Latest Tamil News Kids Disaster சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தாய்லாந்தில் தற்போது பெய்து வரும் கனமழைக் காரணமாக நாடே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
தாய்லாந்து நாட்டில் பெய்து வரும் கனமழையால் அந்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க ஆயுத்தயாவில் பல கோவில்கள் நீருக்குள் சென்றுவிட்டன. இது குறித்து வெளியான தகவலானது, நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க பழமையான,ஆயுத்தாயா நகரமானது நீருக்குள் மூழ்கியுள்ளது.
இதனால் அந்த நகரில் உள்ள 40 க்கும் மேற்பட்ட கோயில்கள் பலத்த பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த வெள்ளமானது தாய்லாந்து சந்தித்த மிகவும் மோசமான நிகழ்வாகும். மேலும் கனமழை காரணமாக 32 மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 9 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் இருப்பிடத்தை விட்டே சென்றுவிட்டனர்” இவ்வாறு தகவல்கள் வெளியாகின.

காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.
kidhours – Latest Tamil News Kids Disaster
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.