அசைவம் சாப்பிடும் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு வகை மீன். மீனின் சுவைக்கு அனைவரது நாக்கும் அடிமை.
மீனில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. மீனில் உள்ள புரோட்டின், மல்டி விட்டமின்ஸ் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, அயோடின், மெக்னீசியம், ஒமேகா 3 இவை அனைத்தும் நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
இவ்வளவு நன்மைகள் நிறைந்த மீனை தொடர்ந்து சாப்பிடக்கூடாது. வாரத்திற்கு 2 முறை சாப்பிடலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீன் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகளவு சுரக்கும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நெத்திலி மீன் சாப்பிடக்கூடாது.
- குழந்தைகளுக்கு உணவில் மீன் அதிகமாக சேர்த்து வர ஆஸ்துமா நோயை வரவிடாமல் தடுக்கலாம். ஆஸ்துமாவில் பாதிக்கப்பட்டோர் மீனை உண்டு வந்தால் அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.
- மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் உள்ளது. இதனால் நம் கண் பார்வை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். கண்பார்வை பாதிக்கப்பட்டவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பாதிப்பு குறையும்.
- எலும்பின் உறுதிக்கு மீனில் வைட்டமின் டி சத்து நிறைந்துள்ளது. இதனால் டயட்டில் உள்ளவர்கள் இந்த உணவினை சேர்த்துக் கொள்ளலாம். நாம் உண்ணும் உணவில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சி, நம் எலும்பு வளர்ச்சியை ஆரோக்கியமாக்க இந்த விட்டமின் டி அவசியமாக நம் உடலுக்குத் தேவைப்படுகிறது.
- ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மீனில் அதிகம் உள்ளதால் இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் அடைப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குறைக்கப்படுகின்றன. நம் இதயத்தை இந்த ஒமேகா-3 கொழுப்பு பாதுகாக்கிறது. மீனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் இதயம் ஆரோக்கியமாக இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
- மூட்டுவலி உள்ளவர்கள், மூட்டில் வீக்கம் உள்ளவர்கள், மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது விரைவில் குறைய ஆரம்பித்துவிடும்.
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் இந்த நோய் தடுக்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக்கப் படுகிறது.
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்கு சென்று அவர்களின் பார்வையை சீராக வைக்கிறது. தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் தன்மையும் மீன் உண்பதால் கிடைக்கிறது.