Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
முருகைக்கற்பாறைகள் என்றால் என்ன ?#corals - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Saturday, November 23, 2024
Homeகல்விபுவியியல்முருகைக்கற்பாறைகள் என்றால் என்ன ?#corals

முருகைக்கற்பாறைகள் என்றால் என்ன ?#corals

- Advertisement -

உலகில் மூன்று வகையான முருகைக்கற்பாறைகள் காணப்படுகின்றன.

- Advertisement -

1.விளிம்பு பாறைத்தொடர் (Fringing Reef)
2.தடுப்புக் கற்பாறைதொடர் (Barrier Reef)
3. கங்கண முருகைக்கல் அல்லது அதொல் (Atoll)
முருகைக்கற்பாறைகள் சமுத்திரங்களில் காணப்படுகின்ற ஒரு சூழல்தொகுதி ஆகும். முருகை பல்லடியம் எனப்படும் கடல்வாழ் நுண்ணிய உயிரினங்களால் முருகைக்கற்பாறைகள் தோன்றுகின்றன. இவற்றின் சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த உடற்கூறுகள் படிந்து இறுகுவதால் முருகைக்கற்பாறைகள் உருவாகின்றன. அயன மண்டல கடல்களில் இத்தகைய முருகைக்கற்பாறை தீவுகளினை அதிகளவில் காணலாம். பசுபிக் சமுத்திரத்தில் இவ் முருகைக்கற்பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றது. இந்து சமுத்திரத்தினை பொறுத்தவரையில் அதிகளவிலான முருகைக்கற்பாறைகள் மாலைதீவில் காணப்படுகின்றது.

murukaikal paraikal_coral
www.kidhours.com

முருகைக்கற்பாறை தீவுகள் பெருக்கு மட்டத்துக்கு மேல் 12 மீட்டர்களுக்கு மேல் அமைந்திருப்பதில்லை. உயிருள்ள முருகை பல்லடியம் நீரின் மேல்மட்டத்தில் வளருவதில்லை. முருகைக்கற்பாறை தீவுகள் தனியே முருகைக்கற்களால் அமைவதில்லை. அவற்றுடன் சுண்ணாம்பு கற்களும் அமைந்திருக்கும். உலகிலுள்ள மிகப்பெரிய முருகைக்கற்பாறை தொடர் அவுஸ்ரேலியாவின் கிழக்கு கரையோரத்தை அடுத்துள்ள கிரேட் பேரியர் Coral Reef ஆகும். இது 1600 கிலோமீட்டர் நீளத்தினை கொண்டு காணப்படும். இதன் பரப்பு 34,870,000 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். அத்துடன் 2900 தனித்த முருகைக்கல் தீவுகளினை கொண்டு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த அவுஸ்ரேலிய முருகைக்கற்பாறைகள் ஒவ்வொரு வருடமும் 1-3 சென்ரிமீட்டர் வளரும் தன்மை கொண்டது. இவற்றினை அடிப்படையாக கொண்டு பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. குறிப்பாக 1500 வகையான மீனினங்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. முருகைக்கற்பாறைகள் உப்பு நீரில் சுமார் 2 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை உள்ள படிவுகளில்லாத கடலில் வளரும் தன்மை கொண்டது.

- Advertisement -

மூன்று வகையான முருகைக்கற்பாறைகளும் அவற்றின் தன்மைகளும்

- Advertisement -

விளிம்பு பாறைத்தொடர் (Fringing Reef)
விளிம்பு பாறை தொடர்கள் கண்டங்கள் அல்லது தீவுகளினை அடுத்து ஆழம் குறைந்த கடற்பரப்பில் கரையோரங்களுக்கு அருகில் அமைந்து காணப்படும் முருகைக்கற்பாறைகள் ஆகும். ஆழங்குறைந்த கடலில் வளர்கின்ற சுண்ணக்கல் கலந்த தாவரங்களால் இப்பாறை உருவாகின்றது. நீருக்கு மேல் தெரியும் இப்பாறை தொடர்களின் மேற்பரப்பு கரடு முரடானதாக காணப்படும்.

தடுப்புக் கற்பாறைதொடர் (Barrier Reef)
கரையோரத்திலிருந்து விலகி தூரத்தில் அமைந்திருக்கும் முருகைக்கற்பாறை தொடரினை தடுப்பு கற்பாறை தொடர் என அழைப்பார்கள். நிலத்துக்கும் கற்பாறை தொடருக்கும் இடையில் அகன்ற கடனீரேரி ஆழமாக இருப்பதனால் இந்த பகுதியில் முருகைக்கற்பார் வளர்வதில்லை.

murukaikal paraikal_coral
www.kidhours.com

கங்கண முருகைக்கல் அல்லது அதொல் (Atoll)
மோதிர வடிவில் அல்லது குதிரை லாடம் வடிவில் வட்டமாக கடலில் உருவாகியிருக்கும் முருகைக்கற்பாறை தீவுகளை அதொல் அல்லது கங்கண முருகை தீவு என அழைப்பார்கள். இந்த கங்கண முருகைக்கற் தீவுகள் கடனீரேரியை சுற்றிவர அமைந்திருக்கும். மற்றும் விளிம்பு கற்பாறை தொடர் எனப்படும் முருகைக்கற்பாறை ஒரு தீவினை சுற்றி உருவாக்கும். அத்தீவு திடீரென கடலினுள் அமிழ்ந்துவிட விளிம்பு பாறைத்தொடர் அதொல் ஆக காணப்படும் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

murukaikal paraikal_coral
www.kidhours.com

பசுபிக் சமுத்திரத்தில் இத்தகைய வட்ட வடிவில் அமைந்த முருகைக்கற்பாறை தீவுகளை காணலாம். இவ் வட்டமான முருகைக் கற்பாறைகள் சமுத்திரத்தையும் மத்தியில் உள்ள கடனீரேரியையும் இணைத்து அமையும் கால்வாய்களினால் பிரிக்கப்பட்டிருக்கும். அதொல் தீவுகள் கடல் மட்டத்திலிருந்து சில மீட்டர் உயரத்தில் அமைந்திருந்தாலும் தென்னை முதலிய மரங்கள் வளரும் தன்மை கொண்டது.

 

 

******************************

kidhours_upcoming

#kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.