Sunday, January 19, 2025
Homeபெற்றோர்10 அடிப்படை முதலுதவி செயல் முறைகள்

10 அடிப்படை முதலுதவி செயல் முறைகள்

- Advertisement -

திடீர் விபத்தின் போதோ அல்லது நோயின் போதோ சுற்றாடலில் உள்ளவற்றை பயன்படுத்தி ஏற்றுக்கொள்ள கூடிய நியதிகளுக்கும்  விதி முறைகளுக்கும் ஏற்ப முறையால் பயிற்றப்பட்ட ஒருவரினால் நோயாளிக்கு வைத்திய உதவி பெற்றுக் கொடுக்கும் வரை வழக்கப்படும் உதவி ‘’ முதலுதவி’’ ஆகும் 

- Advertisement -

1.நீரில் மூழ்கியவர்களுக்கான முதலுதவி – Drowning 

முதலுதவி​​​_first aid

- Advertisement -

முதலுதவியாலரின் பாதுகாப்பை முதலில்  உறுதிசெய்ய வேண்டும்

- Advertisement -

நீரில் நீந்தவோ அல்லது நீரில் மூழ்கி செல்லவோ பயிற்சி இல்லாவிடின் நீரின் உள்ளே இறங்குவதை தவிர்க்கவும்

1.வாயையும் நாசியையும் பரிசீலித்து நீரில் உள்ள மிதக்கும் அழுக்குகள் நீர் தவதாவரங்கள் படிந்திருப்பின் அவைகளை அகற்றி சுவாசப்பதையை சுத்தப்படுத்தவும்.

2.நோயாளியின் ஆரம்ப மதிப்பீட்டை செய்யவும்

3.சுவசிக்காவிடின் ஆரபத்தில் ஐந்து முறை செயற்கை சுவாசத்தை பெற்றுக்கொடுக்கவும்

அத்துடன் வெளிமர்பு அழுத்தம்  முப்பது முறை செயற்கை சுவாசம் இரண்டு முறையும் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வரை அல்லது குணம் அடையும் வரை தொடர்ந்து  செயற்படுத்தவும்.

4.நனைந்த உடைகளை  அகற்றி விடவும் போர்வையால் சுற்றிவைத்து அவருடைய உடம்பின் வெப்பத்தை பாதுகாக்கவும்

5.சுவாசப் பதையை சுத்தப்படுத்தி சுவாசப்பதையை திறந்துவிட்டு அவர்  சுவாசிப்பாரனால் ஈரமான உடைகளை அகற்றி விட்டு குளிரில் இருந்து பாதுகாத்து  பாதுகாப்பான நிலையில் கிடத்தி வைத்திய உதவியை பெறவும்

2.காயங்களும் குருதிப்பெருக்கும்

முதலுதவி​​​_first aid

காயங்கள் ஆபத்தாக அமைவது  அதிகுருதி பெருக்கினால் ,விசா கிருமிகள் உட்புகுதலால், அதிர்ச்சி போன்ற காரணிகளாகும்

காயத்தின் வெளிப்பக்கத்தில் பிறபொருட்கள் இல்லாவிட்டால்

1.முதலுதவி பெற்று கொடுக்க முன் முடியுமாயின் கையுறையை பாவிக்கவும்

ஆடைகளை அகற்றியோ, வெட்டியோ காயத்தினை திறந்து விடவும்.

2.மிருதுவான சிறிய துணியினால் நோயாளியின் உள்ளங்கையை காயத்தின் மேல் வைத்து நேரடியாக அழுத்தத்தினை காயத்தின் மேல் கொடுக்கவும்

3.காயம்பட்ட உறுப்பை உயத்தி வைக்க ஒத்துழைக்கவும் .

கயப்பட்டவரை சாய்த்து வைக்கவும் அல்லது உட்கார வைக்கவும் . நிலத்தில் கிடத்தி வைப்பின் கனமான போர்வையின் மேல் கிடத்தி வைக்கவும் .

4.பண்தனத்தின் மூலம்  காயத்தின் மேல் வைத்த சிறிய துணியை  அலுத்திகட்டவும்  பந்தணம் தேவையற்ற முறையில் அழுத்தத்தினை கொடுப்பதனை  தவிர்க்கவும் .

5.ஏற்கனவே வைக்கப்பட்ட பந்தணம் மூலம் இரத்தகசிவு ஏற்படின் இன்னும் ஒரு கட்டினை கட்டவும் .

6.காயம் மேல் கையிலாயின் கட்டும் துணியை பாவித்து அவயத்தை  உயர்த்தி வைக்கவும்

7.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது நாடி வேகத்தையும்  சுவாசத்தையும் குருதிபெருக்கையும்  அதிர்ச்சியின் அறிகுறிகள் பற்றி கவனமியிருங்கள் .

3.நாசி மூலம் இரத்தம் வெளியேறல்

1.நோயாளிக்கு உட்காரும்படி அறிவுறுத்துக  அவரின் தலையை முன்னோக்கி வைக்கவும்  இரத்தம் வெளியேற இடமளிக்கவும்.

2.நாசியின் நுனியை இறுக்கி அழுத்தி பிடிக்க சொல்லுங்கள்  அப்படி முடியாவிடின் அதனை நீங்களே அழுத்தி  பிடியுங்கள் வாயினால் சுவாசிக்க செயுங்கள்

3.நாசியை சிந்துதல் குருதியை  விழுந்குதலை தவிர்க்க செய்யுங்கள்

4.பத்து நிமிடங்களின் பின்னர்  நாசியின் நுனியை கைவிடவும் இரத்தம் தொடர்ந்தும் பெருகினால் மீண்டும் பத்து நிமிடம் அழுத்தி பிடிக்கவும்

5.வைத்திய உதவி பெறவும்.

4.எரிகாயம்  ஏற்பட்டால்

முதலுதவி​​​_first aid

1.நோயாளியின் அருகில் செல்லும் முன் சூழவுள்ள இரசாயனத் திரவம் உங்களை பாதிக்காத வகையில்  உறுதிசெய்தல்

2.இரசாயனத் திரவம் அவியகுவதையின் கதவு யன்னல்களை திறக்கவும் முடியுமாயின் கதவு அப்போத்தல்களை  மூடியால் மூடவும் .

3.தேவையாயின் நோயாளர்களை அங்கிருந்து அகற்றவும்.

4.குளிர்ந்த நீரினால் ஒரு மணித்தியாலயம் வரை ஓடவிட்டு கழுவவும் கழுவும் நீரை உடனே அகற்றி விடவும் .

5.கழுவும் நேரம் இரசாயன திரவதிரவம் பட்ட உடைகளை மிக கவனமாக வெட்டி எடுக்கவும் .

6.வைத்திய உதவி பெறவும்

7.முடியுமானால் இரசாயன திரவத்தை வைத்தியரிடம் கொண்டு செல்லவும்

5.மின்னல் தாக்கினால்

முதலுதவி​​​_first aid

1.முதலுதவியாளர்  தன் பாதுகாப்பை உறுதிசெய்தல் வேண்டும்

2.மின்சாரத்தை தடைசெய்ய முடியுமாயின் அதன் ஆழியை அல்லது பிரதான ஆழியின் மூலமாக தடைசெய்யவும்

3.நோயாளியின் சுயநினைவை பரிசீலித்து சுவாசப்பையை  திறந்துவிடவும்

நோயாளி நினைவிழந்து சுவாசிப்பாரனால்  பாதுகாப்பான நிலைக்கு வைத்து வைத்திய உதவி பெறவும்

4.சுவசிக்காவிடின் வெளிமார்பு அழுத்தம்  தடவைகள் கொடுக்கவும் அத்துடன் செயற்கை சுவாசம் இரண்டை பெற்றுக்கொடுக்கவும். முப்பதுக்கு இரண்டு என்ற வீதம்

5.நோயாளி சுயநினைவில் உள்ளார் எனின்  எரி காயத்திற்கு முதலுதவி செய்க

6.வைத்திய உதவி பெறவும்.

6.பாம்பு கடித்தல்

1.நோயாளியினை குழப்பமடைவதை தவிர்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் தலையையும்  விலாப்பகுதியையும் சற்று உயர்த்தி சாய்வாக வைக்கவும்

2.கடிக்கப்பட்ட அடையாலப்பகுதியை குளிர் நீரினால் ஓடவிட்டு மெதுவாக கழுவுதல் வேண்டும்

3.பாதம் தீண்டினால் முக்கோண பந்தனத்தால் இரு பதக்களையும் ஒன்றிணைத்து அசையாமல் கட்டிவைத்தால் வேண்டும்.

4.மிக விரைவாக வைத்திய உதவியை பெற வேண்டும்

5.நோயாளிக்கு கஷ்டமில்லதவாறு சுமந்து செல்ல வேண்டும்

6.இயலுமாயின் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து பாம்பை இனங்காணவும்

7.குழவி அல்லது தேனீக்கள் கடித்தல்

முதலுதவி​​​_first aid

1.நோயாளியினை குழப்பமடைவதை தவிர்த்து ஆறுதல் சொல்ல வேண்டும்

2.தோலில் படும் படியான சிறிய வளைவான பொருளைக்கொண்டு  விசத்தை அகற்றவும்

3.துணிகளினால் சுற்றப்பட்ட ஐஸ் கட்டிகளை கொண்டு குளிர்படுத்தவும்

வாயில் தீண்டப்பட்ட நேரம் குளிர்நீரை அல்லது ஐஸ்கட்டி ஒன்றை உறிஞ்சி பருகக் கொடுக்கவும்

4.வைத்திய உதவியை பெற வேண்டும்.

8.சுளுக்கு மற்றும் முறிவு – Injuries of bones

1.சிக்கலான திறந்த முறிவின் போது இரத்த கசிவை தடுக்கவும் .

2.பந்தனமிட்டு கட்டும்போது அவ்விடத்தின் அசைவை மட்டுப்படுத்தவும் .

தேவையற்ற அசைப்பதை தவிர்க்கவும்

3.உணவோ பணமோ கொடுப்பதை தவிர்க்கவும்

4.விரைவாக வைத்திய உதவி பெறவேண்டும்

9.மயக்கம் – Fainting 

1.நோயாளிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது என அறிந்தால் அவரை சித்து வைக்கவும் அல்லது முழங்காலை மடித்து உட்காரும்படி அறிவிக்கவும் .

2.நோயாளியை கிடத்தி வைத்து கால்கள் இரண்டையும் உயர்த்தவும் .

கழுத்து – மார்பு இறுக்கமான ஆடைகளை தளர்த்தவும்.

3.சுத்தமான காற்றோட்டத்தை பெற வைக்கவும் சுற்றியுள்ளவர்களை அப்புறப்படுத்தவும் காற்றடிக்கவும்.

4.குணமடைந்து விட்டார் என அறிந்தால் அவர் உட்காருவதற்கு உதவி செய்யவும்.

10.காக்கைவலிப்பு – Epilepsy

1.நோயாளி கீழே விழு முன் அவரை தங்கி பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.

2.நோயாளியை பாதிக்ககூடிய அவரை சூழவுள்ள பொருட்களை அகற்றுதல் வேண்டும் .

3.நோயாளியை நடுங்க விடுதல்

4வாயினுள் திண்ம பொருளோ அல்லது திரவப் பொருளோ செலுத்தாமல் தடுத்தல் .

5.நடுங்கி முடிந்தவுடன் வாயில் உள்ள நுரையை துடைத்து சுவாசப் பாதையை திறந்து விடல்

6.சுவாசம் நடைபெறுமாயின் ஓய்வு நிலைக்கு திருப்புதல் .

7.காயங்கள் ஏற்பட்டிருப்பின் அதற்கு முதலுதவி செய்தல்

8.நோயாளியுடன் அன்புடன் கதைத்தல்

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.