Latest Tamil News Nobel Prize for Health
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. 2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ், ஆர்டம் படபூட்டியன் உள்ளிட்ட இருவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது..
டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் படபூட்டியன் ஆகியோருக்கு “வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டுபிடித்ததற்காக” நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு, மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
kidhours – Latest Tamil News Nobel Prize for Health
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.