Latest Tamil Kids Science News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மனித உடலில் இருந்து எடுத்த ரத்த மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை நெதர்லாந்து விஞ்ஞானிகள் முதன்முறையாக கண்டறிந்துள்ளனர்.
விஞ்ஞானிகள் ஆய்வு செய்த ரத்த மாதிரிகளில் கிட்டத்தட்ட 50 சதவீத மாதிரிகளில் குளிர் பானங்கள் அடைத்து விற்கப்படும் பெட் பாட்டில்களின் நுண்துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக சர்வதேச சுற்றுச்சூழல் அறிவியல் பத்திரிக்கையில் அவர்கள் ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 22 ரத்த மாதிரிகளில் சுமார் 80 சதவீத மாதிரிகளில் எதோ ஒரு வகையான பிளாஸ்டிக் கழிவு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிளாஸ்டிக் கழிவுகள் காற்று , குடிநீர், உணவு மூலம் உடலுக்குள் புகுந்திருக்கலாம் என தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், டூத் பேஸ்ட், லிப் கிளாஸ், டேட்டூவுக்கு பயன்படுத்தப்படும் மை உள்ளிட்ட பொருட்கள் மூலமும் ரத்தத்தில் கலந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர்.
kidhours – Latest Tamil Kids Science News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.