Tuesday, January 28, 2025
Homeபொழுது போக்குமணி பிளாண்டினை இந்த திசையில் வைத்தால் துரதிர்ஷ்டம்! தரையில் வைத்தால் என்ன நடக்கும்? மக்களே...

மணி பிளாண்டினை இந்த திசையில் வைத்தால் துரதிர்ஷ்டம்! தரையில் வைத்தால் என்ன நடக்கும்? மக்களே உஷார்…!

- Advertisement -
moneyplant-growing-tips-kidhours
moneyplant-growing-tips-kidhours

வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை கொண்டுவரும் வழிகளில் ஒன்றுதான் சில வாஸ்து செடிகளை வீட்டிற்குள் வளர்ப்பதாகும்.

- Advertisement -

வீட்டில் வளர்க்கும் செடிகளில் முக்கியமான ஒன்று மணி பிளாண்ட் எனப்படும் சிறியவகை செடி ஆகும்.

இந்த செடியை வீட்டில் வளர்ப்பது உங்கள் வீட்டின் செல்வத்தின் நிலையை அதிகரிக்கும். ஆனால் இந்த செடியை வளர்க்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் இதனை சரியாக வளர்க்கவில்லை என்றால் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

- Advertisement -

இந்த பதிவில் மணி பிளாண்ட்டை எப்படி வளர்க்கக்கூடாது என்று பார்க்கலாம்.

காய்ந்து போக விடக்கூடாது

மணி பிளாண்ட்டிற்கு தொடர்ச்சியாக தண்ணீர் விடுவதும், அதன் இலைகளை சீராக கத்தரிப்பதும் அவசியமான ஒன்றாகும். வாடிய மணி பிளாண்ட் செடிகள் உங்கள் வீட்டின் நிதிநிலையை மோசமாக்கும். உங்கள் மணி பிளாண்ட்டை சீராக பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

மணி பிளாண்ட்டின் திசை

மணி பிளாண்ட் ஒருபோதும் வடகிழக்கு திசையில்வைக்கப்படக்கூடாது. இது உங்கள் வீட்டின் நிதி நிலையை மட்டும் பாதிக்காது, மாறாக இது உங்கள் ஆரோக்கியத்தையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

தரையில் வைக்கக்கூடாது

உங்கள் மணி பிளாண்ட் அதிகமாக வளர்ந்து விட்டால், அதனை சீராக நறுக்க வேண்டும். ஆனால் அதன் இலைகள் மற்றும் தண்டுகள் தரையில் விழக்கூடாது. அவ்வாறு இது தரையில் விழுவது புனிதமற்ற செயலாக கருதப்படுகிறது.

money-plant-kidhours
money-plant-kidhours
தென்கிழக்கு திசை

எப்போதும் மணி பிளாண்ட் உங்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் வைக்கப்பட வேண்டும். இதுதான் பிள்ளையாருக்கு மிகவும் பிடித்த திசையாகும். இந்த இடத்தில் இதனை வைப்பது உங்கள் வீட்டிற்கு ஆரோக்கியம், செழிப்பு மற்றும் அமைதியை கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

செல்வம் அதிகரிக்கும்

மணி பிளாண்ட் உண்மையில் பணத்தை குறிக்கிறது. இது எவ்வளவு பசுமையாக இருக்கிறதோ உங்கள் வீதி அவ்வளவு செல்வம் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எவ்வளவு இலைகள் இருக்கிறதோ அவ்வளவு நல்லது.

ஆற்றலை அதிகரிக்கும்

மணி பிளாண்ட்டிற்கு என வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய இடமுள்ளது. பசுமையான, ஆரோக்கியமான மணி பிளாண்ட் வீட்டை சுற்றி நேர்மறை ஆற்றலை பரவச்செய்கிறது. மேலும் இது பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.