Friday, November 22, 2024
Homeகல்விமனித சுவாசத்தொகுதி

மனித சுவாசத்தொகுதி

- Advertisement -

சுவாசத் தொகுதி
அங்கிகள் சக்தியைப் பெற கலச்சுவாசத்தில் ஈடுபடுகின்றன. இதற்காக வாயுப்பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றன. சுவாச செயற்பாட்டிற்காக வாயுப்பரிமாற்றம் இடம்பெறும் மேற்பரப்பு சுவாச மேற்பரப்பு எனப்படும்.
வாயுப்பரிமாற்றம் பௌதீகப்பரவல் மூலம் இடம்பெறும்.

- Advertisement -

1.சுவாச மேற்பரப்பின் இயல்புகள்
2.மெல்லியதாகக் காணப்படல்.
3.ஈரலிப்பாகக் காணப்படல்.
4.உயர்ந்தளவு மேற்பரப்பை கொண்டிருத்தல்.
5.போதுமான குருதி விநியோகத்தை கொண்டிருத்தல்.
(ஈரலிப்பாகக் காணப்படுவதன் மூலம் வாயுக்கள் கரைந்த நிலையில் கடத்தப்படும்.)

suvasa-thokuthi

- Advertisement -

மூக்குக் குழி
ஆப்பு வடிவானது. பிரிசுவரொன்றால் பிரிக்கப்பட்டிருக்கும். நடுப்பகுதி போலிப்படை கொண்ட மேலணியாலும், ஏனையவை பிசிர்க்கம்ப மேலணியினாலும் ஆனவை. சீத மென்சவ்வால் போர்த்தப்பட்டது. அண்ணத்தின் மூலம் வாய்க் குழியிலிருந்து பிரிக்கப்படும். பின்வரும் தொழில்களை ஆக்கும்.

- Advertisement -

பிசிர், மயிர், சீதச்சுரப்பியின் உதவியுடன் தூசு, பற்றீயாக்களை அகற்றல்.
சுருள் என்பின் மூலமும், அதிக குருதி விநியோகத்தை கொண்டிருப்பதன் மூலமும் வளியை உடல் வெப்பநிலைக்கு மாற்றும்.
சீதச் சுரப்பிகளின் உதவியுடன் வளியை ஈரமாக்கலில் ஈடுபடும்.
மண நுகர்ச்சி வாங்கிக் கலங்கள் மூலம் மண நுகர்ச்சியில் ஈடுபடல்.

தொண்டை
12 – 14cm நீளமானது. உணவு, சுவாசப் பாதைக்கு பொதுவானது. இது 3 பகுதிகளைக் கொண்டது.

1.வாய்த் தொண்டை
2.குரல் வளைத் தொண்டை
3.மூக்குத் தொண்டை
4.வாய்த் தொண்டை
5.மெல்லண்ண மட்டம் தொடக்கம் 3ம் கழுத்து முள்ளென்பு மட்டம் வரை காணப்படும்.

suvasa-thokuthi

குரல் வளைத் தொண்டை
3ம் கழுத்து முள்ளென்பு மட்டம் தொடக்கம் 6ம் கழுத்து முள்ளென்பு மட்டம் வரை காணப்படும்.

மூக்குத் தொண்டை
ஊத்தேக்கியாவின் குழாயுடன் தொடர்புடையது.

குரல்வளை
3ம் கழுத்து முள்ளென்பு மட்டம் தொடக்கம் 6ம் கழுத்து முள்ளென்பு மட்டம் வரை காணப்படும். குரல் நாண் கசியிழையங்களைக் கொண்டது. 4 வகைக் கசியிழையங்கள் காணப்படும்.

1.கேடயப் போலிக்கசியிழையம்
2.துடுப்புக் கசியிழையம்
3.வளையுருக் கசியிழையம்
4.மூச்சுக் குழல் வாய்மூடி
முதல் 3 வகை கசியிழையங்களும் பளிங்குருக் கசியிழையத்தினாலும், மூச்சுக் குழல் வாய்மூடி மஞ்சள் நார்க் கசியிழையத்தினாலும் ஆனது. பின்வரும் தொழில்களைப் புரியும்.

1.குரல் நாண்களைக் கொண்டு ஒலி எழுப்பல்
2.வளி, உணவு செல்வதை கட்டுப்படுத்தல்
3.வளியை ஈரமாக்கலும், வெப்பப்படுத்தலும்

வாதனாளி
10 – 11cm நீளமானது. 2.5cm விட்டமுடையது. களத்திற்கு முன்பாகக் காணப்படும். ” c ” வடிவ கசியிழையங்களால் வலிமையூட்டப்பட்டிருக்கும். இக்கசியிழையங்கள் முற்புறம் முழுமையானது. 6ம் கழுத்து முள்ளென்பு மட்டம் தொடக்கம் 5ம் நெஞ்சறை முள்ளென்பு மட்டம் வரை காணப்படும்.

சுவாசப்பைக் குழாய்
5ம் நெஞ்சறை முள்ளென்பு மட்டத்தில் வாதனாளி இரண்டாகப் பிரிவதால் உருவாகும். வாதனாளியை ஒத்தது. ஆனால், முழு வளையக் கசியிழையங்கள் காணப்படும்.

சுவாசப்பை சிறு குழாய்
சுவாசப்பை சிறு குழாயானது இரு வகைப்படும்.

கடத்தலிற்குரிய சுவாசப்பை சிறுகுழாய்
சுவாசத்திற்குரிய சுவாசப்பை சிறுகுழாய்

சிற்றறைகள்
தனிக்கலத் தடிப்புடையது. எளிய செதின் மேலணியால் ஆனது. இடையிடையே பெருந்தின் கலங்கள் காணப்படும். இது நுண்ணங்கிகளை அழித்து சிற்றறைத் தொற்றலிலிருந்து பாதுகாக்கும். ஏறத்தாழ 700 மில்லியன் சிற்றறைகள் காணப்படும். இவற்றின் பரப்பளவு ஏறத்தாழ 70 தொடக்கம் 90 சதுரமீற்றர்கள் ஆகும்.

சிற்றறையில் சேஃபெற்றான் சுரக்கப்படும். இது Phospo lipid, Lipio protein ஐ கொண்டது. சிற்றறை சிதைவிலிருந்தும், பற்றீரியத் தொற்றுக்களிலிருந்தும் பாதுகாக்கும். மேற்பரப்பிழுவையை 1/ 10 மடங்கால் குறைக்கும். வளி, திரவ அவத்தையில் ஒட்சிசன், காபனீரொட்சைட்டு இலகுவாக பரிமாற்றமடைய உதவும். வெளிச் சுவாசத்தின் போது சிற்றறைகள் ஒட்டிக்கொள்வதிலிருந்து பாதுகாக்கும். முளைய நிலையில் 5 மாத முடிவிலேயே சேஃபெற்றான் சுரக்கப்படும்.

சுவாசப்பைகள்
நெஞ்சறைக் குழியில் நடுக்கோட்டிற்கு இருபுறமும் பக்கத்திற்கொன்றாக காணப்படும். சுவாசப்பைகளின் நடுக்கோட்டுப்பகுதியிலுள்ள மணிப்புள்ளியினூடாக குருதிக்கலன், நரம்புகள், நிணநீர்க்கலன் என்பன செல்லும். கூம்பு போன்ற தோற்றமுடையது. நுரையீரல்கள் கடற்பஞ்சு போன்று காணப்படும்.

சுவாச தொழிற்பாடு
சுவாசத் தொழிற்பாடு நான்கு படிகளைக் கொண்டது.

1.சுவாசப்பைகளின் காற்றூட்டல்.
2.புறவாயுப் பரிமாற்றம்.
3.அகவாயுப் பரிமாற்றம்.
4.கலச்சுவாசம்.
5.சுவாசப்பைகளின் காற்றூட்டல்
6.சுவாச ஊடகத்தை சுவாச மேற்பரப்பை நோக்கியும், விலத்தியும் அசைய செய்கின்றன். வட்ட ஒழுங்கில் நடைபெறும் செயற்பாடு சுவாச வட்டம் எனப்படும்.

சுவாச வட்டத்தில் மூன்று அவத்தைகள் காணப்படும்.

இச்செயற்பாடானது நிமிடத்திற்கு 12-16 தடவைகள் நடைபெறும்.

சுவாச வட்டம்
சுவாசத் தொழற்பாட்டின் ஒருங்கிணைப்பாளராக வரோலியின் பாலம் காணப்படுகின்றது. காபனீரொட்சைட்டின் செறிவை உணரக்கூடிய இரசாயன வாங்கிகள் காணப்படும்.

1.தொகுதியுடல்
2.சிரசுடல்
3.பரிவகக்கீழ் வாங்கி

உட்சுவாசம்
தொகுதியுடல், சிரசுடல் என்பன சுற்றயலிற்குரிய இரசாயன வாங்கிகளாகும். பரிவகக்கீழ் வாங்கியானது மூளைக்குறிய இரசாயன வாங்கியாகும். குருதியில் காபனீரொட்சைட்டின் செறிவு அதிகரிக்க pH பெறுமதியானது குறைவடையும். இது இரசாயன வாங்கிகளால் உணரப்பட்டு நாவுரு தொண்டை நரம்பினூடாக உட்சுவாச மையத்திற்கு கடத்தப்படும்.

உட்சுவாச மையத்திலிருந்து கட்டளைகளானது பின்வரும் பகுதிகளுக்கு
கடத்தப்படும்.

பிரிமென்றகடு – பிரிமென்றகட்டு நரம்பினூடாக.
பளுவுக்குறிய தசைகள் – பளுவுக்குறிய தசை நரம்பினூடாக.
பிரிமென்றகட்டின் மத்திய பகுதியில் ஆரைவழித்தசைகள் சுருங்குவதால் பிரிமென்றகடு தட்டையாகும். இதன் கனவளவானது நிலைக்குத்தச்சில் கூடும்.

பளுவுக்கிடையிலான தசைகள் சுருங்குவதால் விலா என்புகள் முதலாம் சோடி விலா என்பை நோக்கி மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் அசையும். இதன் கனவளவானது முன்பின்னாகவும், பக்கம் பக்கமாகவும் அசையும்.

மார்பறையில் கனவளவு கூட புடைச்சவ்வு மார்பறையின் சுவரை நோக்கி இழுக்கப்படும். தொடர்ச்சியாக மாற்றத்தை எதிர்க்க முடியாத சுவாசப்பைகள் விரிவடையும். கனவளவு கூடி அமுக்கம் குறைய வளி உள்நோக்கி அசையும். இது ஒரு உயிர்ப்பான செயற்பாடாகும்.

வாயுப்பரிமாற்றம்
வெளிச்சுவாசம்
அதிகரித்த உட்சுவாசம் இழுவை வாங்கிகளால் உணரப்படும். அலையு நரம்பு முனைவழிவிற்கு உட்படுவதால் உருவாக்கப்படும் கணத்தாக்கம் அலையுநரம்பினூடாக வெளிச் சுவாச மையத்திற்கு கடத்தப்படும். கட்டளைகள் பளுவுக்கிடையிலான தசைகளிற்கு அனுப்பப்படும். விலா என்புகள் நிறை காரணமாக ஆரம்ப நிலையை அடையும். வெளிப்பளுவிற்கிடையிலான தசைகள் தளர்வதால் விலா என்புகள் கீழ்நோக்கியும், உள்நோக்கியும் அசையும். வயிற்றறையின் அமுக்கத்தினால் பிரிமென்றகடு மேல் நோக்கி தள்ளப்படும். நெஞ்சறையின் கனவளவு குறைவதால் அமுக்கம் அதிகரிக்கும். இது வளிமண்டல அமுக்கத்தை விட அதிகமாகையால் வளி வெளிச்சுவாசப் பாதையினூடாக வெளியே செல்லும். இது ஒரு மந்தமான(உயிர்ப்பற்ற) செயற்பாடாகும்.

ஒட்சிசன் கடத்தப்படல்
ஒட்சிசனானது ஈமோகுளோபினுடன் இணைந்த நிலையில் 97சதவீதமாகவும், குருதியுடன் கரைந்த நிலையில் 3 சதவீதமாகவும் காணப்படும். ஒட்சிசனானது ஈமோகுளோபினுடன் இணைந்து பின்வருமாறு ஒட்சி ஈமோகுளோபின் எனும் சிக்கல் தோற்றுவிக்கப்படுவதன் மூலம் கடத்தப்படும்.
eLepiyahd pH, குறைந்த வெப்பநிலை, குறைந்த காபனீரொட்செட்டு செறிவு, அதிக ஒட்சிசன் செறிவு ஆகிய நிபந்தனைகளின் கீழ் முன்முகத்தாக்கம் ஊக்குவிக்கப்படும். ஒரு லீற்றர் குருதியில் ஏறத்தாழ 500அட ஒட்சிசன் கடத்தப்படும்.

காபனீரொட்சைட்டு கடத்தப்படல்

காபனீரொட்சைட்டானது 3 வழிகளில் கடத்தப்படும்.

திரவவிழையத்தில் கரைந்த நிலையில்
HCO3- அயன்களாக செங்குழியங்கள் மூலம்
Carbomyl Heamoglobin Mf

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.