Latest Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகில் முதல் தடவையாக பறக்கும் டாக்ஸிகளுக்கான விமான நிலையமொன்றை பிரித்தானியா அறிமுகம் செய்துள்ளது.
பறக்கும் டாக்ஸிகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் என்பனவற்றுக்காகவே இந்த விசேட விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொவென்ட்ரி நகர நிர்வாகத்துடன் இணைந்து இந்த விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
முழு அளவில் இயங்கும் இந்த விமான நிலையம் vertiport” என அழைக்கப்படுகின்றது.

எயார் டெக்ஸிகளில் ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு நகர்வதற்கு இந்த விமான நிலையங்கள் எதிர்வரும் காலங்களில் பயன்படுத்தப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எயார் டாக்ஸிகளின் பயன்பாடு இன்னமும் பரீட்சார்த்த அடிப்படையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எயார் டாக்ஸி பயன்பாட்டுக்கு இன்னமும் அரசாங்கங்கள் அனுமதி வழங்கவில்லை. உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பறக்கும் டாக்ஸிகளை அறிமுகம் செய்வதற்கு பல ஆண்டுகளாகவே முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.