Sunday, January 19, 2025
Homeசிறுவர் செய்திகள்விண்வெளியிலும் விடாமல் உடற்பயிற்சி செய்யும் விண்வெளி Latest Tamil Kids News Workout in Space

விண்வெளியிலும் விடாமல் உடற்பயிற்சி செய்யும் விண்வெளி Latest Tamil Kids News Workout in Space

- Advertisement -

Latest Tamil Kids News Workout in Space சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

தொற்றுநோய் பரவல் காரணமாக, பெரும்பாலானோர் வீட்டிலேயே முடங்கி இருந்த நிலையில், பலருக்கு உடல்பயிற்சி செய்வது, வாக்கிக் போவது  ஆகியவை மறந்தே போ விட்டது எனலாம். நம் வாழ்க்கையில் சோம்பல் ஆக்கிரமித்துள்ளது எனலாம். இதனால, கொரோனாவை காரணம் காட்டி படுக்கையிலே குடங்கி கிடக்கிறோம்.
அப்படிப்பட்ட நிலையில் உங்கள் வழக்கமான உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை  மீண்டும் தொடங்க இந்த வைரல் வீடியோ உத்வேகம் தரும்.

Latest Tamil Kids News Workout in Space
Latest Tamil Kids News Workout in Space

ஒரு பிரெஞ்சு விண்வெளி வீரர் விண்வெளியில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஆமாம், விண்வெளி வீரர்  எங்கிருந்தாலும், பிட்னஸுக்கு தான் முன்னுரிமை அளிக்கிறார் என்பதி இந்த வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது.  வைரல் வீடியோவில்  சர்வதேச விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட், உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்தி, கடுமையாக உடற் பயிற்சி செய்வதைக் காணலாம்.

- Advertisement -

இன்ஸ்டாகிராமில் வீடியோவ பகிர்ந்துகொண்டு, பெஸ்கெட் பிரெஞ்சு மொழியில் “Renforcement musculaire de l’espace” என்ற தலைப்பில்  பதிவு செய்துள்ளார், அதாவது “விண்வெளியில் இருந்து பாடி பில்டிங்” என்பது அதன் பொருளாகும்.

- Advertisement -

இங்கே கிளிக் செய்து வீடியோவை பார்வையிடலாம்

https://www.instagram.com/p/CT9S9CoA9rK/ 

இந்த வீடியோ சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இரு நாட்களுக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமான வ்யூஸ்களை பெற்றது, அதைத் தொடர்ந்து 134 K லைக்குகள் மற்றும் 972 கமெண்டுகள் உள்ளன. ஒரு பயனர் “Stay strong” என்று  எழுதினார், மற்றொருவர் “Respect Thomas” என்று கருத்து தெரிவித்தார். மற்றவர்கள் விண்வெளியிலும் பயிற்சி செய்யும் பெஸ்கெட்டின் அர்ப்பணிப்பைப் பாராட்டினர்.

சில வாரங்களுக்கு முன்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) ஆறு விண்வெளி வீரர்கள் ‘மிதக்கும் பீட்சா விருந்தை’ அனுபவித்து மகிழும் மற்றொரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பெஸ்கெட் பகிர்ந்துள்ளார். பீட்ஸா காற்றில் மிதக்கும் போது அதற்கான பொருட்களை சேகரித்து தயார் செய்வதை வீடியோ காட்டுகிறது!

இதுமட்டுமல்லாமல், பெஸ்கெட் அடிக்கடி விண்வெளி நிலையத்தில் இருந்து ட்வீட்களைப் பகிர்ந்து கொள்கிறார், அவரது பின்தொடர்பவர்களுக்கு ISS எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களின் வாழ்க்கையைப் பற்றியை நிலையை அறிய தகவல்களை தருகிறார்.

 

kidhours – Latest Tamil Kids News,Latest Tamil Kids News workout in space

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.