latest world kids news சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் மனிதகுலம் இந்த பூமியில் ஆபத்தின்றி உயிர்வாழ்வதை உறுதி செய்யும் முயற்சியிலும், பிரபஞ்சத்தின் ரகசியங்களை அவிழ்க்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர். இருப்பினும் பிரபஞ்சத்தில் இருக்கும் பல பொருட்களால் பூமிக்கு பல ஆபத்துகள் உள்ளன.
மேலும் asteroids என்று குறிப்பிடப்படும் சிறுகோள்கள் நாம் வாழ்ந்து வரும் பூமியை அழிக்கும் சக்தியை கொண்டிருப்பதால் அவை மிகவும் அழிவுகரமானவையாக பார்க்கப்படுகின்றன. நாசாவின் சமீபத்திய தகவலின் படி, பெரிய அளவிலான ஒரு சிறுகோள் வரும் ஜனவரி 18, 2022 அன்று பூமியை நோக்கி வரும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை (Empire State Building) விட 2.5 மடங்கு உயரமுள்ள அந்த சிறுகோள் (asteroid) இந்த மாதம் பூமியை கடக்க உள்ளதாக நாசா தகவல் தெரிவித்து உள்ளது. Earthsky.org-ன் அறிக்கை படி, இந்த சிறுகோள் அதன் அளவு (சுமார் 3,280 அடி) காரணமாகவும், பூமிக்கு மிகவும் நெருக்கமான தொலைவில் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளதாலும் இது அபாயகரமான சிறுகோள் என நாசாவால் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரத்தை விட இரண்டரை மடங்கு பெரியதாக இருக்கும் இந்த சிறுகோளின் தற்போதைய நகர்வில் ஒரு சிறிய மாற்றம் நிகழ்ந்தால் கூட அது பூமியில் மோதுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
சிறுகோள்கள் என்பவை வால் நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும் விண்வெளியில் உள்ள பெரிய பாறைகள் ஆகும். இவை சூரியனை சுற்றி வருகின்றன, மேலும் கிரகங்களின் ஈர்ப்பு விசையால் அவ்வப்போது அவற்றின் சுற்றுப்பாதைகள் மாறும். இந்த விண்வெளிப் பாறைகள் ஏதேனும் ஒரு கிரகத்துடன் மோதும் போது அது பேரழிவாகும். அதனால்தான், 150 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்ட ஒரு சிறுகோள் பூமியை நெருங்கினாலும், நாசா அதை அபாயகரமான சிறுகோள் என்று வகைப்படுத்தி அதை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது.
இருப்பினும் (7482) 1994 PC1 என பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் நம் கிரகத்தை பாதுகாப்பாக கடந்து செல்லும், பயப்பட தேவை இல்லை என்றே விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள்.
தற்போது அபாயகரமானது என்று வகைப்படுத்தப்பட்டு உள்ள இந்த சிறுகோள் ஆஸ்திரேலியாவில் உள்ள சைடிங் ஸ்பிரிங் ஆய்வகத்தில் (Siding Spring Observatory) கடந்த ஆகஸ்ட் 9, 1994 அன்று ராபர்ட் மெக்நாட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. EarthSky-யின் கூற்றுப்படி இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும் நேரம் ஜனவரி 18, 2022 அன்று மாலை 4:51 மணிக்கு EST (21:51 UTC) அதாவது இந்திய நேரப்படி ஜனவரி 19 காலை 3.21 மணிக்கு நிகழும். இந்த சிறுகோள் பூமியுடன் ஒப்பிடும் போது மணிக்கு 43,754 மைல்கள் (வினாடிக்கு 19.56 கிலோமீட்டர்) வேகத்தில் நகர்கிறது.
பூமியிலிருந்து 1.2 மில்லியன் மைல்கள் (1.93 மில்லியன் கிமீ) அல்லது பூமி-சந்திரன் தூரத்தை விட 5.15 மடங்கு தூரத்தில் கடந்து செல்லும். இந்த தொலைவு பாதுகாப்பானது என்றாலும் கூட தொலைநோக்கி மூலம் கவனிப்பது சற்று கடினம் என கூறப்படுகிறது. விரைவில் பூமியை கடக்க உள்ள சிறுகோள் (7482) 1994 PC1 தவிர வேறு பல சிறுகோள்களும் ஜனவரி மாதத்தில் பூமியை கடக்க வாய்ப்புள்ளது. 5 சிறுகோள்கள் பூமியை நோக்கி வரவுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
kidhours – Latest World Kids News , #kidhours , Latest World Kids News tamil, Latest World Kids News update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.