Sunday, January 19, 2025
Homeகல்விசுற்றாடல்மண்ணின் முக்கியத்துவம் மற்றும் மட்பாதுகாப்பு

மண்ணின் முக்கியத்துவம் மற்றும் மட்பாதுகாப்பு

- Advertisement -

மண்

- Advertisement -

புவி மேற்பரப்பிலே பாறை அசேதனக்கூறுகளான கல் மணல் பரல்கள் மண்டி  சேறு ஆகியனவும்  சேதனக்கூறுகளான தாவர விலங்குகளின் சிதைவுகளும் நுண்துனிக்கைகளாக கலந்து புவிமேற்பரப்பில் குவிந்து காணப்படுகின்றப்போது அதுவே மண் எனப்படுகின்றது.

kidhours

- Advertisement -

மண் உருவாக்கக்காரணிகள்

- Advertisement -

மண் உருவாக்கத்தின் அடிப்படையாக விளங்குவது தாய்பாறை ஆகும்.

மூலப்பாறைகளே நீண்டகால அடிப்படையில் வாளிலை அழிதலுக்குட்பட்டு சிதைவடைந்து மண்ணை தோற்றுவிக்கின்றது.

தாய்பாறையின் இயல்பிற்கு ஏற்ப உருவாகின்ற மண்ணின் பௌதீக இயல்புகளும் தீர்மானிக்கப்படுகின்றன. தாய்பாறையானது வன்பாறைகளாக இருக்கின்றப்போது மண் உருவாக்கம் குறைவாக

இடம்பெருவதோடு மென்பாறையாக உள்ளப்போது மண் உருவாக்கம் விறைவாக இடம்பெருகின்றமையூம் குறிப்பிடத்தக்கது.

மண் உருவாக்கத்தில் பிரதான இடம்பெரும் பௌதீம காரணியான  காலநிலையைக் குறிப்பிட முடியும் .

காலநிலை முலகங்களான வெப்பநிலை, மலைவீழ்ச்சி, அமுக்கம், காற்று முதலியனவும்  அவற்றில் தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்களும் மண் உருவாக்கத்திற்கு காரணங்கள் ஆகும்.

குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் உயர் வெப்பநிலை நிலவுகின்ற போது கற்பாறைகள் பௌதீக முறையில் சிதைவடைந்து மண்ணை தோற்றுவிக்கின்றன அதேப்போல் மழைவீழ்ச்சி அதிகமாக இடம்பெறும் பகுதிகளிலே பாறைகள் இரசாயன முறை அழிவு , படிதல் ஆகியவற்றுக்கு உட்பட்டு மண்ணை சேர்ந்து விடுகின்றன.

பாறைகளின் தோற்றக்காலமும்  காரணமாகும்.

மண் உருவாக்கத்திற்கு நீண்டகாலம் அவசியம். தாய்ப்பறை அசேதனப்பொருட்கள் நுண்கூறுகளாகி அவற்றுடன் சேதன சிதைவூகளும் சேர்ந்து முதுர்ச்சியடைந்து மண் உருவாக்கத்திட்கு பல்லாயிரம் ஆண்டுகள் எடுக்கின்றன. ஆகவே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய பாறைகள் காணப்படும் பகுதிகளிலே உயர் மண்ணுருவாக்கமும் அண்மை காலத்தில் தோன்றிய பாறைகள் காணப்படும் பிரதேநங்களில் மண்ணுருவாக்கம் குறைவாகவும் இடம் பெருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தரைத்தோற்றமும் ஒரு காரணமாக அமைகின்றது.

மண்ணுருவாக்கத்தில் செல்வாக்குச்செலுத்தும் காரணிகளில் தரைத்தோற்றத்துக்கு முக்கியப்பங்கு உண்டு. சாய்வு  நிலப்பகுதிகளிளே விரைந்து தொழிற்படுகின்ற ஓடும்நீர்,வீசும் காற்று, கடலலை, பணிக்கட்டியாறு ஆகியன பாறைகளை விரைவாக சிதைவூ படுத்தி மண்ணுருவாக்கத்தை துண்டுகின்றது. சமநிலப்பகுதிகளிளே மண்ணுருவாக்கமானது நீண்டகால அடிப்படையில் இடம்பெருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாவர விலங்குகளின் செயற்பாடு
பாறைகள் மீது முளைக்கின்ற தாவரங்கள் அவற்றை ஊடுருவி வேர்விட்டு அளவில் பெருக்கின்றப்போது பாறைகள் சிதைந்து மண்ணுருவாக்கம் இடம்பெருகின்றது. மனிதன் நேரடியாகவூம் மறைமுகமாகவும்   பாறைகளை சிதைவடையச்செய்து மண்ணுருவாக்கத்தில பங்கு கொள்கின்றன்.

தாவர,விலங்குகளின் அசேதன மூலக்கூறுகள் சிதைந்து மண்ணிற்கு நிறத்தையூம், வளத்தையும்  ஊட்டி முதிர்ச்சி அடைந்த மண் உருவாக்கத்திட்கு காரணமாகின்றன.

நீர் மற்றும் வடிகாலமைப்பு

மழைவீழிச்சியினால் பாறைகளுக்கு நேரடியாக கிடைக்கும் நீரினாலும், மேற்பரப்பில் வழிந்தோடுகின்ற நீரினாலும் பாறைகள் அரிப்பிற்கு உட்பட்டு மண் உருவாக்கம் இடம்பெருகின்றது. அத்துடன் ஒடும் நிரானது பாறைகளில் உள்ள பதார்த்தங்களை இரசாயன தாக்கத்திட்கு உட்படுத்தி சிதைத்து  அழிக்கின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

மண் மாசடைவற்கான கரணங்கள்

காடுகளை அழித்தல்-

காடுகளை அழிப்பதனால் மண்ணானது சூரியவெப்பம் மற்றும் மழையினால் நேரடியாக பாதிக்கப்படுவதோடு மண் அரிப்பிட்கு உள்ளாகின்றது. இதனால் மண் தரிசாக மாறுமின்றது.

வேளாண்மை நடவெடிக்கைகள்

செயற்கை இரசாயன பொருட்களின் பயன்பாடு பெருகுவதனால் அவை நிலத்தில் ஊடுருவி நிலத்தின் இயற்கை தன்மையை பாதிப்படையச்செய்கின்றது.

சுரங்கச்செயற்பாடுகள்

சுரங்கங்களை அமைப்பதால் புவி மேற்பரப்பிட்கு அடியில் நில இடைவெளியை உருவாக்குகின்றன. இவை பேரபத்தை உண்டாக்குகின்றன.

கழிவுகளை  கொட்டுதல்

பிளாஸ்டிக் போன்ற உக்காதப்பொருட்களை குழி தோன்டி நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இதனால் மண் மாசடைகின்றது.

தெழிற்சாலைகளின் பெருக்கம்

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மண்ணுடன் கலப்பதால் மண் மாசடைகின்றது.

கழிவு  நீர் சுத்திகரிப்பு

கழிவு நீரில் இருந்து வெளியேறும் திண்மக் கழிவுகள் மண்ணில் புதைப்பதனால் மண் மாசடைகின்றது.

இரசாயன மற்றும் அணுஉலைகள்

இரசாயன மற்றும் அணுஉலைகளில் இருந்து வெளியேறும் வேதியியல் மற்றும் கதிரியக்கக்கழிவுகள் மண்ணில் புதைக்கப்படுகின்றன. இதனால் மண் மாசடைகின்றன.

மண் மாசடைவதால் ஏற்படும் விளைவுகள்

1.மண்ணின் தன்மை மாறுப்படும்

2.பருவ நிலை மாறுப்பாடுகள் ஏற்படும்.

3.காற்று அசுத்தமடையூம்.

4.மனித நலம் பாதிக்கப்படும்.

5.விலங்குகளுக்கு பாதிப்பேற்படும்.

மண் மாசடைவதை தடுக்கும் வழிகள்

1.கழிவுப்பெருட்களின் மறுசுழற்சி, மறுபயன்பாடு, கழிவுப்பொருட்களை குறைத்தல் பேன்றவற்றைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புனர்வை ஏற்படுத்துதல்.

2.விவசாயத்திற்கு பசலைகள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை தவிர்த்து இயற்கை உரம், இயற்கை பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றைப்பயன்படுத்துவதோடு இயற்கை விவசாயம் செய்ய வலியுறுத்தல் அவசியம்.

3.பெழுத்தீன் பெருட்கள் பாவனையை தவிர்க்க வேண்டும்.

4.கழிவுகளை சரியான முறையில் அகற்ற வேண்டும்.

5.அதிகமாக உக்கும்பொருட்களை உபயோகிக்க வேண்டும்.

மட்காப்பின் முக்கியத்துவம்

மேற்பரப்பு வளமான மண்ணை பாதுகாப்பதன் மூலம் விவசாய நடவெடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடிதல்.

மண்ணை பாதுகாப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

மட்பாதுகாப்பினூடேஏற்படும் இயற்கை அனர்த்தங்களையூம் அவற்றால் ஏற்படும் பாதிப்புக்களையும் குறைத்துக்கொள்ளமுடியும்.

1.தரைத்தோற்றத்தில் ஏற்படும் ஒழுங்கற்ற மாற்றயூகளை தடுக்க முடியும்.

2.மேற்பரப்பு மண்ணை பாதுகாப்பதன் மூலம் மண்வாழ் உயிரினங்கள்இதாவரங்களின் நிலைத்தலை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.