Monkey Measles Decease சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் 643 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organization) தெரிவித்துள்ளது.
ஒட்டு மொத்தமாக பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 643-ல் இருந்து 650 ஆக அதிகரித்துள்ளது.
இது மே 13-ம் திகதி தொடங்கி ஜூன் 1-ம் திகதி வரையிலான நிலவரம் ஆகும்.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசர நிலை திட்ட தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறும்போது,
“உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி உள்ளது.
பிரித்தானியாவில் 190 பேரும், ஸ்பெயினில் 142 பேரும், போர்ச்சுக்கலில் 119 பேரும், ஜெர்மனியில் 44 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது,
“தற்போது உலகம் முழுவதும் குரங்கு காய்ச்சல் பரவுகிற அபாயத்தை தொற்று நோய் நிபுணர்கள் மதிப்பிட வேண்டும்.
வைரஸ் மரபணுவை ஆய்வுசெய்து, வாய்ப்பு உள்ள பிறழ்வுகளைக் கண்காணிப்பதற்கு அதை வரிசைப்படுத்த வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
kidhours = Monkey Measles Decease
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.