Saturday, January 18, 2025
Homeபொழுது போக்குமூலிகைகளை சேகரிப்போம்சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மருத்துவம் Sweet Potato Herbal

சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மருத்துவம் Sweet Potato Herbal

- Advertisement -

Sweet Potato Herbal  மூலிகைகளை சேகரிப்போம்

- Advertisement -

கிழங்கு வகைகளில் பல வகை உண்டு. அதிலும் குறிப்பாக சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உண்பதால் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற வழிவகை செய்கிறது.

இரத்த அணுக்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதயநோய் பாதுகாப்பிலிருந்து காக்கிறது. அதேபோல் இதயநோய் பாதிப்பிலிருந்தும் காக்கிறது. மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் சருமப் பொலிவை தக்க வைக்கவும் உதவுகிறது.நல்ல மனநிலை, வலுவான எலும்புகள், இதயம் என்பவற்றுக்கு உறுதுணையாக இருக்கிறது. இதிலிருக்கும் விட்டமின் ஏ சிறந்த ஒட்சிசனேற்றியாக செயல்படுகிறது.

- Advertisement -

இது புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் பெற்றது. பழுதடைந்த செல்களை சரி செய்வதிலும் புதிய செல்களை சேதாரம் அடையாமல் பாதுகாப்பதிலும் இந்த கிழங்கின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. சர்க்கரைவள்ளிக் கிழங்கை சுட்டோ, வேக வைத்தோ, சிப்ஸ் செய்தோ சாப்பிடலாம். வெள்ளை மற்றும் இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது.

- Advertisement -

கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம். அப்படிப்பட்டவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால், அதில் இருக்கும் வைட்டமின் பி, சி மற்றும் நார்ச்சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் ஆகியவை உடலின் உள்ளே ஏற்படும் காயங்கள், வீக்கங்கள் உங்களை விரைவில் குணப்படுத்துகின்றன.

பெண்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவதோடு சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் சேர்த்து சாப்பிடுவதால், அதில் இருக்கும் ஃபோலேட் எனப்படும் சத்து விரைவில் பெண்களுக்கு கரு உருவாதலை உறுதி செய்கிறது.

சக்கரை வள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் இத்தகைய அல்சர் விரைவில் குணமாகிறது. இளமை தோற்றம் இளமை தோற்றத்தோடு இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்குமே இருக்கின்ற ஆசை தான். சர்க்கரைவள்ளி கிழங்குகளில் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

சர்க்கரைவள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் ப்ரீ ராடிக்கல்கள் செல்களின் அழிவினை தடுத்து, உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தந்து எப்போதும் இளமை தோற்றத்தை இருக்குமாறு செய்கிறது.

புற்று நோய் ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும். இதில் நிறைந்து இருக்கும் சத்துகள் புற்றுநோய் செல்களை மேலும் மேலும் வளராமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.

 

Kidhours – Sweet Potato Herbal ,Sweet Potato Herbal  in tamil

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.