Latest Tamil Kids News Women சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடவில் ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கு ஒரு தடவை பெண் ஒருவருக்கு மாரடைப்பினால் மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பல மரணங்கள் தடுக்கப்படக்கூடியவை எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தேவையற்ற வகையில் மரணிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகில் மிகச் சிறந்த மருத்து சேவையைக் கொண்ட கனடாவில் பெண்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என இருதய நோய் நிபுணர் டொக்டர் பவுலா ஹார்வீ (Dr. Paula Harvey)தெரிவிக்கின்றார்.
டொக்டர் பவுலா றொரன்டோ மகளிர் மருத்துவ கல்லூரியின் பிரிவுத் தலைவர் என்பது குறிப்பிடத்த்ககது.
கனடாவில் பெண்கள் அதிகளவில் மரணிப்பதற்கு இருதய நோய்களே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதிக எண்ணிக்கையிலான இளம் பெண்கள் இருதய நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமண் போன்ற பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களுடன் ஒப்பீடு செய்யும் போது தற்பொழுது நாற்பதுகளைக் கொண்ட பெண்களுக்கு அதிகளவில் இரத்த அழுத்தம் ஏற்படுகின்றது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்களுக்கு ஏற்படக்கூடிய இருதய நோய்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும் என மருத்துவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
kidhours – Latest Tamil Kids News Women
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.