-Cridland-kidhours.jpg)
மனிதனாக பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டிய முக்கியமான ஒன்று உணர்ச்சி. அதாவது நமக்கு ஏதாவது அடிபட்டு விட்டால் வலிக்க வேண்டும். ஆனால் இந்த மனிதருக்கு வலி என்றால் என்னவென்றே தெரியாதாம். இவரின் பெயர் (Tim Cridland) டிம் கிரிட்லேன்ட். ஒரு மனிதனுக்கு காயம் ஏற்பட்டுவிட்டால் அதை மூளைக்கு உணர்த்துவது ஒரு நரம்பின் செயல்பாடு. அந்த குறிப்பிட்ட நரம்பு செயல்பாடு இவருக்கு செயல் விழுந்துவிட்டது என்பதால், வாழ்நாளில் இவர் எந்த ஒரு வலியையும் அனுபவிக்கவே மாட்டார்.
யாரேனும் ஒருவர் கத்தியை எடுத்து இவரை குத்தினாலும் கூட வலிக்காது போல! இவருக்கு இருக்கும் இந்த அதிசய திறமையை வைத்துக்கொண்டு தன்னைத் தானே குத்திக் கொள்வது, குழித்து கொள்வது போன்ற சாகசங்களை செய்து ஒரு பிரபலமான ஷோவை இன்றளவும் நடத்தி வருகின்றார்.
![நம்பமுடியாத அதிசய சக்தி கொண்ட மனிதர்களை உங்களுக்கு தெரியுமா? 3 Michel_Lotito-kidhours](https://www.kidhours.com/wp-content/uploads/2020/08/Michel_Lotito-kidhours.jpeg)
பிரான்சில் வசித்து வருபவரின் பெயர்தான் மைக்கல் லாலிடோ (Michel Lotito). இவருக்கு தினசரி உணவு என்ன தெரியுமா? இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களையும், மரச் சம்பந்தப்பட்ட பொருட்களையும் இவர் சாப்பிட்டு வருகின்றார். சைக்கிள்கள், கட்டில்கள், டிவி இப்படிப்பட்ட பொருட்களைத்தான் சாப்பிட்டு வருகின்றார். என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? இதுவரை இவர் 9 ஆயிரம் டன் அளவு கொண்ட இரும்பு பொருட்களை சாப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜீரண சக்தியானது சாதாரண மனிதரை விட அதிகமாக இருப்பதால் எவ்வளவு கடினமான பொருட்களை சாப்பிட்டாலும் அதை ஜீரணிக்கும் சக்தியானது இவருக்கு உள்ளது. இதை நீங்கள் யாரும் முயற்சி செய்யாதீர்கள்.
![நம்பமுடியாத அதிசய சக்தி கொண்ட மனிதர்களை உங்களுக்கு தெரியுமா? 4 Ben Underwood-kidhours](https://www.kidhours.com/wp-content/uploads/2020/08/Ben-Underwood-kidhours.jpg)
(Ben Underwood) பென் அன்டர்உட் என்பவருக்கு சிறுவயதிலேயே கண்ணில் கேன்சர் நோய் வந்ததால் இவருக்கு கண்களை அறுவை சிகிச்சையின் மூலம் எடுத்துவிட்டார்கள். தனது பார்வையை இழந்த இவர் நிச்சயம் அடுத்தவர்களின் துணை இல்லாமல் வாழ முடியாது. ஆனால் பார்வை இல்லாவிட்டாலும் தான் தனியாகத்தான் வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர், இவரின் உணர்ச்சியினால் எந்த பொருள் எங்கு இருக்கின்றது என்பதை உணரும் சக்தியை தானாகவே வளர்த்துக்கொண்டார்.
கண்கள் இல்லாமலேயே சைக்கிள் ஓட்டுவது, கராத்தே பழகுவது போன்ற செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பல வெற்றிப் படிகளை கடந்து வந்துள்ளார். இவரின் இந்த தன்னம்பிக்கையை பாராட்டத்தான் வேண்டும். இந்த உலகத்தில் இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கின்றார்களா! என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் உள்ளது. அந்த கடவுளின் படைப்பில் எதற்காக இப்படி ஒரு வித்தியாசமான படைப்பு? இப்படி எல்லாம் சிந்தித்தால் வீண்குழப்பம்தான் மிஞ்சும்.