Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ 17 பேர் பலி Fuel Tank Fire

எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ 17 பேர் பலி Fuel Tank Fire

- Advertisement -

Fuel Tank Fire சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இந்தோனேசியாவில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் இதுவரையில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப்பெரிய எரிபொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது.

- Advertisement -

அந்த நாட்டிற்கான ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 25 சதவிகிதம் இங்கிருந்து தான் விநியோகிக்கப்படுகிறது.

- Advertisement -

இவ்வாறான நிலையில், இந்த சேமிப்பு கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர தீ விபத்தில் சேமிப்பு கிடங்கில் இருந்த எரிபொருள் தீப்பற்றி எரிந்தது.

இந்த நிலையில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்து 52 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 250-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கனமழை காரணமாக எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் மின்னல் தாக்கியதில் தீ பிடித்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

 

Kidhours – Fuel Tank Fire

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.