Tuesday, December 3, 2024
Homeகல்விஅனர்த்தங்கள்எவ்வாறு மின்னல்  அபாயங்களைத்  தவிர்த்துகொள்வது  ?  

எவ்வாறு மின்னல்  அபாயங்களைத்  தவிர்த்துகொள்வது  ?  

- Advertisement -

kidhours_minnal_lightning

- Advertisement -

எவ்வாறு மின்னல் அபாயங்களைத் தவிர்த்துகொள்வது ?

1.வானம் கறுத்தல்,மின்வெட்டல், இடிமுழக்கம் ஆகிய இவை அவதானத்தின் முன் குறியாகும்.

- Advertisement -

2. இடி முழக்கம் கேட்பின் மின்னல் தாக்க திசையில் நீங்கள் நிற்ககூடும் என்பதை அறியவும்.

- Advertisement -

3.கண்ணுக்கு தென்படும் மின் ஒளிக்கும் இடி முழக்கத்திற்கும் இடைவெளி 15 செக்கனுக்கு குறைவெனில் மிகக் கவனமுடன் இருக்க வேண்டும்.

4. இடி முழக்கம்,மின் தாக்கம் இவை அறிவிக்கும் காலநிலை வானிலைமண்டலத்தின் தகவல்களை கவனமுடன் செவிமடுக்க வேண்டும் .

மனிததொழில் செயற்பாடுகள் அதிகரிப்பு, நவீனதொழில் இயந்திரங்களின் பாரியபாவனை இவை நிமிர்த்தம் எதிர்பாரா அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பதை சற்றேனும் கருத்திற் கொள்ளாததால் எண்ணிலடங்கா உயிரிழப்புக்களுடன் கூடிய பாரியபொருட் சேதமும் கிரமமாக உயருகின்றன. 1997ம் ஆண்டு 49 மரணங்களே இடம் பெற்ற தகவலின் போதும் வருடத்திற்கு 300 மில்லியன் ரூபா அளவிற்கு மேலாக பலசேதங்கள்
இடம் பெற்றுள்ளன. மின் அஞ்சல் தடை, கணணி தொலைத்தொடர்பு சம்பந்தமான ஏனைய சாதனங்கள் சேதமடைவது,காட்டுத் தீபரவூதல்,பிரமாண்டமானபாரிய கட்டிடங்கள் சேதமடைதல் போன்றவை முக்கிய காரணங்களாகும் எனவே, தேசத்து மக்களாகிய நாம் இவற்றின் முக்கியத்துவத்தை கண்டுணர்ந்து அபாயங்களிலிருந்து மீள அதிககவனம் எடுப்பது சாலச்சிறந்தவையாகும். இயற்கை நிமிர்த்தம் ஏற்படும் சீற்றங்களை எம்மால் மட்டுப்படுத்த முடியாவிட்டாலும் அவற்றை கண்டுணர்ந்து தப்பிக்க நாம் முயல்வது பாரியபொறுப்பாகும்.

அப்படியான இடி மின் தாக்கம் யாது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியமாகும்.

1.வாயு மண்டலத்தின் கீழ் பரப்பில் அக் காற்றின் செறிவு குறைவாயிருத்தல்.

2.தேவைக்கேற்ப ஈரலிப்பு கொணடிருத்தல்.

3.நன்றாக சூரியக்கதிர் வெப்பம் உண்டாகுதல்.

மேற்கூறிய ழூன்றுநிகழ்வூகளும் நடைபெறுவதால் அதிகரிக்கும். முகில்களுக்கு இடையில் மின் ஏற்றம் மின் இறக்கம் என்னும் எதிர் மறைதாக்கம் ஏற்படும். சாதாரணமாகமுகில்களின் மேற்புறம் (+) ஏற்றம் பெற்றவைகீழ்புறம் (-) ஏற்றம் பெற்றவை. முகில்கள் கூட்டங்கள் காற்றுடன் மிதந்துசெல்கையில் புவியில் ஏற்றம் அற்றநிலைக்குமின்னேற்றங்கள் பாய்கின்றன. இச்செயல் முகில்கள் அதிக அளவு உருவாகும் போது ஒரு (Battery) மின் கலத்தில் இருந்து எவ்வாறு மின்னோட்டம் பாய்கிறதோ அவ்வாறு முகில்களின் கீழ் பகுதியூம் பூமிக்கும் இடைப்பட்டபகுதியும் அதிவெப்ப ஈர்ப்புக்குள்ளாகின்றது. வோல்ட் 12-14க்கும் இடைப்பட்ட ஒரு மின்கலத்தை விடவோல்ட் மில்லியன் 100க்கு மேற்பட்ட மின்னேற்றம் இவைக்கு உண்டு. ஒருபற்றரியிலிருந்துமின் ஒளியைபடபெற ஒரு தொடர் கம்பியால் இயலுவதுபோல் மின்னேற்றத்தை முழக்கத்திற்கு குறிக்கலாம். இதில் முக்கியத்துவமானது ஒரு மின் கம்பிக்கு (Conductor) கடத்தி இல்லாமலே மேல் வான் மண்டலத்திலிருந்து புவிக்கு இந்த மின் இறக்கத்தை செய்ய இயலும். எது எங்கனமாயினும் மின் பாய்சலை ஊகித்துக்கொள்ள முடியாவிட்டாலும் நாம் ஒதுங்கியிருப்பது நன்மையே. பாய்ந்துவரும் மின்னேற்றமானது அம்பியர் 25000ம் அளவில் வெப்பமாகி அந்நவளிப்படலம் விரிவடைந்து ஒரு பெரிய அதிர்வை உண்டாக்கும் போது இடி முழக்கம் ஏற்படுகின்றது. இவ்வாறு முகில்களுக்கு இடையேயும் மின்னேற்றங்கள் ஏற்படின் புவி மின்னல் நமக்கு பெரும் பாதிப்பை தருவதில்லை.

இவை கூடும் பட்சத்தில் முகில்களுக்கு இடையில் எதிர் மறைஎதிர்ப்புக்கள் இடம்பெறுகின்றன.

1.இவ்விதமின் அபாயங்களைகுறைத்துக்கொள்ளவேண்டுமாயின்

வெளிப்புறங்களில் இருக்கவேண்டாம்.

2.உயர்ந்தகுன்றுகளிலோ இடங்களிலோ இருப்பதை தவிர்க்கவும்.

விசேடமாகமரங்களுக்கிடையில் இருப்பதை தவிர்க்கவும்.

3.ஆறு,குளம்,ஏரி,ஓடைபோன்றவற்றிற்குஅருகாமையிலிருப்பதைத் தவிர்க்கவும்.

1. விசேடமாகஉயர்ந்ததனிமரத்தடியில், முட்கம்பிவேலிகள் ஓரம்,மின் துண்கள் இவற்றிற்கு அருகாமையிலிருப்பதை தவிர்த்து பாதுகாப்பான இடம் நாடவும்.

2.உடனடியாகசக்திவாய்ந்தஒருகட்டிடத்திற்குள் அல்லது ஒரு வாகனத்திற்குள் பிரவேசிக்கவும்.

3.காட்டுப்புறத்தில் இருப்பின் உயரம் குறைந்த மரங்களுக்கிடையில் பாதுகாப்பாயிருக்கவும்.

4.தலை மயிர் நட்டமாய் நிமிர்ந்தோ அல்லது சருமத்தில் வலியோ ஏற்படின் குனிந்து இரு முழங்கால்களுக்கு இடையில் தலையை குனிநதவாறு கனுக்கால்களை உயர்த்தி இரு கால் பெருவிரல்களால் தரையை தொடும்படி இருக்கவும் இதனால் பாரியதாக்கத்தை தவிர்க்க வாய்ப்புண்டு.

5.கடலில் தோணி,படகு,வள்ளம் அல்லது நீச்சல் போன்ற செயற்பாடுகளில் இருந்தால் உடனடியாக கரையை சேர்ந்து பாதுகாப்பான இடம் நாடவும்.

6.திறந்தவெளியில் குதிரை ,சைக்கிள் ஏனைய திறந்தவெளி வாகனச்சவாரிகளை உடனடியாக தவிர்க்கவும்.

7.பிரயாணத்தின் போதுகடும் மழையெனின் வாகனத்தைமரங்களற்றஒக்குப்புறத்தில் நிறுத்தியபடி உள்ளிருக்கவூம.;

8.உலோகத்திலான பாவனைப்பொருட்கள் அரிவாள் ,மண்வெட்டிகத்தி,குடை,அன்டனா இவற்றிலான தொழில்களை தவிர்க்கவும்.

வீட்டினுள் மின் உபகரணங்களைபாவிக்கும் சிலவிதிமுறைகள்

இயன்றளவூஎல்லாமின் உபகரணங்களையூம் (Switch) சுழற்சியில் இருந்து நீக்கவும்.

1.மின் உபகரணங்களைப் பழுதுபார்ப்பதில் இருந்துநீங்கவும்.

2.தொலைக்காட்சிசம்பந்தப்பட்டiவாளை(அன்டனா) முற்றும் நீக்கிவீட்டின் வெளிப்புறம் இடவும்.

3.தொலைத்தொடர்புசாதனங்களைஅனைத்தையூம் துண்டிக்கவும்.

4.குழாய்கிணறுகளில்குளிப்பதைத்தவிர்க்கவும்.

உங்கள் வீடோ அதைச்சார்ந்த பிரதேசமோ இடி தாக்கத்திற்கு அதிகமாகப்பாதிப்படையுமானால்

1.கட்டிடமாடியில் அல்லது வீட்டினுள்ளேயோ உலோகம் தவிர்ந்த கட்டிலில் கிடத்தியவாறுபடுத்து இருக்கவும்.

2.நல்லதொரு இடிதாங்கியைபொருத்துவதுடன் (ஓம்ஸ் எதிர்ப்பு) 10இற்குக் குறைந்தடlightning protector ஜ தரையூள் புதைத்து வைக்கவும்.

3.வெறும் தரையிலோ சீமேந்து தரையிலோ நிமிர்ந்திருக்க வேண்டாம்.

இடி தாக்கத்திற்குஉள்ளாகும் அவதானம் – காலங்கள்- நிலைப்பாடுகள்

பங்குனி சித்திரை ஜப்பசி கார்திகை ஆகியமாதங்களில் தாக்கங்கள் பலமானவை பருவப்பெயர்சி காலங்களில் அநேகமக இக்காலங்களின் நிலைப்பாடுகள் மாறுபடின் ஏனைய காலங்களிலும் அபாயம் ஏற்படலாம்.

சாதாரணமாக இடி மின் தாக்கம் ஏற்படுவது இடைப்பட்டவிசேடமாக பிற்பகல் 3 மணிக்கும் 6மணிக்கும் ஆகும்.ஆகக்கூடியதாக பிற்பகல 4 மணிக்காகும்.எதுவாயினும் காலை நேரங்களில் கடற்கரை பிரதேசங்களிலும் மின் தாக்கலாம்.

நாம் அறியவேண்டியவை

மழை பெய்யும் பிரதேசத்திலிருந்து மழை பெய்யாத 10கி.மீ. துரத்திலிருக்கும் இடத்திலிக்கும்இடத்திற்கும் கூடமின் தாக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. 1.இறப்பர்பாதணிகள் அணிவதாலோ இறப்பரசில்லுடைய வாகனத்திற்கோமின் தாக்கம் ஏற்படவாய்ப்புண்டு.

2.இடிதாக்கியஒருவர்(மயக்கம்)சுயாதீனம் அற்றிருப்பார் உடனடியாக முதலுதவியை மேற்கொள்ளவும் மருத்துவரைநாடவும் .

3.தற்காலிக மூச்சுத்திணறலாயின் உடலைஅழுத்திவிடவும்.

4.சுவாசத்தடைஏற்படின் உடனேமருத்துவரை நாடிஆலோசனை பெறவும்.

5.இடியுடன் கூடிய பு யல் காற்று சாதாரணமாக ஒரு பிரதேசத்தில் 15-10 வரை வேகத்திலும் 30-60 நிமிடகாலம் வரை நீடிக்கும்.

6.இடி முழக்கத்துடன் முகில்களில் ஏற்படும் மழையானது கடும் காற்றை வீசச்செய்யும்.

7.இயற்கை ரீதியிலே உண்டாகும் பயங்கரயூயல் காற்றானது (வழமநனறயம)இடி முழக்கத்துடன் கூடியது அந்நாளில் ஆகக்கூடிய உஷ்ணத்தை பெற்ற பின்பு கட்டுப்படுவதுடன் காற்றின் வேகம் மணிக்கு 500 கி.மீ ஆக காணப்படும் 05-10 நிமிடம் வரையோ அல்லது கி.மீ 500வரை வேகத்தில் காற்று வீசும் அதிகளவு வேகமாயின் வீடுவாசல் பொருட் பண்டங்களுக்குப் பல அபாயத்தை ஏற்படுத்த இடமுண்டு.

8.எல்லா இடி மின்தாக்கங்களும் மரணத்தை ஏற்படுத்துவதில்லை.

.
இடிதாங்கிகள்

நல்ல இடி தாங்கியானது மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் சந்திக்க கூடியமின் அலையை தவிர்க்கவல்லது.

1.ஆமல் கிழ் மின்அலைகள் ஒன்றையொன்று சந்திப்பதால் இடிதாங்கியானது கட்டிடத்தை மின்தாக்கத்திலிருந்து விலகிச்செல்கின்றது.

2.இவ்வாறான இடி தாங்கிகளையும் ஏனையபொருத்தப்பட்ட மின்கம்பிகளையும் சேதமடையாது பாதுகாத்தல் அவசியம்.

மின்சார இலக்ரோனிக் உபகரணங்களைப் பாதுகாத்தல்

1.மின் தாக்கத்தால் விரைவாகமின் இலத்திரனியல் உபகரணங்கள் கணனிஆகியவை இலகுவாக பாதிப்படையலாம்.

2.Surge Protector முலமாகமின்உபகரணங்களைபாதுகாக்கலாம். இவற்றை பொருத்துபவர் நன்று பயிற்சியூள்ளவல்லுனராயிருத்தல் அவசியம்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.