Wednesday, January 29, 2025
Homeசிந்தனைகள்முதியோர் சிந்தனை துளிகள்

முதியோர் சிந்தனை துளிகள்

- Advertisement -

1.காந்தியடிகள்

- Advertisement -

sirukathai_சிறுகதை
1. முற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்ரவர்களாகி விட முடியாது.
2.ஜனநாயகத்தில் வலிமையற்றவருக்கும் வலிமை மிக்கவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
3.பயத்தினால் பீடிக்கப்பட்ட மனிதன் கடவுளை ஒரு நாலும் அறிய முடியாது.
4.எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக் கூடிய மனத்தடம் வேண்டும்.
5.கோபமோ குரோதமோ இல்லாமல் துன்பத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வது உதய சூரியனுக்கு ஒப்பாகும்.
6.மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது நம்பிக்கை ஒன்று தான் நம்மை காப்பாற்ற முடியும்.
7.மாணவனுக்கு சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசானே என்பது உறுதியான நம்பிக்கை.
8.நல்ல நண்பனை விரும்பினால் நல்ல நண்பனாய் இரு.
9.உயர்ந்த எண்ணங்களை உடையவர் ஒரு நாளும் தனித்தவராகார்.
10.எல்லாக் கலைகளையும் விட வாழ்வு கலை ஒன்றே பெரிது.
12.கடவுள் விண்ணிலும் இல்லை மண்ணிலும் இல்லை உள்ளத்தில் தான் இருக்கிறார். அவனை மக்களுக்குச் செய்யும் சேவை முலம் அறிய விரும்புகிறேன்.

2.கார்ல் மார்க்ஸ்

- Advertisement -

sirukathai_சிறுகதை
1.சமுதாய ரீதியில் துணிந்து செயலாற்றும் சக்தி படைத்த வர்க்கம் தொழிலாளர் வர்க்கம் தான்.
2.முதலாளித்துவ தனிச் சொத்துடமை முறையின் சாவு மணி கேட்கும்  சுரண்டுபவர்கள் சுரண்டப்படுவார்கள்.
3.வெற்றியின் ஒரு அச்சம் தொழிலாளர்களுக்கு இருக்கிறது. அது தான் எண்ணிக்கை. ஆனால்  கூட்டு முறையிலே ஒன்றுபட்டால் தான் அறிவு முறையிலே நடத்தப்பட்டால் தான் எண்ணிக்கை பயனுள்ளதாகும்.
4.பிழையை எடுத்துக்காட்டாமல் விடுவதானது அறிவுத் துறையிலே ஒழுக்கமின்மையை ஆதரிப்பதாகும். வாழ்கைச் சாதனங்களை உற்பத்திச் செய்யும் முறைதான் வாழ்கையின் சமுதாய அரசியல் அறிவியல் போக்குகளை நிர்ணயிக்கிறது.
5.இதுவரை இருந்துவரும் சமுதாயத்தின் சரித்திரமெல்லாம் வர்க்கப் போராட்டங்களின் சரித்திரமே.
6.மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை மாற்றங்கறை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லை.
7.நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுசிறது.
8.விஞ்ஞானம் என்னும் அழியா ஓளி அறியாமை என்னும் திரைக்குப் பின்னே பிரகாசிக்கிறது.

- Advertisement -

3.அன்னை திரேச

sirukathai_சிறுகதை

1.பிரார்த்தனை செய்யுங்கள் கடயுள் அருகே நீங்கள் போகலாம்! பிரார்த்தனை செய்ய முடியவில்லையா? அதற்குப் பதிலாகச் சேவை செய்யுங்கள் கடவுள் உங்கள் அருகே வருவார்.

2.வாழ்கை என்பது நீசாவும் வரை அல்ல பிறர் மனதில் வாழும் வரை.
3.தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய். ஆனால் மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.
4.நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற் கண் புரிந்து அராய்வது அவசியம்.
5.இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.
6.நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
7.நீ வாழ பிறரை அழிப்பதே மிகப் பெரிய வறுமை.
8.இந்த உலகில் நாம் கண் முன்னால் காணும் ஒவ்வருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எப்படி அன்பைச் செலுத்த முடியும்?
9.ஆவமானங்களின் வழியே தான் தாழ்ச்சியைக் கற்றுக் கொள்கிறௌம்.
10.பகைமையை வளர்க்காதீர்கள் மன்னியுங்கள்! பிறரின் தவறை நீங்கள் மன்னித்தால்! இறைவன் உங்கள் தவறுகளை மன்னிப்பான்!
11.சிறியவற்றில் நம்பிகைக்கு உரியவராய் இருப்பதே உன் பேராற்றல்.
12.உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதை விட உன்னால் வாழ்கிறேன் என்று ஒரு வரைச் சொல்ல வை!
13.இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.

4.அம்பேத்கர்

sirukathai_சிறுகதை
1.ஒரு இலட்சியத்தை மேற்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
2.உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்து தான் முன்னேற்றமோ வீழ்சியோ ஏற்படுகின்றது.
3.வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்.
4.மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையும் வாழ்கையில் ஏற்றுக் கொண்டால் யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
5.உங்களின் வருமை உடன் பிறந்தது: தவிர்க்க முடியாது தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். ஆடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தை குழி தோண்டிப் புதையுங்கள்.
6.இலட்சியங்களுக்கு விசுவாசமாக நடப்பதற்கு பதிலாக கட்டலைக்க இயங்கி நடப்பதே வாழ்கை ஆகிவிடுகிறது.
7.குருட்டு பக்தி தன்னறிவை இழக்கச் செய்யும் பகுத்தறிவை பயன்படுத்தாமல் யாருடைய வாக்குறுதியையும் நம்ப கூடாது.
8.எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் இச்சைப் படிசெயல்படாமல் எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.
9.சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.
10.நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது உன்னை கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது என் கடமை.
11.ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயெழிய சிங்கங்களை அல்ல ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களை போன்று வீறு கொண்டெழுங்கள்.
12.உங்களுடனான எங்கள் சமாதானம் எம் சந்ததியருக்கும் கொடுக்கும் ஒரு கோப்பை விஷம். ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டு மல்ல அது ஒரு கூட்டு வாழ்கை முறை சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு!
13.பணம் பட்டம். பதவிகளுக்காக நாம் போராடவில்லை நமது வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காகவும் மனிதர்களாக வாழ்வதற்காகவுமே போராடுகின்றோம்.
14.ஒரு தேசத்தின் ஒற்றுமை என்பது அதன் ஆன்மீக ஒற்றுமையே இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒரே இனத்தவரே.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.